பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 அப்பனும் மதுரையை நோக்கி வருகின்றான். அதைக் கண்ட சொக்கேசன் அவனுக்கு அருள் செய்ய அம்மையோடு புறப்படுகின்றார். அவன் செயல்கண்ட அன்னையார் இத்தகைய கொடுமையாளனுக்கு-மாபாவிக்கு மாபாத கம் செய்த பாவிக்கு விமோசனம் தருதல் பொருந்துமா என்று கேட்கிறாள். அப்பனோ இப்படி யாதொரு துணையுமின்றி, தன் தவறு எண்ணிப் புலம்பி அலக்கண் உறுபவனுக்கு அருள் செய்வதொன்றே உண்மையான அருள்-காப்பு என்று கூறி, அவன் பாவ நீக்கத்தக்கு வழி காட்டி ஆற்றுப்படுத்துகின்றார். பரஞ்சோதி முனிவர் இந்நிகழ்ச்சியினை அழகுறக் காட்டுகின்றார். 'ஐயஇக் கொடியோன் செய்த பாவத்திற்கு அளவில்காலம் வெய்ய நாலேழுகோடி நரகிடை - வீழ்ந்தானேனும் உய்வகை இலாதபாவி இவனுக்கென் - r- உய்யும் தேற்றம் செய் வகை' என்று கேட்பச் செங்கண்மால் விடையோன் செப்பும் (34) இதற்கு அப்பன் தந்த பதில் அவன் கருணை உள்ளத்தைக் காட்டுவதாகும். 'அடுபழி அஞ்சா நீசராயினும் நினைக்கின் அச்சம் படுபழி அஞ்சான்செய்த பாதகத் - தொடக்குண்டு எங்கும் விடுவழி இன்றி வேறு களைகணும் இன்றி வியக் கடவனைக் காப்பதன்றோ காப்பென்றான் கருணைமூர்த்தி, - (35)