பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அம்மையும் அப்பனும் அருள் உருவாய அன்னையார் உடன் சீற்றம் தணிந்து திரும்பிச் சென்று சிவனிடம் முறையிடுகின்றாள். அவரோ அடிக்கத் தொடங்கி வீரபத்திரனை உண்டாக்கி யாக சாலைக்கு அனுப்புகிறார். அவன் செய்த அழிவு எல்லையற்றது (வேண்டுமாயின் அப்பன் அடித்தால் என்ற தலைப்பில் சிறிது காணலாம்.) எல்லாரையும் அழிக்க, திருமால் அவன் முன் வந்து கேட்க, 'எல்லை இல்லாதோர் பரமனை இகழ்ந்தவன் - - இயற்றும் மல்லல் வேள்வியில் அவிர்நுகர்ந்தோர்க் கெலாம் மறைமுன் சொலலும் தண்டமே புரிந்தனன்; நின்னையும் - தகைப்பான் வல்லையேல் அதுகாத்தி என்றனன் உமை மைந்தன்' (யாகம் அழி படலம் 105) என்று பதில் கூறுவதாகக் கந்த புராணம் காட்டுகிறது. திருமால் வேண்ட, சிவன் அம்மையுடன் அங்கே காட்சி தருகிறான். இங்கே அம்மையின் கருணை உள்ளத் தைக் காண்கிறோம். உமையம்மையார்தம் தந்தை தமையன்மார் உட்பட அனைவரும் மடிய, மற்றவர்களும் இல்லையாக ஒழிய, யாகசாலையே-ஏன் அந்தப் பக்கமே நிலை கெட்டிருப்பதைக் காண்கிறோம். அவள் எண்ணம் சிவனில்லா யாகத்தை நிறுத்த வேண்டும் என்பதே. ஆனால் வீரபத்திரனின் கோர தாண்டவத்தால் நிகழ்ந்த கொடுமையைக் கண்ட அவள் உள்ளத்தில் அருள் சுரக் கிறது; கருணை பிறக்கிறது. கணவனை வேண்டுகிறாள். முந்தை இவ்வேள்வி முடித்திஎண் வெஃகியதும் தந்து முடித்தாய்! தனிவிரகா அன்னையர்