பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/742

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

694 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வேளாளனொரு சாதியென்றும் வழங்கிக்கொண்டுவந்ததுமன்றி நாளதுவரையிலும் வழங்கி வருகின்றார்கள். இவ்வேஷப்பிராமணர்களுக்கு மற்றசாதியோர்களைப்பற்றி யாதொரு அக்கரையும் முயற்சியுங் கிடையாது. தங்களுக்கு எதிரிகளாக நின்று தங்கள் வேஷப்பிராமண தந்திரங்களையும் தங்கள் பொய்மதப் போதகங்களையும் விவரமாக சகலருக்கும் பறைந்துவந்த பௌத்தர்களைத் தாழ்ந்த சாதிப் பறையர்களென்று தாழ்த்தி அவர்களைத் தலையெடுக்க விடாமலும் அவர்கள் எவ்வழியாற் சீர்பெறுகின்றார்களோ அவ்வழிகளுக் கெல்லாம் இடுக்கங்களை உண்டு செய்துவருவதுமல்லாமல் அன்னிய தேசத்திலிருந்து இவ்விடங் குடியேறிவருபவர்களுக்கும் இவர்களைப் பற்றி இழிவாகக் கூறி இன்னும் தாழ்ச்சியடையச் செய்துவருகின்றார்கள். தங்களை உயர்ந்த சாதி பிராமணர்களென்றும், தங்களுக்கு எதிரிகளாய பௌத்தர்களை தாழ்ந்தசாதிப் பறையர்களென்றுங் கூறிவழங்கிவந்தபோதிலும் சாதியென்னும் மொழி தோன்றிய விவரமும் அதன் பொருளும் இவர்களுக்கு இன்னுந் தெரியவேமாட்டாது.

மேற்சாதி கீழ்ச்சாதியென்னும் பொய்க்கதைகளை ஏற்படுத்தி தங்கள் சொல்வல்லபத்தால் மெய்போலும்மே மெய்ப்போலும்மே சொல்லிவந்த போதிலும் இம்மேற்சாதி கீழ்ச்சாதியென்னும் பொருளற்றக் கற்பனாகதைகள் விவேகிகள் தோன்றுங்கால் பொய் பொய் பொய்யெனப் பொருந்த விளங்கிப்போம். சாதி, சாதியென்பது அவர்கள் சாதனத்தைக் குறிக்கும் மொழியேயாம். தற்காலம் அம்மொழியை ஜாதி ஜாதியென வழங்கி பொருள்கெட்டு மயங்கச் செய்திருக்கின்றார்கள்.

- 4:39; மார்ச் 8, 1911 -


34. கம்மாளர் பறையர், சக்கிலியர்

வினா : பூர்வபௌத்த சக்கரவர்த்திகளின் வமிஷவரிசையோரும் பௌத்த சிகாமணிகளுமாயிருந்து தற்காலம் பறையரென்று அழைக்கப்படுவோர்களுமாய ஏழை மாக்கள் விசுவபிரம்ம குலத்தாரென்னும் கம்மாளரிடம் ஜலபானஞ் செய்யாதுஞ், சாதமுதலியது உண்ணாதுந் தங்களைவிட கம்மாளர் கீழானவர்களென்றுக் கொண்டுள்ள வைராக்கியம் யாதுக்கு?

கோசிங்கிகள் என்றழைக்கப்படுஞ் சக்கிலியரை பறையரென்போர் மாமன் மைத்துனன் உறவாய் முறை கொண்டாடி, உண்பன, கொள்வன, கொடுப்பனவைகளிற் சம்பந்தப்படாமனிற்பதோ ஒருவருக்கொருவர் வீதிகளில் ஒருவர்க்கொருவர் பாதரட்சையணிந்து ஏகாது உறுதிசெய்துக்கொண்டு, இவ்விருதரத்தாருள் யாரேனுந் தெரிந்தோ அல்லது தெரியாதோ வீதிகளில் பாதரட்சை அணிந்தேகினால் இருவருப்பாரும் பஞ்சாய சபைக்கூட்டி தவறு செய்தவனிடம் அபராதம் முதலியவைகள் வாங்கிவருவதெற்றுக்கு?

பறையரென்று அழைக்கப் பெற்றோரிற் சிலர் தங்களை முத்திரை தானம் பெற்றோர்களென்று கூறி தங்களில் இறந்துபோகும் ஆண்பெண் பாலாரின் சவத்தை சப்பளித்து உட்கார வைத்து இருகைகளுங் கூப்பியபடி நிற்க இரு புறமுங் கொம்புகள் நாட்டி அதிற் பிணித்துப் பந்தினர் யாவரும் அடியேம் தாரையா சுவாமி என்று மும்முறை பிணத்தெதிர் பணியுங்கால் அவர்களுளோர் முதியவர் ஏதோ சிலமந்திரங்கட் கூறி “அடியார் கொப்பனையா, அல்லது ஆசாரியர்க் கொப்பனையா” யென்று வினவ யாவரும் ஆசாரியர்க் கொப்பனையென்று கூறியபின் ஓர்மங்கிலியமாது யாருடனும் பேசாது மெளனமாய் சமைத்த சாதமதை யாவரும் உண்டானதும் பிரேதத்தை அதற்கென்று ஏற்படுத்திய ஓர்பாடையில் ஒட்கார்ந்தபடியாகவே வைத்து அடக்கஞ் செய்து இல்லமேகும் விவரங்களையும் அடியார்கட்பேரில் மிகுந்த தயை புரிந்து விளக்குவிப்பீர் ::சி. முத்துகுமாரசுவாமி, நாதமுனி, தீர்த்தகிரி, உபாத்தியாயர், ஜோலார்பதி.

விடை: ஜோலார்பதி உபாத்தியாயர்களே! சற்றுநோக்குவீர்களாக. தாங்கள்