பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - அம்மையும் அப்பனும் ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய் ஊணோடோசை ஊனும் ஆகி ஒன்றலாத ԼՈՈT6Ծ)ԱԱԱԱՈT6Ն) பூணிபேணும் ஆயனாகி, பொய்யினோடு மெய்யுமாய் காணிபேணும் மாணியாய் கரந்துநின்ற கள்வனே. (திருச்சந்த விருத்தம் 26) 'பூநிலாய ஐந்துமாய் புனற்கண்நின்ற நான்குமாய் தீநிலாய மூன்றுமாய் சிறந்தகால் இரண்டுமாய் மீநிலாய நன்றுமாய் வேறுவேறு தன்மையாய் நீநிலாய வண்ணன் நின்னையார் நினைக்கவல்லரே! (திருச்சந்த விருத்தம் 47) எனத் திருமழிசைப் ஆழ்வார் பாடியுள்ளார் வேறு வேறு தன்மையாய் என்பதில் ஆழ்வார் ஒளிவிளக்கம் காண் கின்றார். ஆம் தீயை நீர் அணைக்கும். ஆனால் தீயிலிருந்து நீர் தோன்றுகிறது என்பது அவர் காட்டி யுள்ள உண்மையான கருத்து. அப்படியே பெருங்காற்று நெருப்பை அணைக்கும். ஆனால் நெருப்பு காற்றி லிருந்து தோன்றுகிறது. இவ்வாறு ஒன்றினுள் ஒன்றாய் வேறாம் தன்மையாயினும் இணைந்து செயல்படும் ஐம்பூத நிலையை விளக்கி அவற்றில் நம்மை ஆளும் ஆண்டவன் தன்மையைக் காட்டுகிறார். மற்றும் நல்லன. வும் அல்லனவும் அவனே என்றும் அங்கங்கே ஒளிந்து நின்று, அடியவர்தம் அல்லல் அறுப்ப்ான்என்றும் பலவகை யில் ஆடல் புரிகின்றான் என்றும் அவர் காட்டுகின்றார்.