பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330 / அயோத்திதாசர் சிந்தனைகள்

றெண்ணியிருந்தோம். அங்ஙனமிராது பிளேக்கென்னும் ரோகத்திற்குப் பீடமாம் விஷக்கிருமிகள் தோன்றி மறைந்துபோன பிளைக் மறுபடியும் தோன்றுவதுபோல வெடிகுண்டெறியும் விஷக்கிருமிகள் தோன்றி வினையையுண்டு செய்கின்றது.

அவை யாதெனில், கல்கத்தாவில் சில தினங்களுக்குமுன் சக்கிரவர்த்தியென்னும் போலீஸ் கான்ஸ்டேபிலைசுட்டுக் கொன்றதாகக் கேழ்விப்பட்டு அதன் துக்கம் மாறுதற்கு முன் எப்.ஏ. கௌலி என்னும் துரைமகன்மீது வெடிகுண்டெறியப்பட்டதாகத் தெரிகின்றது. அத்தகைய வெடிகுண்டெறிந்த விஷக்கிருமி யாவனென்னில், 17-வயதுடைய ஓர் பிராமணப்பையனாம். இத்தகையக் கொலைப்பாதகனும் விஷக்கிருமிக்கு ஒப்பானவனும் குலத்திற்கே கோடறியானவனுமாகியப் படுபாவிக்கு பிராமணனென்னும் பெயர் கொடுத்தவர்கள் யாரோ விளங்கவில்லை. பிராமணனென்னும் பெரும் பெயர் இவனுக்குத் தகுமோ. சாந்தமும், சீவகாருண்யமும், அன்பும் நிறைந்த அருகனுக்கன்றோ பிராமணன் என்னும் பெயர் பொருந்தும். பற்றற்று நிருவாண முற்றோனை பிராமணனென்று கூறும் வாய்மெய் நீங்கி அசத்தியர்களையும், அசப்பியர்களையும், துன்மார்க்கர்களையும் பிராமணர்களென சிறப்பித்து வந்தபோதிலும் அவர்களது பூர்வகுணம் மாறாது சீவனத்திற்காக சாதிகளை உண்டுசெய்துக்கொண்டு தேசமக்களை வஞ்சிப்பதும் குடிகெடுப்பதுமாகியச் செயல்கள் போதாது இராஜாங்க துரைமக்களையும் வெடிகுண்டெறிந்து கொல்லும் வழியைத் தேடுவதுமன்றி இராஜாங்கத்தோருக்கு இந்தியக் குடிகள் சகலர் மீதும் அயிஷ்டம் உண்டாகத்தக்க ஏதுக்களையுஞ் செய்து வருகின்றார்கள்.

விரியன் பாம்பின் குட்டியாயினும் விஷமில்லாது போகாதென்பதுபோல் 17 வயதுடைய பிராமணனென்போனாயினும் வஞ்சினமும், குடிகெடுப்பும், பொறாமெயுமில்லாது வெடிகுண்டெறிவானோ. வெடிகுண்டெறியும்படி ஏவலிட்ட இவனது பெரியோர்களும் வஞ்சினமற்றவர்களாவார்களோ. பெரியோர்கள் வளையவளையப் பெய்யின் சிறியோர்கள் நின்றுபெய்யாமல் விடுவரோ. “குலத்தளவேயாகுங்குணம்” என்பதற்குப் பகரமாக அந்தந்த குடும்பத்தின் செயல்களை அவர்களது சிறுவர்களும் விடாமல் நிற்பது அநுபவமாதலின் சிறுபாம்பாயினும் பெரும்பாம்பாயினும் விஷம் ஒன்றேயாகும்.

சிலதினங்களுக்கு முன் வாசித்துள்ள பெரியோர்கள் யாவரும் ஓர் கூட்டங்கூடி இராஜ துரோகிகள் யாவரும் அடங்கிவிட்டார்கள் அவர்களுக்கென்று வகுத்துள்ள சட்டங்களை எடுத்துவிடவேண்டுமென்று கூறியவர்கள் இப்போது தோன்றிய 17 வயதுள்ள இராஜதுரோகிக்கு யாது கூறுவார்கள். பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரரென்னும் நான்கு வகுப்புள்ள சாதியோர்களில் சகலவகுப்போருக்கும் பெரியவகுப்பானென வழங்கும் பிராமணனென்று சொல்லிக்கொள்ளுவோனே இத்தகைய ராஜதுரோகத்திற்கு முதல்வனாயிருப்பானாயின் இவர்களுக்குத் தாழ்ந்த வகுப்போரும், இவர்களது வாக்கை தெய்வவாக்காக நம்பியிருப்போர்மீதும் இராஜாங்கத்தோர் நல்லபிப்பிராயங்கொள்ளுவார்களோ. இத்தகைய வஞ்ச நெஞ்ச மமைந்தக் கூட்டத்தோரை சத்துருக்களென்றெண்ணாது மித்துருக்களென் றெண்ணுவார்களோ.

வஞ்சினமிகுத்த துன்மார்க்கர்களுக்கென்று ஏற்படுத்திய சட்டத்தை எடுத்துவிடவேண்டுமென்று கூட்டங்கூடிய பெரியோர்கள் இந்தியாவிலுள்ள அந்தந்த கிராமங்களிற் கூட்டங்களைக்கூடி இராஜதுரோகிகள் யாவருக்கும் இராஜவிசுவாசம் உண்டாகத்தக்க நீதிநெறிகளைப் புகட்டி இராஜதுரோகத்தை அகற்றி சகல குடிகளும் சுகம்பெற்று வாழும்படியான ஒழுக்கங்களைப் போதித்திருப்பார்களாயின் இப்போதய இராஜதுரோகி வெளிவந்திருப்பனோ ஒருக்காலும் வரமாட்டான். ஒரு துற்குணமுள்ள பிராமணனென்போன்