பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அம்மையும் அப்பனும் கூனியர்கிய மந்தரை அதனால் அமைதியுறாது, மேலும் கூற வேண்டியவற்றைப் பலவகையில் சுட்டிக் காட்டுகிறாள். இராமனுக்குப் பட்டம் என்றால்,கோசலை யின் புக்ழ் ஓங்கும். கைகேயிதன் புகழ் மங்கும் என்றும் இவள் சுற்றத்தாரும் பழிக்கப்படுவர் என்றும் இன்னும் பலவகையினும் பலபல எடுத்துக் கூறுகின்றாள். ஆயினும் அவற்றால் எல்லாம் கைகேயி மனம் மாற வில்லை. கைகேயிதனைத் தசரதன் மணந்த ஞான்று அவள் தந்தை கேகயனிடம் ஒரு சத்தியம் செய்து தருகின்றான். தனக்குப் பின் கோசல நாட்டைக் கைகேயிதன் மகனுக்கே உரிமையாக்கி, அவள் மகனே ஆளவேண்டும் என வாய்மை கூறுகின்றான். ஆம் தசரதனுக்குப் பல மனைவி யர் இருந்தமையின், கேகயன் தன் மகளை அவனுக்குத் தர இசையவில்லை. எனவேதான் இந்தச் சத்தியத்தைஉறுதிமொழியினைத் தசரதன் தருகின்றான். பின்னரே தசரதன் கைகேயி திருமணம் நடைபெறுகின்றது. இந்த உண்மையினை அங்கு அப்போது உடனிருந்த கூனி அறிவாள். கைகேயியோ இராமன்மேல் இருந்த அளவற்ற அன்பினாலும், கணவனிடம் கொண்ட பாசத்தாலும் இன்று இராமன் பட்டமறிந்து மகிழ்ந்தாள். ஆயினும் அப்பட்டமளிப்பு நடந்திருந்தால் தசரதன் என்றென்றும் சொன்ன சொல்லைத் தவறினான் - வாய்மையினை வழுவினான் என்ற பழிச் சொல் வராதா? பின் வாலி யால் வாய்மையும் மரபும் காத்து மண்ணுயிர் துறந்த வள்ளல் என்று எவ்வாறு இ வ.ன் சிறப்பிக்கப் பெறுவான். - - தசரதனுக்கு, இராமன் முடிசூட்டிக் கொண்டால் உண்டாகும் பழியும் பாவமும் உலகம் உள்ளளவும் நீக்க முடியாது என்ற உண்மையை மந்தரை உணர்த்திய பிறகே கைகேயி நினைக்க ஆரம்பித்தாள்.