பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/707

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 659

சொல்லிக்கொண்டே பிச்சையேற்றுண்ணுங்கால் அவர்கள் வார்த்தைகளை நம்பியக் குடிகள் யாவரையும் தங்கள் வசப்படுத்திக்கொண்டு தங்கள் சீவனங்களை விருத்தி செய்துக்கொள்ளுவதும், தங்களுக்கு எதிரடையாயிருந்து தங்கள் பொய்வேஷங்களையும் பொய் போதங்களையுங் குடிகளுக்குப் பறைகின்றவர்களை தங்களுக்குத் தாழ்ந்த சாதியோரென்று கூறி அவர்களைப் பாழ்படுத்தும் ஏதுவிலேயே யிருப்பது இயல்பாம்.

இவ்வாறு செய்துக்கொண்டே வேஷப் பிராமணர்கள் கங்கைக்கரை யென்னும் வடகாசியை அடைந்தபோது அவ்விடமுள்ளக் குடிகள் யாவரும் புத்தபிரானை கங்கை ஆதாரனென்றும் காசிநாதனென்றும் காசி விசுவேசனென்றுங் கொண்டாடி வருவதுடன் பகவன் ஆதிசங்கத்தை அவ்விடம்நாட்டி ஆதிவேதமாம் முதநூலையும் அதனுட்பொருளாம் உபநிடதங்களையும் மறைவற விளக்கிய சிறப்பும் அதேயிடத்தில் பரிநிருவாணமுற்ற சிறப்பும், வடகாசியில் விசேஷமுற்றிருந்தபடியால் இந்திரதேசவாசிகளாழ் சகல மக்களும் அவ்விடஞ்சென்று கங்கையில் மூழ்கி காசிநாதன் அறப்பள்ளியடைந்து சங்கஞ்சார்ந்து தவநிலை பெறுவதும் சென்ற சிலர் அவ்விடத்தங்கி ஆனந்த விசாரிணைப் புரிந்துவருவதுமாகியக் கூட்டங்களின் வரவே மிகுந்திருந்தது.

இவைகள் யாவையுங் கண்ணுற்ற வேஷப்பிராமணர்கள் யாவருக்கும் ஓர்வகைப் பேராசை உண்டாகி இத்தேசத்தரசனை நமது வயப்படுத்திக் கொண்டால் நம்மவர் ஆயிரங்குடிகள் சுகமாக வாழலாம், இது விசேஷ வரவுள்ள நாடாயிருக்கின்றது இங்கு சிலநாள் தங்கி அரசனது குணாகுணங்களையும் அவனது இன்பச்செயல்களையும் ஆழ்ந்தறிந்து நெருங்கவேண்டுமென்னுங் கருத்தால் காசி வியாரத்தையும், அரண்மனையையும் சுற்றி சுற்றி தங்களது யாசக சீவனத்தை செய்துக்கொண்டு வந்தார்கள். அக்கால் அக்காசியம் பதியை ஆண்டு வந்த அரசனின் பெயர் காசிபச் சக்கிரவர்த்தி என்னப்படும். அவனது குணாகுணங்களோவென்னில் பெண்களை தனது சகோதரிகள் போலும் புருஷர்களை சகோதரர்கள்போலும் பாவித்து குடிகளுக்கு தன்மம் போதிப்பதையே ஓர் தொழிலாகக்கொண்டு யாவரையும் நன்மார்க்கத்தில் நடத்தி தனது செங்கோலை சிறப்பிக்கச் செய்துவந்தான். அதனால் தேசக்குடிகள் அரசன் மீதன்பும், அரசனுக்குக் குடிகள்மீதன்பும் பொருந்தி வாழ்ந்துவந்தார்கள்.

அதனால் இவ்வாரிய வேஷப்பிராமணர்களின் தந்திரங்களும், மித்திரபேதங்களும் செல்லாது எவ்வித உபாயத்தேனும் அரசனைக் கொன்று விட்டு தேசத்திற் குடிக்கொள்ளவேண்டுமென்னும் எண்ணத்தால் காலம் பார்த்திருந்தார்கள்.

அக்கால் காசிபச் சக்கரவர்த்தி மைந்தனில்லாக் குறையால் மந்திரிகளையும் நிமித்தர்களையுந் தருவித்து தனக்கு நாற்பது வயது கடந்தும் புத்திரனில்லாக் காரணம் தெரியவில்லை அவற்றைக் கண்டாராயவேண்டுமென்று தனது சாதக ஓலையை நீட்டினான். நிமித்தகர்களாகுங் காலக்கணிதர்கள் சாதகவோலையைக் கண்ணுற்று அரசருக்கு நான்காவது சனிதிசை நடப்பும், மாரகாதிபுத்தியும் நடப்பதால் திடுக்கிட்டு அரயனுக்கு யாதொன்றும் கூறாது இதன் கணிதங்களை நன்றாராய்ந்து நாளை பகர்வோமெனக் கூறி அவரவர்கள் இல்லஞ் சேர்ந்து மாலையில் மந்திரிப் பிரதானிகளுடன் கலந்து அரசனது மிருத்துவின்காலத்தை ஆலோசித்தார்கள்.

ஒவ்வொருவருங்கூடி ஆலோசித்த காலகணிதத்தில் அரசனது மிருத்தியு பட்சத்திற்கு உட்பட்டிருப்பதினால் அவற்றை அவருக்கு எப்படி சொல்லுவதென்றச்ச முற்றிருக்குங்கால் பிரதம மந்திரி நிமித்தகரை நோக்கி பெரியோய், இசசங்கதிகள் யாவையும் அரசனுக்கு அறிவிக்காமலிருக்கப்படாது, அரசனுந் தனது மரணத்திற்கஞ்சமாட்டார், செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் செவ்வனே முடித்து அரசுக்கு வேண்டிய அதிபதியானையும் நியமித்துவிட்டு அறஹத்துகளை யடுத்து மறுமெயின் சுகத்திற்கு வழிதேடிக்கொள்ளுவார்கள்.

இச்சங்கதியை நாம் அடக்கலாகாது, உடனே சொல்லவேண்டுமென்று முடிவுசெய்து உதயமெழுந்து அரசனிடஞ்சென்று தாங்கள் ஆராய்ந்துள்ள