பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 81 கண்ணையும் தோண்டி இறைவன் கண்ணில் அப்ப நினைத்து, அன்பின் பெருக்கில் தம்மை மறந்து, குறிக் காகச் செருப்புக் காலையே இரத்தம் வழித்த மற்றொரு கண்ணில் பொருத்தினார் இதையே செருப்பால் உதைக்க என்று சொல்கிறார். இனி, சாக்கிய நாயனார் வேற்றுச் சமயத்தைச் சார்ந் தவர்; உண்ணுமுன் சிவனைக் கல்லால் அடித்து விட்டே சாப்பிடுவார். ஒருநாள் மறந்து உணவு கொள்ளத் தொடங்கும் வேளையில் கல்லால் அடிக்கும் நினைவுவர, எழுந்து வந்து இறைவனைக் கல்லால் அடித்தார். அந்த நியதி மாறாத நிலை கண்ட அப்பன் அவருக்கும் முத்தி அளித்தான் எனப் பெரிய புராணம் கூறுகிறது ஆம்! அவரும் மேலே கண்ட அப்பர். சம்பந்தர், சிறுத்தொண் டரைப் போன்று சிறந்த அடியவராகி, பெரிய புராணத் தில் இடம் பெற்றுள்ளார். இனி, மணிவாசகர் பொருட்டு இறைவன் பட்ட பிரம்படி நாடறிந்த ஒன்று. தன் மெய்யடியாராகிய மணி வாசகர்தம் உண்மைத் தொண்டு நிலையை உலகுக்கு உணர்த்தவும், தன்னையே துணை என நம்பி இருந்த வந்திக்கு முத்தி அளிக்கவும் யாண்டும் இறையருளே நிரம்பியுள்ளது என்பதை அன்று மட்டுமன்றி என்றும் வாழ்வோருக்கு எடுத்துக் காட்டவுமே இறைவன் பிரம் படிபட்டான். - 'துணைஇன்றி மக்கள் இன்றி தமர் இன்றிச் - கற்றமாகும் பணை இன்றி ஏன்று கொள்வார் பிறர் இன்றிப் பற்றுக்கோடாம் புணை இன்றி துன்பத்தாழ்ந்து புலம்புறு. பாவியேற்கு இன்று இணையின்றி இந்தத்துன்பம் எய்துவது அறனோ எந்தாய்!' (பிட்டுக்கு மண் 12)