பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/585

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 537

இராமசாமி என்னும் பெயர் வைத்துக் கொண்டிருப்பானாயின் அவனை பிராமணரென்று மற்றவர் அறிய இராமசாமி சர்மா என்னும் தொடர் மொழி சேர்த்துக் கொள்ளல் வேண்டும். ஒரு க்ஷத்திரியன் முத்துசாமி என்னும் பெயர் வைத்துக்கொண்டிருப்பானாயின் அவனை க்ஷத்திரியனென்று மற்றவர் அறிய முத்துசுவாமிவர்மா என்னும் தொடர்மொழியை சேர்த்துக் கொள்ளல் வேண்டும். ஒரு வைசியன் பொன்னுசாமி என்னும் பெயரை வைத்துக் கொண்டிருப்பானாயின் அவனை வைசியன் என்று மற்றவர் அறிய பொன்னுசாமி பூதி என்னும் தொடர் மொழியைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

யீதன்றி சச-ம் வசனத்தில் இவர்கள் வருணாசிரம விதிப்படி பிராமணன் பஞ்சு நூலினாலும், க்ஷத்திரியன் சணப்ப நூலினாலும் வைசியன் வெள்ளாட்டு மயிரினாலுந் திரித்த பூ நூலணைதல் வேண்டும்.

(மநு) மாமிஷத்தின் விதிவிலக்கு

ஙக-வது வசனம்.

பிராமணன் செய்யும் எக்கியத்திற்கே பசுக்களை பிரம்மா உண்டு செய்திருக்கின்றார்.

(மநு) அநித்தியயனம் கக-வது வசனம்.

சூத்திரன் சமீபத்திலிருக்கும்போது வேதத்தை வாசிக்கப்படாது. (மநு) யூகிதாக்கினி விஷயம் எக - ம் வசனம்.

ஒரு பிராமணன் பதிதர், சண்டாளர், புழுக்கையர், வண்ணார், செம்படவர் இவர்களுடன் ஒரு மரத்திலடியிலேனும் வாசஞ் செய்யப்படாது.

(மநு) சங்கர்சாதியா னுற்பத்தி ச-ம் வசனம்.

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் நான்கு வருணந்தவிர ஐந்தாவது வருணங் கிடையாது.

(மநு) உதாஹரணம் அஉஉ-ம் வசனம்.

ஒரு சூத்திரன் மோட்சம் வேண்டுமானாலும் பிராமணனையே தொழுதுவரவேண்டும், ஜீவனம் வேண்டுமானாலும் பிராமணனையே தொழுது கொண்டு வரவேண்டும்.

- 2:6: சூலை 22, 1908 -

பராசஸ்மிருதி முதலத்தியாயம். 22-ம் வசனம்.

எக்கியத்திற்காகப் பசுக்களைக் கொல்லலாம்.

பராசஸ்மிருதி முதலத்தியாயம். 177-ம் வசனம்.

பிராமணரென்றும் வேதியரென்றும் அழைக்கப்பெற்றோரை கடவுள் வேள்விசெய்வதற்கே படைத்தார்.

பராசஸ்மிருதி ஆசாரகாண்டம். 164-ம் வசனம்.

எந்த பிராமணனாயினும் வேதத்தை ஓதாமல் வேறு நூற்களை போதிக்கின்றானோ அவன் சூத்திரனுக்கொப்பாவான்.

இத்தகைய மநுஸ்மிருதி கட்டளைகளையும் பராசஸ்மிருதி கட்டளைகளையும் குறிக்கவேண்டிய காரணம் யாதென்பீரேல்,

பெளத்த தன்மசாஸ்திரிகள் ஏற்படுத்தி இருந்த தொழிற்பெயர்கள் யாவையும் மேற்சாதி கீழ்ச்சாதி என்று ஏற்படுத்தி அவர்கள் செய்துவந்த பிராமணர்கள் செய்கைக்கு மாறுபாடுடையோரை வேஷப் பிராமணர் என்று கூறினும், இக் கீழ்சாதி மேற்சாதி என்னும் சாதிகளுக்கு ஆதாரமாக ஏற்படுத்திக் கொண்ட மநுஸ்மிருதி பராசஸ்மிருதி இவ்விரண்டிலும் வரைந்துள்ளபடிக் கேனும் இவர்கள் வேஷப்பிராமணர்களா அன்றேல் யதார்த்த பிராமணர்களா என்பதை இன்னும் விளக்க வேண்டியதற்கேயாம்.

(மநு) பத்தாவது அத்தியாயம்
86, 87, 88, 89, 92

பிராமணன் இரச வஸ்துக்கள், சமைத்த அன்னம், எள்ளு, கெம்புக்கல், உப்பு, மனிதர், பசுக்கள், சிவந்த நூல், வஸ்திரம், சணப்பு, பட்டு, கம்பளம், பழம், கிழங்கு, மருந்து, ஜலம், ஆயுதம், விஷம், மாம்ஸம், கருப்பூரம், வாசனா திரவியம், பால், தேன், தயிர், எண்ணெய், மது, வெல்லம், தருப்பை, யானை,