பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 425

ஒக்கும். ஆதலின் எத்தகையக் கல்விக்கற்றோர்களேயாயினும் சீவகாருண்யம் ஒன்றுமட்டிலும் இல்லாத வம்மிஷ வரிசையோர்களைக் கண்டறிந்து பெருத்த உத்தியோகங்களை அளித்தல் வேண்டும். அப்போதுதான் தேசமும் சிறப்பைப் பெறும், இராஜாங்கமும் ஆனந்தமடையும், சகல குடிகளும் சுகவாழ்க்கைப் பெறுவார்கள். அங்ங்னக்காணாது சீவகாருண்யம் இல்லாருக்குப் பெருத்த உத்தியோகங்களை அளிப்பதாயின் தேசம் சீர்கெடுவதுடன் இராஜாங்கமுங் கவலைக்குள்ளாகிக் குடிகளும் சுகமற்றுப்போவார்கள்.

சீவகாருண்யம் உள்ளோர்கள் யாவரெனில் தம்மெய் ஒத்த மக்களை தம்மெய்போல் பாவிப்பவர்களும், நூறு குடிகள் சுகம்பெற்று வாழின் தாமும் அவர்களுக்குள் சுகம்பெற்று வாழலாமென்று எண்ணுவோர்களும், மனமாற வஞ்சினம் இல்லாமலும், பொய் சொல்லாமலும், கஷ்டப்பட்டுப்பொருள் சம்பாதிப்பவர்களும், தாங்கள் பசியுடனிருப்பினும் எதிரியின் பசியையாற்றி ரட்சிப்பவர்களும், வீதியிலோர் மனிதன் விழுந்து விடுவானாயின் அவனைத் தாம் தம்மெய் ஒத்தவன் எனக்கருதி அருகில் நெருங்கி எடுத்து ஆதரிப்பவர்களும், அறியாமெயால் ஒருவன் ஏதோ தீங்கு செய்துவிடினும் அவற்றைக் கருதாது அவனுக்கு நலம்புரிவோர்களும், தாங்கள் அருந்தும் சுத்தநீரை சகலமக்களும் அருந்தி சுகம் பெறவேண்டுமென்று எண்ணுகிறவர்களும், தங்களால் ஏனைய மக்களுக்கு சுகமளிக்க இயலாவிடினும் அளிப்பவர்களைக் கொண்டேனும் சுகமளிக்கச் செய்பவர்களும், எத்தொழில் வல்லவர்களாயிருப்பினும், மேலும் மேலும் உழைத்து அத்தொழிலை சகல மக்களுக்கும் உபகாரம் உண்டாகச் செய்வோர்களும், கண்டதைக் கண்டோமென்றும், காணாததைக் காணோமென்று மெய்ப்பேசுகிறவர்களும், தம்மெய் ஒத்த மக்கள் தம்மெய்ப்போல் சுகச்சீர் பெறவேண்டும் என்று எண்ணுகிறவர்களும், சகல மக்களுந் தங்களைப்போல் கல்வி கற்று அறிவின் விருத்தியுண்டாகி சுகச்சீர் பெறவேண்டுமென்று எண்ணுகிறவர்களேயாவர். அத்தகையோர்களுக்கே பெருத்த உத்தியோகங்களை அளிப்பதாயின் அவர்களுக்குள்ளடங்கிய உத்தியோகஸ்தர்கள் யாவருங் களங்கமற்று வாழ்வதுடன் அத்தேச மக்களும் சீரும் சிறப்பும் பெற்று வாழ்வார்கள். அரசாங்கமும் ஆறுதலில் நிலைக்கும். இதுகொண்டே சீவகாருண்யம் இல்லார்க்கு இராஜாங்கத்தின் பெருத்த உத்தியோகங்கள் தகவே தகாதென வற்புறுத்திக் கூறியுள்ளோம்.

- 6:14; செப்டம்பர் 11, 1912 -


270. அரிசி ரூபாயிற்கு நாலு படியே! அரிசி ரூபாயிற்கு நாலு படியே?

தற்காலம் சென்னை முநிசபில் எல்லைக்குள் ரூபாயிற்கு நாலுபடி அரிசி விற்கும்படி ஆரம்பித்துக்கொண்டார்கள். மற்றய தவிடு கலப்பும், பலவகை யரிசி கலப்பும், மண்ணு கலப்பும், சாம்பல் கலப்புமுள்ள அரிசியோ ரூபாயிற்கு ஐந்து படியேயாம். அவற்றை நோக்கி ஏழைகளின் பசியை ஆற்றுவோரைக் காணோம். அதனை விசாரித்து சீர்திருத்துவோரையுங் காணோம். பசி ஏப்பக்காரருக்கும் புளி ஏப்பக்காரருக்குந் தாரதம்மியங் காணாதது போல் பெரிய உத்தியோகஸ்தர்களுக்குப் பெரும்பணமுள்ள படியால் அரிசியின் விலை அறியாது ஆனந்தத்திலிருக்கின்றார்கள். முன்பு இவ்விடந் தங்கியிருந்த பட்டாளங்கள் இவ்விடமிருக்குமாயின் அரிசி மண்டிகளைக் கொள்ளையடிக்குங் கூச்சல் குய்யோமுறையோவென ராஜாங்கத்தோருக் கெட்டிக் கடைக்காரர்கள் தாங்கள் கொள்ளு முதலுக்கு சொற்பலாம் வைத்து விற்கும் படியான விதிகளை உண்டு செய்து விடுவார்கள். அத்தகைய பட்டாளங்களுமில்லை அதனால் மண்டிக்கடைகளை வைத்து அரிசி விற்போர் தங்கள் தங்கள் மனம் போனவாறு பெரும் லாபத்திற்கு ஆசித்து விட்டார்கள். இத்தேசத்துள்ள இதக்கமற்ற குருக்களை பூசிக்கும் இதக்கமற்ற மாணாக்கர்களே மண்டிக்கடைகளின் முதலாளிகளாகி