பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 / அயோத்திதாசர் சிந்தனைகள்

21. அரிச்சந்திரன் மெய்யனென்னுங் காதையும்
பொய்யனான விவரமும்

அயோத்தியாபுரியை அரசாண்டுவந்த திரிச்சங்கு மைந்தன் அரிச்சந்திர னென்னும் ஓர் அரசன் இருந்ததாகவும் அவன் பொய் சொல்லாவாசகன் என்றும் ஓர் புராணம் இயற்றி இருக்கின்றார்கள். இதற்குமுன்னுள்ள சரித்திராதாரங் கிடையாது. இதன் காலவரையோ 384-வருடங்களுக்குமுன் சாலிவாகன் சகாப்தம் 1446-வருடம் நெல்லூர் ஆசுகவி - வீரகவிராயரால் இயற்றியதாகக் குறிக்கப்பட்டிருக்கின்றது. செய்யுட்களின் பேதங்களோ புராதனப் புலவர்கள் செய்யுட்களாகக் காணாமல் தற்காலப் புலவர்கள் செய்யுளாக விளங்குகின்றது.

எவ்வகையதென்னில் - செந்தண்மெய் உடைய அறஹத்துக்களை வடமொழியில் பிராமணர்கள் என்றும், தென்மொழியில் அந்தணர்கள் என்றும் பூர்வச் செய்யுட்களில் வழங்கியிருக்கின்றார்கள். இவ்வரிச்சந்திர புராணத் தமிழ்ச் செய்யுளுள் பிராமணன் எனக் கூறியிருக்கின்றது.

அரிச்சந்திரபுராணம் - நகரச்சிறப்பு

கிள்ளை பாடுவ கீதங்கள் சாரிகைப் / பிள்ளை பாடுவ வேதம் பிராமணர்
கொள்ளை பாடுவ ரின்னிசைக் கோதையர் / வள்ளை பாடுவர் மன்னவன் வன்மையே.

இப்புராணச் செய்யுட்களானது புத்ததன்மகாவியச் செய்யுட்களைப் பார்த்துக் கொண்டே எழுதியிருக்கின்றார்களன்றி அவர்கள் மதசம்மதமாகவும் எழுதியதைக் காணோம்.

அதாவது இவர்கள் மார்க்கமோ பசுமாடுகளை நெருப்பில் இட்டுக் கொன்று சுட்டுத்தின்னும் படியானவர்கள் இத்தகையக் கொலையாளர்கள் பஞ்சசீலத்தைப் பரக்க பாடியிருக்கின்றார்கள்.

அரிச்சந்திரபுராணம் - நாட்டுப்படலம்

கள்ளங் கொலைகட் பொய்க்காமமென்றைந்து மற்றார்க்
குள்ளந் தெளிந்தோர்தரு முத்தான மென்னப்
பள்ளந்திடர்மால் வரை கானக பக்கமெங்கும்
வெள்ளம் பெருகிப் பரந்தோடி விறைந்ததன்றே.

இத்தகையப் புராணத்திலுள்ள சரித்திர சுருக்கம் யாதெனில், விசுவாமித்திரர் என்பவருக்கும் வசிஷ்டர் என்பவருக்கும் ஓர் தருக்கம் உண்டாயதாகவும் அத்தருக்கத்தில் பொய்சொல்லா மனிதன் உலகத்தில் ஒருவனுமில்லை என்று விசுவாமித்திரர் கூறியதாகவும் அரிச்சந்திரர் என்னும் ஓர் அரசனிருக்கின்றான் அவன் பொய்சொல்லாவாசகன் என்று வசிட்டர் கூறியதாகவும் அதன்பேரில் அவர்களிருவரும் அவ்வரசனை சோதிக்க எத்தனித்ததாகவும் அவன் பொய்சொல்லாமலே துன்பங்களை அனுபவித்தான் என்றும் புராணத்தை விரித்திருக்கின்றார்கள்.

பொய் என்பது எது, மெய் - என்பது எது என்று கண்டு வாதித்திருக்கின்றார்கள் என்று ஆராயுங்கால் பாப்பானுக்குப் பொருள் கொடுப்பதாகச் சொல்லி அதை மறுக்காமல் பல கஷ்டங்களை அனுபவித்துப் பொருளைக் கொடுத்துவிட்டதே மெய் என்றும், இரண்டு பறைச்சிகள் கேட்டதைக் கொடுப்போம் என்று சொல்லி அவர்கள் கேட்டக் குடையைக் கொடுக்காமல் மறுத்துவிட்டதைப் பொய் என அறியாமல் படாடம்பம் காட்டிவிட்டார்கள்.

இவ்விரு பறைச்சிகளின் உற்பவமும் அவர்கள் நிறத்தையும் பாருங்கள். விசுவாமித்திரனின் முதல் பிறப்பு அரசவம்மிஷத்தில் தோன்றி தனது ஞான விருத்தியால் பிராமணனாக விளங்கியதாய் அவர் சரித்திரங் கூறுகின்றது. அத்தகைய புருஷன் சுவாசத்திலிருந்து இரண்டு பெண்கள் பிறந்தார்களாம். அவ்விரண்டு பெண்களே கறுப்பு நிறமமைந்த பறைச்சிகள் என்று வரைந்திருக்கின்றார்கள்.

அரிச்சந்திரபுராணம் - சூழ்வினைகாண்டம்

பேச்சினிற் கிளிபோற்சிங்கா / பெயர்ச்சியிற் பெடைபோற்செங்கை