பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 327

இத்தேசத்துள் நிறைந்திருந்தவரையில் வித்தையும், புத்தியும், யீகையும், சன்மார்க்கமும் சிறந்திருந்தது. புத்ததன்மம் மறைந்து அபுத்ததன்மந் தோன்றியபோது பொய், பொறாமெய், வஞ்சினம், குடிகெடுப்பு முதலிய சாதியாசாரங்களும், சமயாசாரங்களும் பரவி வித்தையின் விருத்திகளையும், புத்தியின் விருத்திகளையும், ஈகையின் விருத்திகளையும், சன்மார்க்க விருத்திகளையுங் கெடுத்துவந்ததுமன்றிநாளதுவரையிலுங் கெடுத்து வருகின்றார்கள். சாதிகளின் துன்னாற்றங்களும், மதக்கடைகளை பரப்பி சீவிக்கும் சமய துன்னாற்றங்களும் எழும்பி நீதியின் நற்கந்தங்களையும், நெறியின் நற்கந்தங்களையும் வாய்மெயின் நற்கந்தங்களையும் மூடிக்கொண்டுள்ளபடியால் விவசாயமும், வித்தையுங் கெட்டு குடிகளும் கெட்டு தேசமும் பாழடையும்படி நேர்ந்துவிட்டது.

காரணம் தனக்குத்தானே பெரியசாதியெனப் பெயர் வைத்துக் கொண்டுள்ள ஒருவனுக்குக் கல்வியிருக்குமாயின் சிறியசாதியென்றழைக்கப் படுவோனுக்குக் கற்பிக்கலாகாதென்னும் பொறாமெ கொள்ளுவான், சிறிய சாதி என்றழைக்கப்படுவோனுக்குள் ஓர்வித்தை இருக்குமாயின் நம்மெய்ப் போன்ற மனிதனாயிருந்தும் நமது வித்தையை சுருக்கத்தில் உணர்ந்துக் கொள்ளக்கூடாதஅவிவேகியாயிருந்தும் தன்னைப் பெரிய சாதியோனென்று உயர்த்திக் கொண்டுஎம்மெய்த்தாழ்ந்தசாதியானெனக்கூறுவோனுக்கு எமது வித்தையைக் கற்பிக்கலாமோவென மறைப்பதும், மதக்கடை பரப்பி சீவிப்பதில் உன்சாமிச் சிறிது, என்சாமிப் பெரிதென்னும் போராட்டத்தினாலும், வித்தையும் புத்தியுங்கெட்டு மதக்கடை முதலாளரின் பொய் போதத்தால் சாமிகொடுப்பார், சாமிகொடுப்பாரென்னும் முழுச்சோம்பேறிகளாகி வீணர்களாகத் திரிவதுமன்றி தங்கள் குருக்கள் பிச்சையேற்று பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றுவதுபோல் தாங்களும் பிச்சையேற்றுண்ணும் சோம்பேறிகளாகிவிட்டார்கள். பூமியை உழுது பண்படுத்தி தானியவிருத்தி செய்து சகலருக்கும் உபகாரிகளாக விளங்கும் மேன்மக்கள் வேஷப்பிராமணர்களின் போதனைக்குட்படாமலும் அவர்களது பொய்மதத்தைச் சாராமலுமிருந்தபடியால் அவர்களைப் பராயர் பராயரென்றும், பறையர், பறையரென்றுந் தூற்றித் தாழ்ந்த சாதிகளென அகற்றி சகலவிஷயங்களிலும் அவர்களைத் தலையெடுக்க விடாமற் பாழ்படுத்தியதுமன்றி சாதியாசாரமுள்ளவர்க ளெல்லோரும் ஒன்றுகூடிக்கொண்டு ஏழைமக்களை எலும்புத் தோலுமாக வாட்டி கோலுங் குடுவையுங்கொடுத்து சவரஞ்செய்யவிடாமலும், சுத்தநீரைமொண்டு குடிக்கவிடாமலும், சுத்தவாடைகளைக் கட்டவிடாமலும் நசித்து பாழ்படுத்திவிட்டபடியால் பண்ணைத்தொழிலாளிகள் யாவரும் சீவகாருண்யமற்ற சத்துருக்களுக்கு பயந்து கிருபாநிதிகளாகத் தோன்றிய பிரிட்டிஷ் ஆட்சியோரது பலதேசங்களுக்குச் சென்று பிழைக்க ஆரம்பித்துக்கொண்டார்கள். இன்னுமிருக்கும் சில ஏழைமக்கள் பூமிகள் வேண்டுமென்று கேட்பார்களாயின் சத்துருக்கள் இன்னுமிருந்து தடுத்து கெடுத்துக்கொண்டே வருகின்றார்கள். இத்தியாதி சத்துருக்களின் விரோதச் செயல்களால் வித்தையும், புத்தியுங் கெட்டதுமன்றி பூமிகளின் விருத்தியாம் விவசாயமுங் கெட்டு பாழடைந்துபோயிற்று. இப்பவும் முன்போன்ற வித்தையும், விவசாயமும் பெருகவேண்டுமாயின் கருணைதங்கிய ராஜாங்கத்தோரால் நாட்டியுள்ள விவசாயசாலைகளையும், வித்தியாசாலைகளையும், சாதிபேதம் மதபேதமின்றி விருத்தி செய்வதாயின் வித்தையும், விவசாயமும் பெருகும். குடிகளும் சுகம் பெறுவார்கள். கோனும் குதூகலிக்கும். அப்போதுதான் ராஜாங்கத்தோர் அளித்துள்ள விவசாயமும், வித்தையும் வீண்போகாது சுகமடையலாம்.

- 4:38; மார்ச் 1, 1911 -


194. போட்டி பரிட்சையே கூடாது

போட்டி பரிட்சைகளென்பது யாதெனில், இராஜாங்க உத்தியோக வகுப்புகளில் அந்தந்த உத்தியோகத்திற்குத்தக்க போட்டிப் பரிட்சை வைத்து அதில்