பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அம்மையும் அப்பனும் 'மடமயிலனையார் எங்கள் வளையினைத் - தருதிர் என்றார் கடல்விடம் அயின்றான் உங்கள் கந்தரத்து உள்ள தென்றான் தடமதிக் கொம்பனார் எம்கலையினைத் தருதிர் என்றார் முடமதி மிலைந்தான் உங்கள் முகம இடத்தது என்றான் 'இடையறிந்து எம்மைச் சேர்மின் என்றனர் - இளையர் எங்கோன் கடலமுதனையீர் நுங்கட்கு இடை இனிக் காணாது என்றான் மடநலார் அஃதேல் பண்டைவண்ணம் ஈந்து இல்லில் செல்ல விடை அளித்திடுமின் என்றார் வேலைபுக்கு உறங்கும் என்றான்' 8.நங்கையர் கபாலிக் கென்றும் நடுவிலை போலும் என்றார் அங்கணர் நடுவிலாமை நும்மனோர்க்கு - அடுத்ததென்றான் மங்கையர் அடிகள் நெஞ்சம் வலியகல் - போலும் என்றார் கொங்கலர் கொன்றையானும் கொங்கையே - வன்கல் என்றான்' 'காதுவேல் அன்ன கண்ணார் கங்கைநீர் • • சுமந்த தேதுக்கு ஒதுமின் என்றார் நுங்கண் உண்பலி ஏற்க என்றான் ஏதுபோல் இருந்தையன் இழைத்த செப்பு என்றார் ஈசன் கோதுறா அமுதன்னிர் நும்கொங்கை போல் இருந்தது என்றான்