பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 313

வெறுமனே இந்துமதமென்னில் அதனுற்பவங் கேட்பாரில்லையோ. பெரியசாதி சின்னசாதி என்பதற்கு மட்டிலும் சரித்திரங்களும் சாஸ்திரங்களுமுண்டாக்கிக் கொண்டபோது இந்து என்பவன் சரித்திரத்தைமட்டிலும் எழுதாமல்விட்டக் காரணமென்னை. இந்து என்பவன் ஒருவனுண்டாவென்னில் ஆரியமத மென்பதும், ஆரியனொருவனுண்டா வென்னில் வேதாந்திமதமென்பதும், வேதாந்தி யொருவனுண்டா வென்னில் அத்துவித மதமென்பதும், அத்துவிதி என்பவன் ஒருவனுண்டாவென்னில் விசிட்டாத்து விதமதமென்பதுமாகிய மாறுதலைக் கூறிவருவார்களன்றி எதற்குத் தக்க சரித்திர ஆதாரங்களைக் கொடுக்கமாட்டார்கள். இத்தகைய ஆதாரங்களற்ற மதத்தின் பொதுப்பெயர் இந்துமதமென்பார்கள். இத்தகைய சரித்திராதாரமற்ற இந்து மதத்தில் சகலரையும் ஒப்புக்கொண்டு அன்னிய தேசத்திலிருந்து இத்தேசத்தில் வந்து குடியேறிய மகம்மதியர்களையும் கிறீஸ்தவர்களையும் நீக்கிவிடுவதுபோல் அன்னிய தேசத்தினின்று இவ்விடம் வந்து குடியேறியுள்ள ஆரியர்களையும் நீக்கி அப்புறப்படுத்தி விடுவதாயின் இந்துமதமென்னும் பெயர் அன்றே மறைந்து தேசத்தின் சொந்தமதம் சூரியப்பிரகாசம்போல் விளங்கி சகல மக்களையும் சகோதிர வைக்கியத்தில் நிறுத்தி சுகம்பெறச்செய்வதுடன் நீதிநெறியமைந்துள்ள பிரிட்டிஷ் ராஜவிசுவாசத்திலும் நிலைத்து ஆறுதலடைவார்கள்.

- 4:29; டிசம்பர் 28, 1910 -


181. திண்டிவனந் தாலுக்காவைச் சார்ந்த மேல்பாக்கம் பாஞ்சாலம் சாத்தனூர் கிராமங்களுக்குரிய தாசில்தாரர்களுக்கும் முனிஷிப்புகளுக்கும் கணக்கர்களுக்கும் மிக்க வந்தனத்தோடு விடுக்கும் விண்ணப்பம்

மேற் குறித்துள்ள கிராமாதிகாரிகளாகும் தாசில்தாரர்களே, முனிஷிப்புகளே, கணக்கர்களே சற்று கண்ணோக்குவீர்களாக. தற்காலந் தங்களது கணக்கில் அடங்கியுள்ள 1,000 ஏக்கர் பூமி யாதொரு பயனுமின்றி வெறுமனே கிடக்கக் கண்ட மேற்சொன்னபடி கிராம் ஏழைக் குடிகள் அதிகாரிகளுக்கு எழுதிக் கேட்டபோது தாங்கள் யாவருங்கூடி அதை மேய்க்காலுக்கு விடப்பட்ட நிலமென மறுத்துவிட்டீர்களாம். அந்தோ! தாங்கள் யாவரும் அம்மாடுகளின்மீது வைத்தக் கருணை மநுக்கள்மீது வைக்காதொழித்தது அவர்கள் தெளர் பாக்கியம்போலும்.

அவ்வகையாக ஆயிரம் ஏக்கர் பூமியை இராஜாங்கத்தோருக்கும், குடிகளுக்கும், பிரயோசனமின்றி மேய்க்காலுக்கு விட்டிருப்பதாயின் அதைச் சுற்றிலுமுள்ள நூறாயிரம் ஏக்கர் பூமியின்பலனை இராஜாங்கத்தோருக்களித்து வருகின்றீர்களா. அங்ஙனம் இலட்சம் ஏக்கர் பூமியின் பலனை இராஜாங்கத்தோருக்கு அளித்து அப்பூமியில் வாழும் மாடுகளுக்கு ஆயிரம் ஏக்கர் பூமி விடப்பட்டுள்ளது என்பதாயின் ஏழைக்குடிகள் அப்பூமியைக் கேழ்ப்பதிற் பயனில்லை. இராஜாங்கத்தோருக்குப் பயனின்றியும், குடிகளுக்கோர் சுகமின்றியும் இருப்பதாயின் அறுநூறு ஏக்கர் பூமியை மேய்க்காலுக்கு வைத்துக் கொண்டு நானூறு ஏக்கர் பூமியை ஏழை மனுக்களுக்கு ஈய்ந்து ரட்சிப்பீர்களாயின் தங்களுடைய பூமிகளைத் தாங்களே ஏழைகளுக்கீய்ந்து ரட்சித்ததுபோல் பாவித்து சுகம் பெறுவார்கள். அத்தகைய மநுமக்கள்மீது மட்டிலுங் கருணை வையாது விட்டபடியால் ஏழைக்குடிகள் யாவரும் ஒன்றுகூடி தாயற்ற பிள்ளைகள் போல் கருணைமிகுத்த கவர்னரவர்களுக்கு விண்ணப்பம் அநுப்பியிருக்கின்றார்கள்.

ஈதன்றி இத்தேசப் பூர்வக்குடிகளும் தற்காலம் பஞ்சமர்களென்று அழைக்கப்பெற்றோர்களுமாகிய ஏழைக்குடிகள் எங்கு காலிபூமியாயுள்ளதென்று காண்பித்துக் கேட்கின்றார்களோ அவர்களுக்குக் கொடுக்கவேண்டுமென்று இராஜாங்கத்தார் தங்களது சட்டத்தில் குறிப்பிட்டே வைத்திருக்கின்றார்கள். அத்தகைய உத்திரவுகளைத் தாங்களறிந்திருந்தும்