பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும்.பெற்ற ஆன்மா 97 செயல்படும் என்பதை எல்லாச் சமயங்களும் ஏற்றுக் கொள்ளுகின்றன. மணிவாசகர் இறைவன் காட்சி தந்த மைக்கும் தன் வினை ஒத்து வந்தமையே காரணம் என்பர். என் வினை ஒத்தபின், கணக்கிலாத் திருக்' கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே' என்பது அவர் வாக்கு. எனவே வினை.வயத்ததாகிய இந்த ஆன்மா என்றும் இறைவனைப் போன்று நிலைத்துள்ளது, இன் தையும் அவனைப் போலவே காண முடியா நிலையிலும் பலப்பல வகையில் பலப்பல பெயர்களில் வாழ்கின்றது. என்பதையும், அது தொடர்ந்து பல பிறவிகள் எடுத்து வருகின்றது என்பதையும் உணர்தல் வேண்டும். இனி அத்தகைய பிறவிகளில் தன்னையும் தலைவனையும் உணரும் மானிடப்பிறவியே சிறந்ததென்பதனையும் அதற்கு முன் அது பட்டு உழலும் பான்மையினையும் சிறிது காண்போம். கூர்தல் g Múd (Evolution theory) L sögó) முன்னரே கூறியுள்ளேன். ஆன்மா பல பிறவிகள் எடுத்து வரும் என்பதனை மணிவாசகர், . ‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்ல சுரராகி முனிவராய்த் தேவராய்ச் - செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்தி ளைத்தேன் - எம்பெருமான்' என்கிறார். இதை அப்படியே விளக்கும் முகத்தான். அமெரிக்காவில் சிகாகோவில் உள்ள கண்காட்சியில் பல் வகையில் காட்சிப் பொருள் வகையில் காட்டி விளக்கி உள்ளனர். மனிதனுக்கு முன் கல் வருவது முறை என்றும் அதையே இன்றைய ஆய்வாளர் Focil என்கின்றனர்