பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கார்த்துவரும் பிரிட்டிஷ் ஆட்சியின்மீதே துவேஷங்கொள்ளும் தைரியசாலிகளாகிவிட்டார்கள்.

அத்தகைய சாதித்தலைமெயாலும், உத்தியோகத் தலைமெயாலுந் தங்கள் சாதியாலோசினைக் கூட்டங்களைக் கூடவும், இராஜதுரோக சிந்தனைகளைப் பெருக்கவுமாய மூடவீரர்களாகி தாங்கள் கெட்டு நாசமடைவதுடன் தங்கள் சாதிக் கட்டுக்குள் அடங்கி தங்களையே சாமிகளென்றும், தங்களையே குருக்களென்றும். தங்களையே மேலோரென்று தங்கள் வாக்கியங்களையே நீதிவாக்கியங்களென்று எண்ணித்திரியும் பேதைமக்களும் பிழைப்பட்டுப்போம் வழியைத் தேடிக்கொள்ளுகின்றார்கள்.

யாங்கள் பெரியசாதியோர், பெரியசாதியோரென மகமதியர்கள்பால் சாதித்தலைவர்களென்போர் கூறியும் அம்மொழிகளை செவிகளில் ஏற்காது தங்கள் காரியாதிகளை நடாத்திக்கொண்டுபோனது போலவே பிரிட்டிஷ் ஆட்சியாரும் நடாத்தி வந்திருப்பார்களாயின் சாதித்தலைவர்களென்னும் அகம்பாவமும் பெரியசாதிகளென்னும் பெருமெயும் அன்றே ஒழிந்து சமரசக்குடிகளாகி என்றென்றும் இராஜவிசுவாசத்தில் நிலைத்திருப்பார்கள்.

அங்ஙனமிராது அவர்கள் பொய்ச்சாதிக் கட்டுக்குப் போகுமிடங்களுக்கெல்லாம் வழிவிட்டுக்கொண்டுபோனபடியால் தங்கள் பொய்ச்சாதிக் கட்டுப்பாடுகள் யாவையும் மெய்ச்சாதிக் கட்டுப்பாடுகளென்றெண்ணி தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டதைப் போலவே இராஜரீகத்திலும் உயர்த்திக்கொள்ளவேண்டும் என்றெண்ணிய வஞ்சகர்கள் பெருக்கத்தால் பெருந் துக்கத்திற்கு ஆளாவதுடன் மற்றயப் பேதைக்குடிகளும் பஞ்சம், பெருவாரிக் காச்சல், பிளேக்கென்னும் நோய்களால் வாதைப்படவும் ஆளாகின்றார்கள். ஆதலின் இனியேனும் இத்தகைய ராஜதுரோக சிந்தனைகளை ஒழித்து இராஜவிசுவாசத்தில் நிலைத்து பிரிட்டிஷ் ஆட்சியைக்கொண்டே சுகச்சீர் பெறுவார்களென்று நம்புகிறோம்.

- 5:17; அக்டோபர் 4, 1911 -


231. தென்னிந்திய விவசாயப் பண்ணை வேலைசெய்யும் கூலியாட்களின் கூலியும் கூலியாமோ

பண்ணைவேலைசெய்யும் ஆண் ஆட்களுக்கு சராசரி நாள் ஒன்றுக்கு முக்காலணா தேறும். பெண் ஆள்களுக்கோ அரை அணா தேறும். பதினாறு வயதிற்குட்பட்ட பையன்களுக்கோ காலணா தேறும். இதுவும் பணமாகக் காண்பார்களோ அதுவுமில்லை நெல்லாயின் ஆண் ஆளுக்கு மூன்றாழுக்கு, பெண் ஆளுக்கு இரண்டாழுக்கு, கேழ்வரகு அல்லது சோளமாயின் ஆண் ஆளுக்கு உழக்கு, பெண் ஆளுக்கு ஆழாக்கு, மற்றும் உப்புப் புளி மிளகாய்க்கு ஏதேனும் கேட்டாலோ அடடா உருசியுடன் கடித்துக் கொள்ள உங்களுக்குக் குழம்புகூட வேண்டுமோ என்பார்களாம். தாங்கள் கொடுக்குந் தானியம் போதவில்லையே பூமியில் நாளெல்லாம் எவ்வகையால் கஷ்டப்படுவோமென்றாலோ அடடா உங்கள் எஜமாட்டியண்டைப் போனால் ஏதேனுங் கொடுப்பாள் பெற்றுக்கொள்ளுங்கோள் என்பார்களாம், எஜமாட்டியண்டை போனாலோ அவ்வம்மையோ நாலுநாளையக் கூழ்பானையில் ஆற்றுநீரைக் கொட்டி சுரண்டி அக்காந்தலைக் கலையங்களில் வார்க்க அதை உப்பின்றி குடிக்கும் ஆற்றுச்சேற்று நீரென்றெண்ணி வயலில் ஊற்றிவிட்டு வயிறு காயக்காய வயல்வேலை செய்வது வழக்கமாம்.

அதனினும் மீறி எஜமானனை அடுத்து எங்கள் பசியாறக் கூலிகொடுத்தால் வேணபடி உழைப்போமென்றாலோ அடடா உங்கள் பாட்டன் கலியாணத்திற்கு எங்கள் பாட்டன் கொடுத்தக்கடன் ஐந்து ரூபா இன்னுஞ் சொல்லாகவில்லை, உன் அப்பனுக்கு என் அப்பன் கொடுத்த ஒருவராகன் கடன் இன்னும் சரிவரச் செல்லாகவில்லை, அப்படியிருக்க இன்னும் எந்த இழிவுக்குக் கொடுக்கச்சொல்லுகிறீர்கள் என்றவுடன் ஆள்கள் ஒடுங்கி வயலுக்குப் போய் உழைக்கவேண்டியதேயாம் அங்ஙனந் தங்களுக்குள்ள ஆயாசத்தாலும்