பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அம்மையும் அப்பனும் கின்ற இறைவன் உடனே இருப்பினும், இவற்றின் வாழ் வும் வளர்ச்சியும் தாழ்வும் தன்மையும் அடிக்கடி மாறத் தக்கன. இவற்றை எல்லாம் எண்ணிய அப்பர் பெரு шоп6іттпт, 'தற்பதத்தார் நற்பதமே ஞானமூர்த்தி நலஞ்சுடரே நால்வேதத்து அப்பால்நின்ற சொற்பதத்தார் சொற்பதமும் கடந்துநின்ற சொலற்கரிய சூழலாய் இது உன் தன்மை நிற்பதொத்து நிலைஇலா அண்டந் தன்னுள் நிலவாத புலால் உடம்பே புகுந்து நின்ற கற்பகமே நான் உன்னை விடுவேன் அல்லேன் கனகமா மணிநிறத் தெம் கடவு ளானே' என்கின்றார். எனவே இந்த ஆன்மா இறைவனோடு இயைந்தும் வேறு பட்டும் வாழும் தன்மை உடையது என உணர்தல் வேண்டும். இனி, இந்த ஆன்மா எப்படி இயங்கும் என்பதைக் காண்போம். பிற மொழிகளின் இலக்கணங்களைப் போலன்றித் தமிழ் இலக்கணம் நம் உயிர் வாழ்வையும் வாழ்வின் நிலையினையும் காட்டும் வகையில் அமை கின்றது. எழுத்துக்களை உயிர், மெய் எனப் பிரித்தனர். இரண்டும் கூடினால்தானே வாழ்க்கை-அவ்வாழ்வை விளக்குவனதாமே இலக்கியம்; அவ்விலக்கியம் கண்டு அதற்கு விளக்கம் தருவதுதானே இலக்கணம். எனவே இலக்கணச் சூத்திரம் செப்ப வந்த தொல்காப்பியனார் உடலையும் மெய்யையும் எண்ணிப் பார்க்கின்றார். உடல் அசைவற்றது. ஆனால் உயிர் பெற்றால் உலவ வல்லது. இரண்டும் ஒன்றுவது இயல்பு. அதுவே வாழ்வு-மொழி. அப்படியே இந்த உயிர் பெறும் வினையும் அது விளையும் காலமும் கணிக்கப் பெறுகின்றது. இவற்றையெல்லாம்