பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அக்கர்வத்துடன் கிஞ்சித்து பொருள் சேர்ந்துவிடுமாயின் மற்றவர்களைத் தாழ்த்தி புறங்கூறுதற்கும், தங்களையொத்த மனிதனென்றறிந்தும் அவனை இழிவுபடுத்துவதற்கும் அஞ்சான். கல்வியும் செல்வமிரண்டுடன் தான் சொல்லும் வாக்கும் செல்லுமாயின் தனக்கு எதிரிகளாகத் தோன்றுங் குடிகள் யாவரையும் கெடுப்பதற்கு அஞ்சான். கல்வியும், செல்வமும், செல்வாக்குமாகிய மூன்றும் நல்லோர்களுக்கு உண்டாமாயின் சருவ மக்களுக்கும் சருவ சீவராசிகளுக்கும் உபகாரிகளாக விளங்குவதுமன்றி நித்திய சுகமும் பெறுவார்கள்.

விவேகசிந்தாமணி

பொல்லார்க்கும் கல்விவரில் கர்வமுண்டாம் அதனூடு பொருளுஞ் சேர்த்தால்
சொல்லாதுஞ்சொல்லவைக்கும் சொற்சென்றால் குடிகெடுக்கத் துணிவர்கண்டாய் நல்லோர்க்கிம் மூன்றுருண முண்டாகி வருளதிக ஞானமுண்டா
யெல்லோர்க்கு முபகாராயிருந்து பரகதியை யெய்துவாரே.

சத்திய தன்மபோத நீதிநூற்களை அநுசரியாது கல்விவிருத்தி பெற்றவர்களும், செல்வவிருத்தி பெற்றவர்களும், சொல்லும் வாக்கு செல்லும் விருத்திபெற்றவர்களும் இவ்விந்துதேசத்தில் எம்மக்களை சீர்திருத்தி எச்சீவராசிகளைப் பரவச்செய்து எத்தொழில் விருத்தியை பெருக்கி தேசோபகாரிகளாக விளங்கி இருக்கின்றனர்.

கற்றக் கல்வியில் சுகசீவனம் பார்ப்போரும், பெற்ற செல்வத்தால் தங்கள் சுற்றத்தைக் காப்போரும், செல்வாக்கால் அதிகார சுகம் பெறுவோர்களுமாக விளங்குகின்றார்களன்றி நீதிநூற்களை வாசித்து உலகோபகாரிகளாக விளங்கினார்களில்லை.

இத்தேசத்தோருட் சிலர் தாங்கள் கற்றக் கல்வியாலும் பெற்றச் செல்வத்தாலும் செல்லும் வாக்காலும் பத்து பெயர் சேர்ந்துக்கொண்டு இராஜத்துவேஷச் செயல்களைப் பெருக்கித் தாங்கள் பத்து பெயர் கெடுவதுடன் தங்கள் குணானுபவம் அறியாது தங்களுடன் சேர்ந்து கொண்டு கூச்சலிடும் பத்தாயிர மக்களுக்கும் சீர்கேட்டையும் இராஜ விரோதத்தையும் தேடிவைத்துவிடுகின்றார்கள். இத்தகையக் கல்வியும் செல்வமும் பெற்றோர் பொதுப்பிரயோசனத்தை நாடி, சகல மக்களின் ஈடேற்றத்தைக் கருதி தங்களை விருத்திபெறச்செய்த ராஜாங்க விசுவாசம் வைத்து தாங்கள் கற்றக் கல்வியையும் செல்வத்தையும் உபயோகிப்பார்களாயின் குடிகளும் சுகம்பெறுவர். தேசமும் சிறப்புறும். கோனும் ஆறுதல் பெறும்.

அங்ஙனமின்றி தாங்கள் கற்றக் கல்வியையும் பெற்ற செல்வத்தையும் சுயப்பிரயோசனத்தை நாடி உபயோகிப்பதினால் தேசமுஞ் சீர்கெட்டு குடிகளும் பாழடைந்து போவதுடன் யாதுமறியா ஏழை மக்களையும் இராஜ விரோதிகளாகக் காட்டிக்கொடுத்துவிட்டுத் தாங்களொன்றுமறியாதவர்கள் போல் மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டும் விலாங்குபோல் சமயம் பார்த்திருக்கின்றனர்.

பொதுவாகிய தேசத்தின் சீர்திருத்தத்தை நாடாத கல்வி கற்றென்ன கல்லாது போயிலென்ன. தன்னுயிர்போல் மன்னுயிர்களை ஆதரிக்காத செல்வமிருந்தென்ன யில்லாமற் போயிலென்ன. ஆதலின் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் தாங்களாளுந் தேசச்சிறப்பையும் குடிகளின் சுகத்தையும் தங்கள் குடிகள் யாவரும் இராஜவிசுவாசத்தில் ஒழுகவேண்டிய ஒழுக்கத்தையும் கருதுவார்களாயின் நல்லோர்க்குக் கல்வி விருத்திச்செய்து ஆதரிக்க கோறுகிறோம்.

- 3:39; மார்ச் 9, 1910 -


119. ஆனந்தம் ஆனந்தம் மஹாராஜா பொப்பிலி கே.சி.ஏ.ஆர் அவர்களை எக்சிகூட்டிவ் மெம்பராக சேர்த்ததே ஆனந்தம்

தற்காலம் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் சென்னை ராஜதானி ராஜாங்க ஆலோசினை சங்கத்தில் நமது கனந்தங்கிய பொப்பிலிய மகாராஜா அவர்களை