பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அம்மையும் அப்பனும் பின் கண்ணபிரான் அருளால் துகில் வளர, தம்பி சோர, துரியோதனன் திகைக்க, சபையில் உள்ள-பீஷ்மன் முதலியோர்-நடுங்கச் சபதம் செய்கிறாள். 'தேவி,துரெளபதி சொல்வா ள்-ஒம் தேவி பராசக்தி ஆணை உரைத்தேன் பாவி துச்சாதனன் செந்நீர்-அந்தப் பாவி துரியோதனன் ஆக்கையின் ரத்தம் மேவிஇரண்டும் கலந்து-குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன்யான்-இது செய்யும் முன்னே முடியேன்” என்றுரைத்தாள். இங்கேயும் அவள் அன்னை பராசக்தி யின் பேரில்தான் ஆணையிட்டு உரைக்கின்றாள். அவள் தலை விரிந்தது-தரணி நலிந்தது-விண்ணும் மண்ணும் அதிர்ந்தன. இதைப் பாரதி, "ஒமென்றுரைத்தனர் தேவர்-ஒம் ஒம் என்று சொல்லி உறுமிற்று வானம் பூமி அதிர்ச்சி யுண்டாச்சு-விண்ணைப் பூழிப்படுத்தியதாம் சுழற்காற்று சாமி தருமன் புவிக்கே-என்று சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும் நாமும் கதையை முடித்தோம் இந்த நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க’ என்று தருமத்தை-தருமனை, உலகத் தலைவனாக்கி இவ்வுலகம் இன்பத்தில் திளைக்க வாழ்த்தி முழக்கு இன்றார். திரெளபதியின் சபதத்தின் முன் வீமன் மேற் கொள்ளும் சபதத்தினையும் ஈண்டு காணல் ஏற்புடைத் தாகும். பாரதியார்,