பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/701

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 653


அதற்குமேல் இதுவே நீரின் பீடமென்றும், இதுவே தேகமெங்கும் பரவிக்குளிரச்செய்யும் பீடமென்றும், தொப்பிழ்வழியே அன்னாகாரஞ் செல்லும் மணிபூரக பீடமென்றும் பிறைபோன்ற மூன்றாவது பீடங் கட்டிவிட்டு;

அதற்குமேல் இதுவே அக்கினியின் பீடமென்றும் தேகமெங்கும் அனலீய்ந்து காக்கும் பீடமென்றும் மார்பின் பாகவிசுத்தி பீடமென்றும் முக்கோணமாக நான்காவது பீடம் கட்டிவிட்டு;

அதற்குமேல் இதுவே காற்றின் பீடமென்றும், தேகத்தின் சகல ஒட்டங்களையும் பரவச்செய்யும் பீடமென்றும், அனாகத பீடமென்றும் கழுத்தில் அறுகோணமாய் ஐந்தாவது பீடம் கட்டிடங்கட்டிவிட்டு;

அதற்குமேல் இதுவே ஆகாயபீடமென்றும், சகலமுந் தன்னுளறியும் பீடமென்றும் சகலத்தையுந் தனதாக்கினைக்குள் நடத்தும் ஆக்கினை பீடமென்றும் வட்டமாக ஆறாவதுபீடங்கட்டி சுற்றுமதில்கள் எழுப்பிவிட்டு சகல மனுக்களையுந் தருவித்து இதுதான் மனிதனுக்குள்ள ஆறாதாரபீடமென்றும், அறுமுகக் கோணமென்றும் இதனை வந்து இடைவிடாது சிந்திப்பவர்கள் சகல சுகமும் பெற்று ஆனந்தவாழ்க்கையைப் பெறுவார்களென்றுங் கூறிய மொழிகளை கல்வியற்றக் குடிகளும் கல்வியற்ற சிற்றரசர்களும் மெய்யென நம்பி ஒவ்வோர் பீடங்களுக்கும் தட்சணை தாம்பூலங் கொண்டுவந்து செலுத்தி தொழுகையை ஆரம்பித்ததின்பேரில் பெருங் கூட்டத்தோர் திராவிட வேஷபிராமணர்களின் சிலாலயங்களுக்குப் போகும்படி ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அதனால் ஆரிய வேஷப் பிராமணர்கள் பொருள் வரவு குன்றி கஷ்டமுண்டாயதால் அவர்கள் கூட்டத்தோர் யாவரும் ஒன்றுகூடி நாம் ஒரேயிடங்களில் சிலாலயங்களைக் கட்டி சீவிப்பதால் கஷ்டமேயுண்டாகும் ஊர்வூராக சுற்றி பொருள் சம்பாதித்துவந்து ஓரிடத்தங்கி சுகம் அனுபவிக்க வேண்டுமென்னும் ஓர் ஆலோசனையை முடிவுசெய்துக்கொண்டு பௌத்தர்களுக்குள் புத்தபிரானுக்குரியப் பெயர்களில் எப்பெயரை முக்கியங் கொண்டாடுகின்றார்கள் அவரை எவ்வகையாக முக்கியம் சிந்திக்கின்றார்களென்று ஆலோசித்து சுருக்கத் தெரிந்துக்கொண்டார்கள்.

அதாவது புத்தபிரான் சருவ சங்கங்களுக்கும் அறத்தைப் போதித்து வந்தபடியால் அவரை சங்க அறரென்றும், சங்க தருமரென்றும், சங்க மித்தரரென்றும் வழங்கிவந்ததுமன்றி அவர் எண்ணருஞ் சக்கரவாளமெங்கணும் அறக்கதிர் விரித்துவந்தபடியால் ஜகத்குருவென்றும் ஜகன்னாத னென்றுங் கொண்டாடிவந்தார்கள். இதனைத் தெரிந்துகொண்ட ஆரிய வேஷப் பிராமணர்கள் தங்களுக்குள் நல்ல ரூபமுடையவனாகவும், ஆந்திரம், கன்னடம், மராஷ்டகம், திராவிடமென்னும் நான்கு பாஷைகளிற் சிலது பேசக்கூடியவனாகவும், கோகரணங் கஜ கரணங் கற்றவனாகவும் உள்ள ஒருவனைத் தெரிந்துகொண்டு அவனுக்கு வேஷ்ட்டி அங்கவஸ்திரம் முதலாயதும் பட்டினால் தரித்து காசிமாலை, முத்துமாலை முதலியதணிந்து தலையில் நீண்டகுல்லா சாற்றி, ஓர் வினோதமான பல்லக்கிலேற்றி சில யானைகளின் பேரிலும் ஒட்டகங்களின்பேரிலும் தங்கள் புசிப்புகளுக்கு வேண்டிய தானியங்களை ஏற்றிக்கொண்டு தங்கள் சுயசாதியோர்களே பல்லக்கை தூக்கிச் செல்லவும், தங்கள் சுயசாதியோர்களே சூழ்ந்து செல்லவுமாகப் பலயிடங்களுக்குச் சென்று ஜகத்குருவந்துவிட்டார், சங்க அறர் வந்துவிட்டார், சங்கற ஆச்சாரி வந்து விட்டார், கிராமங்கடோரும் தட்சணை தாம்பூலங்கள் வரவேண்டும், யானை ஒட்டகங்களுக்கு தீவனங்கள் வரவேண்டுமென்று சொல்லி ஆர்பரிக்குங்கால்.

அவர்களது பெருங்கூட்டத்தையும் பகரு மொழிகளையும் கேட்டப் பூர்வ பௌத்தக்குடிகளிற் சிலர் ஜகநாதனென்பதும் ஜகத்குருவென்பதும், சங்கறரென்பதும், சங்கதருமரென்பதும் நமது புத்தபிரான் பெயராதலின் அவர்தான் வந்திருப்பாரேன்றெண்ணி பேராநந்தங்கொண்டு வேணதட்சணை தாம்பூலங்களை அளிப்போரும் யானை ஒட்டகங்களுக்கு தீவனங்கள்