பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அம்மையும் அப்பனும் பவற்கு' என்ற வள்ளுவர் வாக்கின்படி, அடிபட அடிபட அப்பர்தம் தெய்வத்தன்மை உலகுக்கு நன்கு விளங்கிற்று. இறைவன் தொண்டராகிய அப்பரை மட்டுமன்றி, மகனாகக் கொண்ட சம்பந்தரையும் கடிதோச்சி மெல்ல எறிந்து திருவிழிமிழலையில் ஆட்கொண்டார் என அறிகிறோம். நாடு பஞ்சத்தால் வாட, மிழலையில் இருந்த அப்பருக்கும் சம்பந்தருக்கும் இறைவன் காசுகள் அருளினார். அவற்றை மாற்றி, வேண்டிய உணவுப் பொருள்களைக் கொண்டு அடியவரையும் பிறரையும் உண்பித்தனர். எனினும் அப்பருக்கு இறைவன் தந்த காசு எளிமையில் மாற்றக் கூடியது; மகனாகப் போற்றப் பெற்ற சம்பந்தர் பெற்ற காசுகளோ வட்டம் அல்லது வாசி தந்தே மாற்ற வேண்டியதாக அமைந்தது. சம்பந்தர் 'வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலை யீர் ஏசல் இல்லையே' என இறைவனை வே ண் டி வாசற்ற காசு பெற்றார். அப்பர் காசு வாசில்லா நிலைமைக்கு அவர் ஆற்றிய தொண்டே கார ண ம் எனப் போற்றுகிறார் சம்பந்தர். ஒருவேளை தான் மகனா கவே இருப்பதால் தனக்குச் சலுகை இறைவன் தருவான் என எண்ணி இருப்பார். ஆம்! இன்றைய பெருந்தலைவர்கள் எல்லாம் இவ்வாறு செய்வதால் தானே நாட்டில் பல்வேறு குழப்பங்கள் உண்டாகின்றன. இறைவனாகிய பெருந்தலைவனிடம் இவ்வேறுபாடு கிடையாது. எனவே ஒரு வேளை அவ்வாறு எண்ணிய சம்பந்தரைத் திருத்தவே வாசி வேண்டும் காசு, அடித் தளந்து ஆட்கொண்டார். சம்பந்தர் எண்ணத்தினை அவர்தம் தொண்டர்கள் தம் காசு வாசிபடவேண்டியதை, 'கருதிய எல்லாம் கொள்ளவேண்டிச் - - சென்றால் காசுதனை வாசிபட வேண்டும் என்பார்