பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 அம்மையும் அப்பனும் யோகியாய் இருந்தெவர்க்கும் யோகத்தைப் புரிவான் நல்ல போகியாய் இருந்தெவர்க்கும் போகத்தைப் பொழிவான்' என அவனை ஆன்றோர் காட்டுவர். மணிவாசகரும் திருவுந்தியாரிலும் பிறவிடங்களிலும் இவன் இருநிலை களையும் நன்கு விளக்குகின்றார் எனவே அவன் தவ நிலையும் வையத்துக்கும் வாழும் உயிர்களுக்கும் தேவைப் படுகின்றது. அத்தகைய தவநிலையிலிருந்த அப்பனை எப்படி எழுப்புவது? மன்மதன்-திருமாலின் மைந்தன். மக்க ளுக்கு-உயிர்களுக்குக் காமத்தை வளர்ப்பவன்-புஷ்ப பாணத்தைப் பொழிந்து சேர்த்து வைப்பவன். தேவர் அதை உணர்ந்து அவனை அனுப்பி இறைவன் தவத்தைக் கலைத்து, சூரனை அழிக்கக் குமரனைப் பெற விரும் பினர். அவன் தன் சிறுமையினையும், அண்ணலின் பெருமையினையும் நினைத்து அஞ்சி மறுத்த போதிலும், அவர்கள் சாபமிடுவதாகப் பயமுறுத்தினர். இவர்கள் சாபத்தால் அழிவதைக் காட்டிலும் சிவன் சாபத்தால் அழிவது மேல், என்று எண்ணி மன்மதன் அச்செய்லில் ஈடுபட்டான்! சிவன் கண் விழித்தான். அந்த விழி நெருப்பில் அவன் அழிந்தான். இறைவன் அடி சற்றே வேகமாக விழுந்தது. இறைவன் நெற்றிக் கண்ணால் நீறுபட்ட நிலையில் அவன் மனைவி 'இரதிதேவி புலம்புவதில், கச்சியப்பர் பலப்பல நுணுக்கங்களை வைத்துப் பாடுகின்றார். போ'வென்று உனைவிடுத்த தேவரெல்லாம் இப்போது வா’ எனறு உனை - - எழுப்பவல்லாரோ? T675 கேட்கின்றாள் இரதிதேவி. மேலும்,