பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

456 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தகுதியுடையவர்களென்றும் மறுத்து தங்களுக்குள்ள நீதிநெறிகளையும் அன்பையும் இராஜவிசுவாசத்தையும் பரக்க விளக்கியிருக்கின்றார்கள்.

இவர்களன்றோ தேசத்தையும் தேசமக்களையும் சிறப்புறக் கருதியவர்கள். இவர்களன்றோ மனிதர்களை மனிதர்களாக நேசிப்பவர்கள். இவர்களன்றோ பேரவா என்பதற்று பிரபலமிகுத்தக் கருணைநிறைந்தவர்கள். இவர்களன்றோ நேராய ராஜவிசுவாசிகள். இத்தகைய குணநலமிகுத்தோர் கல்வியில் தேறி கலைக்டர் உத்தியோகம் பெற்று இந்தியதேயத்திற்கு வருவார்களாயின் அவர்களே ஐரோப்பியர்களுக்கு ஒப்பாயக் கலைக்ட்டர்கள் என்று எண்ணப்படுவார்கள். அப்போதே இந்தியாவும் சீர்பெறும் இந்திய தேச மக்களும் சுகமடையவார்களென்று எண்ணப்படும்.

- 6:37; பிப்ரவரி 19, 1913 -

அதாவது இத்தேசமெங்கும் புத்ததன்மம் நிறைந்திருந்த காலத்தில் வடதேசத்தோர் யாவரும் சற்குருவை புத்தரென்றும் தென்தேசத்தோர் யாவரும் இந்திரரென்று கொண்டாடி எங்கும் இந்திரவிழாக்களையே உற்சாகமாக நடாத்திவந்த பெரும்பேற்றினால் தேசத்தை இந்தியதேசமென்றும், மக்களை இந்தியர்களென்றும் தென்தேசத்தோரும் வடதேசத்தோரும் ஒற்றுமெயிலும் ஐக்கியத்திலும் நிறைந்து சத்தியதன்மமாம் நீதிநெறி ஒழுக்கத்திலும் சீவகாருண்யம் அமைதியிலும் உலாவிநின்றவர்களாதலால் வடயிந்தியர்களென்றும் தென்னிந்தியர்களென்றும் வழங்கப் பெற்று குருவிசுவாசம் இராஜவிசுவாசத்தில் லயித்து வித்தை, புத்தி, பீகை, சன்மார்க்கம் பெருகி சுகவாழ்க்கைப் பெற்றிருந்தோரே இந்தியரென்று அழைக்கப்படுவோராவர்.

இந்துக்கள் என்போரோ நூதனமாக இத்தேசத்துள் குடியேறி பிச்சை இரந்துண்டு பல இடங்களிற் பரவிவரும் அக்காலத்தில் இத்தேசத்திலுள்ள மக்களுள் திராவிட பாஷையையே சாதிக்கும் கூட்டத்தோரை திராவிட சாதியோரென்றும் மராஷ்டக பாஷையை சாதிக்குங் கூட்டத்தோரை மராஷ்டகசாதியோரென்றும் ஆந்திரபாஷையையே சாதிக்கும் கூட்டத்தோரை ஆந்திரசாதியோரென்றும் கன்னடபாஷையையே சாதித்தக் கூட்டத்தோரை கன்னடசாதியோரென்றும் பாஷைப்பிரிவினையா யிருந்தபோதினும் மக்களுள் சீனராஜன் மகளை வங்காளராஜன் கட்டுகிறதும், வங்காளராஜன் மகளை திராவிடராஜன் கட்டுகிறதும், திராவிடராஜன் மகளை சிங்களராஜன் கட்டுகிறதுமாகிய மனுகுலச்செயலை அரசு எவ்வழியோ குடிகளும் அவ்வழியென அன்பும் ஐக்கியமுமுற்று வாழ்ந்திருந்ததுமன்றி அரசர்கள் முதல் குடிகளீராகவுள்ள யாவரும் பௌத்த மடங்களிலுள்ள சமணரிற் சித்திபெற்ற அறஹத்துக்களாம் அந்தணர்களைக்கண்டவுடன் வணங்குதலும் அவர்களுக்கு வேண்டியவைகளை அளித்தலும் அவர்கள் போதனைகளுக்கு பயந்து நடத்தலுமாகியச் செயல்களிலும் இருந்தவற்றை நாளுக்குநாள் பார்த்துவந்த நூதனக்குடியேறிய மக்கள் பயந்து பயந்து பிச்சையேற்று உண்பதினும் புத்தரங்கத்தோர் முக்கியமாக சாதித்துவரும் சகடபாஷையிற் சொற்பங் கற்றுக்கொண்டு அந்தணர் வேடம் அணிந்து கொண்டால் அதிகாரத்துடன் பிச்சை ஏற்றுண்ணலாமென்றெண்ணி அறஹத்துக்களைப்போல் வேஷமிட்டு கல்வியற்ற குடிகளிடத்தும் காமியமிகுத்த சிற்றரசர்களிடத்துஞ் சென்று தங்களை அந்தணர் அந்தணரென்று கூறி அதிகாரப்பிச்சை ஏற்றுண்ணுங்கால் இவர்களது செய்கைகள் யாவும் புத்ததன்மத்திற்கு எதிரிடையாக மாடுகளை நெருப்பிலிட்டுச் சுட்டுத் தின்பதும், குதிரைகளை நெருப்பிலிட்டுச் சுட்டுத் தின்பதும், மக்களை நெருப்பிலிட்டுச் சுட்டுத்தின்பதுமாகிய சீவகாருண்யமற்ற மிலேச்ச செய்கைகளையும், நாணமற்ற ஈனச்செயல்களையுங் கண்டுவந்த வடதேசத்தோர் இவர்களை ஈன, இன்டென்றும் தென்தேசத்தோர் இவர்களை மிலேச்சர் ஆரியரென்றும் சூளாமணி திவாகரம் நிகண்டு முதலிய நூற்களில் வரைந்துள்ளதன்றி வடதேசத்தோர் பிரபல சுருதியாக வழங்கிவந்த ஈன இந்தென்னுமொழியே மகமதியர் காலத்தில் இந்திலோகா இந்து லோகாவென்னும் மொழியே மிகுப் பிரபல சுருதியாகவழங்கி தற்காலம்