பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 449


ஓர் பொறாமெமிகுத்தப் பத்திராதிபர் பற்கடிப்பையும் முறுமுறுப்பையும் இவ்விடம் விளக்குகின்றோம்.

இவ்விடம் பப்ளிக் சர்விஸ் உத்தியோகங்களில் போட்டிப்பரிட்சை வைப்பதாயின் பெரும்பாலும் பிராமணர்களே மிகுதியாகிவிடுவார்கள். அதினால் மற்றுமுள்ள சூத்திரர் முதலானோர்களுக்கு இடங்கிடைக்காமல் போய்விடுமென்று ஒரு விவேகி கூறியிருக்கின்றார். அதற்கு மறுமொழி அவ்விடமுள்ளவர்கள் கூறியதைக் காணோம். ஓர் பத்திராதிபர் மறுமொழி யாதெனில் அவரை பிராமண துவேஷியென்று கூறியிருக்கின்றார். இவரது கூட்டத்தோர் என்ன துவேஷியென்று இவரை இவரறிந்துக் கொள்ளவில்லை போலும்.

ஓர் ஆபீசுக்குள் ஓர் மானேஜராக ஓர் பிராமணன் போய் அமருவானாயின் பத்து வருஷத்திற்குள் அவ்விடமுள்ள சகலசாதியோர்களையும் அகற்றித் துரத்திவிட்டு ஆபிஸ் முழுவதும் பிராமணன் என்போர் போய் சேர்ந்துக்கொள்ளுகின்றார்களே அவர்களை இப்பத்திராதிபர் என்ன துவேஷியென்று கூறுவாரோ விளங்கவில்லை சகலசாதி துவேஷிகளென்று கூறப் பொருந்துமோ பொருந்தாதோ என்பதை கூர்ந்து ஆலோசிப்பாராக.

- 6:33; ஜனவரி 22, 1913 -

இந்த பப்ளிக் சர்விஸ் கமிஷன் விசாரிணையின் பொதுவா அபிப்பிராயம் யாதெனில்: ஆயிரத்திச் சில்லரை வருடங்களுக்குமுன் இந்தியதேசத்துள் பிச்சையிரந்துண்டே குடியேறி தங்கள் மித்திரபேத வஞ்சகவேஷத்தால் அதிகாரப்பிச்சை ஏற்றுண்ண ஆரம்பித்தக் கூட்டத்தோர்களுடன் இத்தேசத்திய சில சோம்பேறிகளும் வஞ்சகவேஷமுற்றுப் பெருகி நாளதுவரைபிற் பிச்சையேற்று உண்பதே பெருந்தொழிலாகக்கொண்ட ஓர்வகுப்பினர்மட்டிலும் இங்கிலீஷ்பாஷையை உருவுபோட்டு பாடஞ் செய்துவிடுவதில் மிக்க வல்வவர்களாயிருப்பார்கள். ஆனால் சென்றவருஷம் பி.ஏ. பரிட்சையிற் தேறியவர்களை இவ்வருஷங் கேட்டால் அப்பாடங்களே தெரியாது. அவ்வகை உருபோடுவோர் மற்ற வல்லபத்திலும் யூகையாயத் தொழிற்களிலும் பூஜியம் பூஜியமேயாவர். ஏனையவகுப்போர்களோ வல்லபத்திலும் தொழிலிலும் கையிலும் வல்லவர்களாயிருப்பினும் இங்கிலீஷ் பாஷையை உருபோடுவதில் பூஜியமேயாவர். அவர்கள் உருப்போடுவதில் வைராக்கியமும் இவர்கள் உருப்போடா வைராக்கிய மின்மெக்கும் காரணமோவென்னில் அன்னியரிடஞ்சென்று பிச்சை பெற்றுண்பதே நமக்குத் தொழிலாகிவிட்டபடியால் அவற்றை எவ்வகையாலும் ஒழித்து ராஜாங்க உத்தியோகங்களைப் பற்றிக்கொள்ள வேண்டுமென்னும் வைராக்கியத்தினால் ஆங்கிலபாஷையை உருப்போட்டு ஒப்பித்து விடுகின்றார்கள். ஏனையோர்களோ எத்தொழிலிலேனும் உழைத்துப் பாடுபடும் இயல்புள்ளவர்களாதலின் வைராக்கியமின்றி பின்னிடைகின்றார்கள். அதனால் போட்டிப் பரிட்சை என்பதை வைப்பதும் அவர்களுக்குக் கலைக்ட்டர் உத்தியோகங்களைக் கொடுப்பதும் இத்தேசத்திற்குப் பொருந்தாவாம். அதனினும் இத்தேசத்துள்ளப் பெரும்பாலோர் அவர்களையே குருவாகப் பாவித்தும் அவர்கள் மொழிகளையே கடவுள் மொழியென்று ஏற்றும் சகலசாதிகளிலும் அவர்களே பெரியசாதிகளென பயந்தும் நடந்து வருகின்றவர்களானபடியால் சாதிக் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய சகலசாதியோரும் சாதித்தலைவர்களுக்கு அடங்கி வாழ்வதே வாழ்க்கையாயிருக்கின்றது. இத்தகைய வாழ்க்கையுள்ளோர் தேசத்தில் சாதித்தலைவர்களாய் உள்ளவர்களுக்கும் குருவாய் உள்ளவர்களுக்கும் உள்ள அதிகாரத்துடன் தேசத்தை ஆளும் கலைக்ட்டர் அதிகாரத்தையும் கொடுத்துவிட்டால் தேசக்குடிகளில் சாதிபேதமில்லாமல் வாழும் சகல குடிகளும் நாசமடைவதற்கு ஏதுக்களுண்டாவதுடன் இராஜாங்கத்தைக் குடிகளைக்கொண்டே எதிர்ப்பதற்கும் எளிதாகிவிடும். காரணமோவென்னில் சாதிபேதத்திற்கு அடங்கி நடக்கும் பேதைமக்கள் யாவரும் அதிகார