பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ---------- * அம்மையும் அப்பனும் என நம் முன் அவளைக் காட்ட நாமும் நடுங்குகிறோம் அவள் தோற்றத்தையும் அது கண்டு பாண்டியன் அழிந்ததையும், மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணிரும் . வையைக்கோன் கண்டளவே தோற்றான் காரிகைதன் சொற்செவியில் உண்டளவே தோற்றான் உயிர்' எனக் காட்டுகின்றார். இவ்வாறு அவனும் நாடும் அழிந்த நிலையினை அன்னையின் தோற்றத்தில் வந்த கண்ணகி மேல் ஏற்றாது விளக்குகிறார். ஆயினும் ஒரு முலை குறைத்த திருமா பணியாகிய அவள் அங்கியக் கடவுளுக்கு ஆணையிட்டு மதுரையை அழிக்கின்றாள். ஆனால், அங்கும் அன்னையின் அருள் சுரக்கிறது. அனை வரையும் அழிக்கச் சொல்லவில்லை. பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப்பெண்டிர் மூத்தார் இளையோர் எனும் இவரைக் - கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க’ என ஆணையிடுகின்றாள். இந்நிகழ்ச்சிகள் எல்லாம் முன்பிறவியின் காரணமே எனக் காட்ட நினைந்து வந்த மதுராபுரிக் காவல் தெய்வமே இச்சீற்றம் தாங்கிய அன்னையின் முன்வர அஞ்சிற்று. பின் வந்து பேசுகிறது. ஒருமுலை குறைத்த திருமா பத்தினி முன்னிலை ஈயாள் பின்னர்த் தோன்றி கேட்டிசின் வாழி என்று வாழ்த்தித் தன் வரவினைக் கூறுகின்றாள். எனவே தெய்வங்களும் அஞ்சும் தெறுகண் உடையவளாய்