பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

..

அப்பன்-அடிதால் G7 பெருமுனிவர் வாகீசர் பெற்ற காசு பேணிக் கொள்வார் இதுபிற்பா டென்பார்' (168) எனச் சேக்கிழார் கூறுவர். இது கேட்ட சம்பந்தர் உடனே கூறுவதைச் சேக்கிழார் கூறுகின்றார். 'திருஞான சம்பந்தர் அதனைக் கேட்டு சிந்திப்பார் சிவபெருமான் தனக்குத்தந்த ஒருகாசு வாசிபட மற்றக் காசு நன்றாகி வாசிபடா தொழிவான் அந்தப் பெருவாய்மைத் திருநாவுக்கரசு தொண்டால் பெருங்காசாம் ஆதலினால் பெரியோன் தன்னை வருநாள்கள் தருங்காசு வாசிதீரப் பாடுவேன் என்றெண்ணி மனத்துட் கொண்டார்!" இவ்வாறே தேவாரம் பாடிய மற்றொரு அடிய வராம் சுந்தரரையும் இ ைற வ ன் அடித்தடித்தே அக்காரம் தீட்டியுள்ளார். திருவாரூர் பரவையாருடன் வாழ்ந்த சுந்தரர், திருஒற்றியூரில் சங்கிலியாரை மணந்த போது, அவரை விட்டுப் பிரியேன்” என இறைவன் முன் சத்தியம் செய்து கொடுக்கின்றார். பின் பரவையைக் காணத் துடிக்கின்ற உள்ளத்தைக் காட்டாது, எத்தனை நாள் பிரிந்திருப்பேன் என் ஆரூர் இறைவனையே’ என்று இறைவன் மேல் வைத்து ஒற்றியூரைவிட்டுப் பிரிந்தார். இரு கண்களும் அவிந்தன. உடனே, - 'அழுக்கு மெய்க் கொடுன் திருவடி அடைந்தேன் அதுவும் நான்படப் பாலதொன்றாகில்..