பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30 / அயோத்திதாசர் சிந்தனைகள்


தென்றும் தேசக்குடிகள் யாவரால் நசுங்குண்டு நாகரீகமற்றார்களென்றும் அவ்வகைக் கேட்டுக்குள் அமைந்தக் குடிகள் சிலர் யாவரால் கிஞ்சித்து சுகமடைந்து பூர்வநிலைகளை நாடுகின்றார்கள் என்றும் ஆய்ந்தோய்ந்து சுதேசியத்தை சீர்திருத்துவார்களாயின் சகலரும் சுகமடையலாம். அங்ஙனமின்றி பிள்ளையையுங்கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் சுயப்பிரயோசன சோம்பேரிகளுடன் பட்டு சுதேசிய சீர்திருத்தத்தை நாட்டுவது சேற்றில் நாட்டுங் கம்பம் போல் முடியும்.

அதாவது எடுத்துள்ள சீர்திருத்தங்களுக்கு அதிகாரிகளும் இதங்கி சுதேசிய சுகத்தை அருளிச்செய்வார்களாயின் தங்கள் சுயப்பிரயோசனத்தை நாடி சகலரையுங் கெடுத்து வாழ்வோர் இத்தேசத்திலுள்ள சகலருக்கும் யாங்களே மேலானவர்களாதலால் மேலதிகாரங்கள் யாவையும் நாங்கள் அநுபவிக்க வேண்டும் எனத் தங்கள் சுயசாதியோர் யாவரையும் ஒன்றாகச் சேர்த்து அதிகாரக்கூடங்களில் வைத்துக்கொண்டு மற்றவர்களைக் கோலுங்குடுவையுங் கொடுத்து அல்லோகல்லத்தி லலையச்செய்துவிடுவார்கள்.

அங்ஙனஞ் சுதேசிகள் என்போர் ஓர்வகைக் கூட்டத்தினரின்றி பலவகுப்பினராயுள்ளமெயால் ஒருவருக்கொருவரைத் தாழ்த்தியும் உயர்த்தியும் நிலைகுலைந்திடுவார்கள் என்று ஆலோசித்து சுதேசிகள் என்போர்க்கு இடங்கொடாமல் பிரிட்டிஷ் ராஜாங்கத்தை இன்னும் நிலைபெறச் செய்துவிடுவார்களாயின் சுயப்பிரயோசன சுதேசிகள் சமையோசித வேஷமிட்டு ஆரியவர்த்தத்தினின்று அவர்கள் அப்படிப் போனவர்கள் நாங்கள் இப்படி வந்தவர்களாதலின் இருவர்களும் ஒருவர்களென்னும் முறைக்கூட்டி அவ்வழியிலுந் தங்கள் சுயப்பிரயோசனத்தை வலுவு செய்து கொள்ளுவார்கள். மற்றவர்களோ ஈட்டி முனையில் உதைத்தவர்களைப்போல் இடுக்குண்டுப் புண்பட்டவர்களாய் தற்காலம் அடைந்திருக்குங் கிஞ்சித்து சுகத்தையும் பறிகொடுத்துப் பாழாகவேண்டிவரும்.

அதுவுமின்றி சுதேசிகள் எனச் சிலர் தோன்றி சுதேசியக் காண்டில், சுதேசிய மாச்சிஸ், சுதேசிய சோப், சுதேசியக் காகிதம், சுதேசியப் பென்சில், சுதேசிய சருக்கரைச் செய்து விற்பனைச் செய்வார்களாயின் இவற்றை ஐரோப்பியரும் யூரேஷியருமன்றி மற்றவர்கள் பெரும்பாலும் வாங்குவரோ. இல்லை, இல்லை. சிமிளி விளக்கு ஒன்று வாங்கினால் சீக்கிரத்தில் உடைந்து துட்டு சிலவாகும். ஒரு காசுக்குத் தகரக் குடுக்கைவாங்கி ஒருகாசுக் கிரசன் எண்ணெய் விட்டுத் தீபமேற்றி வாயிலும் புகை, நாசியிலும் புகை, வீட்டிலும் புகையை நிரப்பிக் கொள்ளுவோர் காண்டில் வாங்குவரோ. பைநிரம்பப் பணமிருந்தாலும் பக்கத்து வீட்டிற்கு நெருப்புக்குப் போகிறவர்கள் மாச்சிஸ் வாங்குவார்களோ. நல்லவெல்லம் வாங்கினால் மூன்றணா வீசை யாகும் பனைவெல்லம் வாங்குவது நலமென்போருக்கு அஸ்டகிராம் சருக்கரை உதவுமோ. ஓலை எழுத்தாணி விசேஷமென்போருக்குக் காகிதம் பென்சில் கைநிரம்புமோ.

- 1:12; செப்டம்பர் 4, 1907 -

நெல்லஞ்சோற்றுக்குக் கடித்துக்கொள்ளப் பதார்த்தம் வேண்டுமோ என்போருக்கும், பணஞ் சிலவிட்டு பெட்டி வாங்குவானேன். வஸ்திரங்களைப் பானைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்போருக்கும், மில் துணிகள் வாங்கிக் கட்டுவது எங்களுக்கு வழக்கங் கிடையாது, காடா துணிகளே வேண்டும் என்போருக்கும், கோதுமை உரொட்டி எங்களுக்குப் பிடியாது சோளரொட்டிதான் சுகமென்போருக்கும், பஞ்சு தலையணை வைத்து படுப்பதில் நித்திரைவாராது தலைக்கு மணையைவைத்துப் படுப்பதே குணம் என்போருக்கும், பணஞ்சிலவிட்டு விறகு வாங்குவானேன் இலைகளைக்கூட்டி எரிப்பதே இதம் என்போருக்கும், வண்ணானுக்கு வஸ்திரம் போடுவது வீண்சிலவு வீட்டில் துவைப்பதே வழக்கமென்போருக்கும், பத்தாயிரம் ரூபாய் கையிலிருந்தாலும் பதிங்காதவழியில் ஓரணா பிச்சைக் கொடுக்கின்றார்கள் என்றால் இடுப்புத்துணியை இறுகக் கட்டிக்கொண்டு இரப்பெடுக்க ஓடி யாசகம் வாங்குபவருக்கும் சுதேசகாண்டில் - சுதேச சோப் - சுதேச மாச்சிஸ்