பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன் முகம்

________

வயது எண்பதைத் தாண்டும் நிலையில் உள்ள நான் பல ஆண்டுகளாகவே, பேசுவதெற்கென எங்கும் செல்லும் நிலையினை நிறுத்தி விட்டேன். எங்கள் வள்ளியம்மை கல்லூரி, பள்ளிகளில் பிறர் நடத்தும் விழாக்கள் ஒன்றிரண்டில் மட்டும் கலந்து பேசியுள்ளேன். ஆயினும் சென்னை நகரில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து, புதன் கிழமை தோறும் கூடி, தெய்வ நெறி - சமுதாய வாழ்வு - பண்பாடு - பணிவுடைமை - சான்றாண்மை போன்ற மக்கள் - நன்மக்கள் வாழ்வுக்கேற்ற பொருள்களை அலசி, ஆய்ந்து, நன்முடிவு காணும் இந்த 'நிர்வாண்' சங்கத்தினர் தம் வேண்டுகோளை மறுக்க இயலவில்லை உலக வாழ்வு, 'எந்நிலையில் நின்றாலும் எத்தவத்தைச் செய்தாலும் மக்கள் மனமிருக்கும் மோனத்தே' என்றபடி உயிர் அந்த வாழ்வில் உலவும் போது, பற்றற்று 'நிர்வாண்’ நிலையில் நிலைத்து, எல்லாரும் இன்புற்றிருக்க வழிகாண - வழி வகுக்க ஆவன செய்யும் இந்த நிர்வாண் இயக்க வேண்டுகோளை மறுக்க இயலவில்லை. ஏற்றுக் கொண்டேன்.

திங்கள் தொடர் சொற்பொழிவாக நான்கு அல்லது ஐந்து பொழிவுகளை ஓர் அடிப்படையில் தொடர் பொருளாக அமைத்துப் பேச வேண்டும் என்பது அவர்கள் கட்டளை. அப்படியே பல திங்கள் அவர்கள் செயலாற்றி வருகின்றனர். 'அப்பன் பரப்பிரமம்; அன்னை பிரகிருதி; அண்டம் அம்மையப்பர் விளையாடும் இடம்' என்ற வகையில் அவர்கள் பொருள் தந்தனர். அதன் தெளி