பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/630

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

582 / அயோத்திதாசர் சிந்தனைகள்


மாதவரின் மாதவநீஇ வானவருள் வானவநீஇ
போதனரிற் போதன நீஇ புண்ணியரிற் புண்ணிய நீஇ.
ஆதிநீஇ அமலநீஇ அயனுநீஇ அறியுநீஇ
சோதிநீஇ நாதநீஇ துறைவநீஇ இறைவ நீஇ
அருளுநீஇ பொருளுநீஇ அறிவநீஇ அநகநீதி
தெருளுநீஇ திருவுநீஇ செறிவுநீஇ செம்மரீஇ.

இத்தியாதி உத்தமநிலை வாய்த்து உலகநாதனென்றும் ஜெகத்து இரட்சகனென்றும் பெயர் பெற்ற ஏகச்சக்கிராதிபதி சித்தார்த்தியவர்கள் தனது முப்பதாவது வயதில் கல்லாலவிருசத்தினடியில் வீற்றிருந்து ஓதாமலுணர்ந்து உள்ளத்துறவடைந்து சுகவாரியாம் நிருவாணநிலை அடைந்தார்.

அருங்கலைச்செப்பு - நிருவாணப்பத்து

ஆறைந்த தாண்டி லைம்புலனை வென்றான் / கூறுகல்லாலத்தின் கீழ்
தூயநிலைமந் துறவுஞ் சுகநிலையும் / ஆயவகநிலையதாம்.
உலகுணர்ந்தான் வேந்த னுள்ளத்திருந்து / பலகலையு மீய்ந்தான் பரன்.
இறையா யிறைகவர்ந்தா னேகசக்ராதி / துறவாய் துணை யகன்றான் றோள்.

ஏகசக்கிராதிபதியாகிய புத்தபிரான் முப்பதாமாண்டில் மண், பெண், பொன்னென்ற முப்பொருளாசையை அறுத்து மெய்ப் பொருள் அன்பில் நிலைத்து நிருவாணம் பெற்றது போல் அவரால் உலகெங்கும் நாட்டிய புத்தசங்கத்தோரும் அதே முப்பதாவதாண்டில் சகல பற்றுக்களையும் ஒழித்து நிருவாணத்திற்கு ஏதுவாம் சமண நிலையாம் ஞானத்தானத்தைப் பெற்று நன்மார்க்கத்தினின்றார்கள்.

சீவகசிந்தாமணி

ஐயாண்டெய்தி மையாடி யறிந்தார் / கலைகள் படைநவின்றார்
கொய் பூமாலை குழன்மின்னுங் / கொழும்பொற்றோடுங் குண்டலமு
மையன்மார்கள் துளக்கின்றி / யாலுங்கலிமா வெகுண்டூர்ந்தார்
மொய்யாரலங்கன் மார்பர்க்கு / முப்பதாகி நிறைந்தே.

சிவயோகசாரம்

முப்பதும் வந்தால் முடியும் முப்பதுஞ் சென்றாலி ருளு
மப்படியேயேது மறிநெஞ்சே - எப்பொழுது
மாங்கால மவ்வினையு மாகுமது துலைந்து
போங்கால மெவ்வினையும் போம்.

நல்வழி

முப்பதாமாண்டளவின் மூன்றற் றொருபொருளைத்
தப்பாமற் றன்னுட் பெறானாயின் - செப்புங்
கலையளவேயாகுமாங் காரிகையார் தங்கண்
முலையளவே யாகுமா மூப்பு.

இதை அநுசரித்தே கிறீஸ்துவானவரும் தனது முப்பதாவது வயதில் காட்டில் லோகஸ்ட் கூர்மமென்னும் கிழங்கும், தேனும் புசித்துலாவி யோவானென்னும் மகாஞானியாரிடம் ஞானதானம் பெற்று குகையிலடங்கி நார்ப்பது நாளையில் ஞானவிழி திறந்து நிருவாணம் பெற்றார்.

புத்தசங்கங்களைச் சேர்ந்த ஒவ்வொருவரும் முப்பதாவது வயதில் ஞானத்தானம் பெற்று பாவத்தின் சம்பளமாகும் மரணத்தை ஜெயிக்கும் காரணம் யாதென்பீரேல்,

- 2:37, பிப்ரவரி 24, 1909 -

ஞானத்தானபலன்

ஆடு, மாடு, கழுதை, குதிரை, இவைகளின் முன்பு வைக்கோல், கொள்ளு, புல்லு, தவிடு முதலிய உணவு பொருள் இருக்கக் காண்கின்றோமன்றி வேறில்லை. மனிதர்களுக்கோ எனில் நான்கு வேதம், ஆறுசாஸ்திரம், பதினெண் புராணம், அறுபத்திநாலு கலைக்கியானங்களும்,

திருச்சபைகளென்றும், திருச்சபைக் கட்டளைகளென்றும், பெரியகுரு - சின்னகுருவென்றும், பெரியபூசை - சின்னபூசை என்றும் இத்தகையக் கூட்டத்தில் சேருவதற்கு ஞானத்தானமென்னும் அறிவினிலை அடைந்தோ மென்றும் சொல்லுவதற்குரிய வாக்கியங்களை பிரயோகிக்கும் ஆதாரங்களை