பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/750

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

702 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வாழ்ந்துவந்தவர்களாதலின் அதிக யுத்தத்திற் கிடந்தராது அரண்மனை முகப்பில் வெண் கொடிகள் நாட்டி சாமத்தையும் தானத்தையுமே கையாண்டு காலத்தைப் போக்கிவந்தார்கள். அதனாலேயே வஞ்சகமும் சூதுங் குடிகெடுப்பும் பொறாமேயு மிகுத்த அன்னியதேச மித்திர பேதச் சத்துருக்கள் மேற்கொள்ளுவதற் கிடமுண்டாகி இந்திரர் தேசம் பாழடைவதற்கு ஏதுவாகி விட்டது. ஆயினும் அப்பௌத்தர்கள் செய்துவந்தப் புண்ணியப்பெருக்கே பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி யாவையுஞ் சீர்திருத்தி வருகின்றது.

தற்கால யுத்தங்களோ வென்னில் சிறு துப்பாக்கியை ஒருவன் ஏந்தி சுட்டவுடன் ஒருவரிருவர் மரிப்பதும், பெருந் துப்பாக்கியை ஒருவன் ஏந்தி சுட்டவுடன் எட்டு பேர் பத்து பேர் மரிப்பதும் பீரங்கியைக் கொண்டு சுட்டவுடன் ஐன்னூறு ஆயிரம் பேர் மரிப்பதும், மற்றும் பெரும் அவுட்டுகளையும் வெடிகுண்டுகளையும் வைத்து சுட்டவுடன் ஆயிரம் இரண்டாயிரம் பேர் மரிப்பதும் விலாமுரிந்தும், கால்கை உடைந்தும், குடல் சரிந்தும், எடுத்துக் காப்போரின்றி குத்துயிரில் கொடுந் துன்புற்று தவிப்போருமாகியக் கோரங்களைக் கேட்டும் ஏதோ மனம்பதருங்கால் அவர்களைக் கண்ணினால் காணும் மக்கள் எவ்வகைக் கதருவார்களோ விளங்கவில்லை. ஆடுகளைப்போலுங் கோழிகளைப்போலுந் தங்களை ஒத்த மக்களைக்கொண்டு போய் மடியவைத்து மன்னர்கள் என்ன சந்தோஷத்துடன் இராட்சியம் ஆளப்போகின்றார்களோ அதுவுந் தெரியவில்லை. சருவசீவர்களும் தங்களுயிர்களைக்காப்பாற்றிக்கொள்ள முயல்வது அநுபவக் காட்சியாகும். இவற்றுள் சருவசீவர்களிலும் சிறந்தவர்கள் மக்களென்றறிந்தும் அவர்களுள் குடிப்படை, கூலிப்படை யென வகுத்து அவர்களைக் கொண்டுபோய் வீணே மடித்துத் துன்புறச் செய்வதினும் அத்தகைய வரசாட்சியை இச்சியாமலிருப்பதே தன்மமன்றோ. கடவுளுண்டு, கடவுளுண்டு எனச் சொல்லித்திரிபவர்க்கு கருணையென்பது ஒன்றில்லாமற் போமாயின் உலகநீதி ஒழுங்குறுமோ, ஒருக்காலும் ஒழுங்குறாவாம்.

உன் கடவுள் என் கடவுளென்னும் வெறுஞ்செருக்கும், உன்மதம் என்மதமென்னும் மதச்செருக்குமே கருணையென்பதற்று, கோபவெறியேறி தாங்களேயாத்த வலையிலுந்துக்கத்திலும் வாதைப்படுவதன்றி தங்குடிப்படை களையுங் கூலிப்படைகளையுங் கொண்டுபோயழித்து மீளா துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றார்கள். இதுவே தற்கால யுத்தங்கள் என்னப்படும்.

- 6:25; நவம்பர் 27, 1912 -


42. வித்தியாவிருத்தியில் கண்டுபடிப்பது படிப்பா காணாது தன் பெண்டு பிள்ளைகளைமட்டிலுங் காப்பாற்ற படிப்பது படிப்பா

வித்தியாவிருத்தியில் கண்டு படிக்கும் படிப்பு யாதெனில்:- தான் கற்றவளவில் நின்று உலகத்தில் அங்கங்குள்ள தேசத்தோர் உலோகங்களைக் கொண்டும், மரங்களைக் கொண்டும், உபரச சத்துக்களைக் கொண்டும், பஞ்சுகளைக் கொண்டும், தானியங்களைக் கொண்டும், அனந்தமான வித்தைகளைக் கண்டுபிடித்து தாங்களுந் தங்கள் மக்களும் சுகசீவனத்தை அடைவதுடன் ஏழை மக்களும் அவர்களுடைய குடும்பங்களும் சுகசீவனம்பெற்று சுகவாழ்க்கையிலிருப்பதை நோக்கி தாங்களும் அத்தகைய வித்தைகளை விரும்பி அறிவை பெருக்கி எடுத்த வித்தையை முடிப்பதே கண்டுபடித்ததின் செயலும் அதன் பயனும் சகல மக்கள் விருத்திக்கும் ஆதாரமுமாக விளங்கும்.

அதாவது டிராம்வே என்னும் மின்சார வண்டியையும் அதன் விருத்தியையும் அதன் பயனையும் ஆலோசிப்போமாக. மின்சார வண்டியைக் கண்டுபிடித்தவன் B.A. M.A. L.T வாசித்தவனன்று. தனது சுயபாஷையை சீராகக் கற்று வித்தையில் விவேகத்தை வளர்த்து உலோகங்களைக் கொண்டும், மரங்களைக் கொண்டும் பண்டியை முடித்து உபாசங்களென்னும் மின்சாரங்களைச் சேர்த்து மாடு குதிரை ஏதுமின்றி உபரச சத்துக் களைக்கொண்டே இழுக்கவும் விடவுங்கொண்டு செய்துவிட்டபடியால் அதன் பயனால் தானுந் தனது