பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடியேன் பிழைப்பனாகிலும் திருவடி பிழையேன் வழுக்கிவிழினும் திருப்பெயரல்லால் மற்றுநான் அறியேன் மறுமாற்றம் ஒழுக்க என் கணுக்கு ஒருமருந்து ரையாய் ஒற்றியூரெனும் ஊர் உறைவானே!" என்று பாடிச் செல்கின்றார். பின் திருமுல்லை வாயிலில் 'சங்கிலிக்காக என் கண் கொண்ட பண்ப, பாசுபதா' என்று பாடுகிறார். பின் திருவெண்பாக்கத்தில் கோயில் உளாயோ என்ன, இறைவன் உளோம் போகிர்' என்று கூறி, ஊன்றுகோல் அளித்து அனுப்புகிறார். பின் காஞ்சி யில் ஒரு கண் பெற்று. கால காலனைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே என்று பாடி, பின் திருவாரூர் சென்று, மற்றைக் கண்தான் தாராதொழிந்தாய் வாழ்ந்த போதீரே என்று பாடி மறு கண்ணும் பெற்று வாழ்கின்றார். எனவே இறைவன் தன் அடியவராயினும் தவறின் தண்டிப்பான் என உணர்தல் வேண்டும். இறைவன் சிலரை வன்மையாகவும் சிலரை மென்மை யாகவும் அடிப்பதுண்டு. வன்மையால், அவர்தம் புகழ் உயரும். அத்தகைய உயர்நிலை பெற்றவருள் சிறந்தவர் சிறுத்தொண்டர் என்பர் - செங்கட்டங்குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய வெங்காட்டில் அனலேந்தி விளையாடும் - பெருமானே' என்று ஞானசம்பந்தராலேயே போற்றிப் புகழப் பெற்ற வர். அவர் காலத்திலேயே வாழ்ந்தவர். பல்லவ மன்னன் நரசிம்மனுக்குப் படைத்தலைவராக இருந்து, இரண்டாம் புலிகேசியை அவன் தலைநகராகிய வாதாபி வரையில்