பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 103

கல்யாண சருக்கம்

வணங்கி வையந்தொழ னின்றமன்னன் காதன் மடமகள்
போன் மணங்கணாறும் பூம்பாவை வளரல்வாழி நறுங்குரவே
மணங்கணாறும் பூம்பாவை வளர்த்தியாயிலிளையாராற்
கணங்களோடு பறிப்புண்டி கண்டாய் வாழி நறுங்குரவே.

புத்தபிரான் மாசி மாதப் பௌர்ணமியில் துறவடைந்த பிச்சாண்டி வேஷத்தை சீவக சிந்தாமணியிற் காண்க.

முத்தியிலம்பகம்

மாசித்திங்கண் மாசினமுன்ன மடி வெய்த / வூசித்துன்ன மூசியவாடை யுடையாகப்
பேசிப்பாவாய் பின்னுமிருக்கை யகலேந்த / கூசிக்கூசி நிற்பர் கொடுத்துண்டறியாதார்.

இதை அநுசரித்தே மயிலையில் மாசிமாதப் பௌர்ணமிநாளைக் கொண்டாடாமல், போதியோ பூம்பாவாயென்று சாக்கையர் கொண்டாடி யுள்ள பூம்பாவைப் பதிகத்தைக் காண்க.

தெங்கின் மயிலையர் மாசிக் / துறந்தான் கபாலீச்சுர மமர்ந்தான்
யானே யூறு மங்கை யகல்கொண்டு / மாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

புத்தபிரான் கல்லாலவிருட்சத்தடியில் வீற்று பங்குனிபருவத்தில் காமனைவென்று நிருவாண நிலையடைந்தார். அதை அநுசரித்தே பௌத்த சங்கத்தோர் யாவரும் கொண்டாடிவந்தார்கள்.

சீவகசிந்தாமணி

காசறு துறவின்கிக்க கடவுளர் சிந்தைபோல
மாசறு விசும்பின் வெய்யோர் வடதிசையயன முன்னி
யாசற நடக்குநாளு ளைங்கணைக்கிழவன் வைகிப்
பாசறைம் பரிவுதீர்க்கும் பங்குனிப் பருவஞ்செய்தான்.

இதை அனுசரித்தே மயிலையில் பங்குனிமாத பௌர்ணமி மதன்விழாக்கோல் கொண்டாடாமல் 'போதியோ பூம்பாவா'யென்று சாக்கையர் கொண்டாடியுள்ள பூம்பாவைப் பதிகம் பத்தைக் காணலாம்.

மலிவிழாவீதி மஉநல்லார் மாமயிலை
கலிவிழாகொண்டான் கபாலீச்சுரமமர்ந்தான்
பலிவிதாப் பாடல்செய் பங்குனி பருவநாள்
பொலிவிழாக் காணாதே போதியோபூம்பாவாய்.

புத்தபிரான் மார்கழி பௌர்ணமி திருவாதிரை நாளில் பரிநிருவாண மடைந்தார். அந்நாளை அனுசரித்தே பௌத்த சங்கத்தோர் யாவரும் கொண்டாடி வந்தார்கள்.

விம்பாசாரம் - விழாவதைக்காதை

இறைமகற்காத னெண்பானைந்திற் / குறைமிகு காலக் கூற்றங்கடிந்து
தக்கக் கடைநாட் டநுவாதிரையிற் / பக்க மங்கலம் பருமதி கோலாய்
போதிநீழற் பொருந்திய புத்தேள் / சோதிபஞ்சகச் சூழொளியாகி
ஆனவைகரை யார்ப்ப வானவர் / போனக ....(தெளிவில்லை) விழாக்கோள்.

இதை அநுசரித்தே மயிலைச் சேரியில் ஸ்தாபித்திருந்த கபாலிச்சுர மடத்திற்கு வந்து மரணமடைந்த பூம்பாவையை பரிநிருவாண ஆதிரை நாட் காணாது போதியோ வென்று சாக்கையர் துக்கங்கொண்டாடினார்கள்.

ஊர்திறைவேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனிற்
கார்தரு சோலைக் கபாலீச்சுர மமர்ந்தான்
ஆர்திரை நாட்காணாதே போதியோபூம்பாவாய்.

புத்தர் பரிநிருவாணமடைந்த காலத்திற்குப் பின் அந்தந்த புத்தசங்க வியாரங்களுக்கு அமரவாசி, பௌர்ணமி, அட்டமி இம்மூன்று தினத்திற்கும் வந்திருந்து சீலவிரதங்காப்பது வழக்கமாகும்.

சீவகசிந்தாமணி

ஓவாதிரண்டுவ்வு மட்டமியும் பட்டினியாயொழுக்கங்காத்த
றாவாத தவமென்றார் தண்மதிபோன் மூக்குடைக்கீழ் தாதைபாதம்
பூவே புகைசாந்தஞ் சுண்ணம் விளக்கிவற்றால் புனைதனாளு
மேவா விவை பிறவும் பூசனையென் றீண்டிய நூல் கரைகண்டோரே.

இதனை அனுசரித்தே மயிலை வியார சாக்கையர்கள் தாங்கள் கொண்டாடி வரும் அமாவாசி, பௌரணை, அட்டமிநாள் விரதங்காக்காது போதியோ