பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அம்மையும் அப்பனும் நல்லை வாழிய நிலனே' என்று இதை அன்றே நம் சங்க காலப் புலவரும் பாடிக் காட்டி விட்டார் அல்லவா? இனி, தமிழ் நாட்டில் தலைவிரித்து சபதமும் ஆணையும் இட்ட அன்னை கண்ணகியைப் பற்றிக் காண்போம். குழலும் யாழும் அமுதும் குழைத்த மழலை' மொழி பேசிய அந்தக் கண்ணகி கொடுமை நிகழ்ந்த போது வெடிக்கிறாய் அவள் வாயிலிருந்து சொற்கள் வெடிக்கின்றன. 'மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் பட்டங்கி யானு மோர் பத்தினியே ஆமாயில் ஒட்டேன் அரசொடு ஒழிப்பேன் மதுரையும் என் பட்டிமையும் காண்குறுவாய்' என்று வெடித்துரைக்கின்றாள். இவ்வாறு அவள் சக்தி யாகவே - காளியாகவே-துர்க்கையாகவே மாறி மறம் மாற்றி அறம் உரைக்கப் போகின்றாள் என்பதை முன்னரே இளங்கோவடிகள் வேட்டுவ வரியில் அந்த அன்னையின் அருள் நிலையை நமக்கு விளக்கிக் காட்டுகிறார். 'ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரிஉடுத்துக் கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால் வானோர் வணங்க மறைமேல் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றியே நிற்பாய்' வரிவளைக்கை வாளேந்தி மாமகிடற் செற்ற கரியதிரி கோட்டுக் கலைமிசைமெய் நின்றாயால்