பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வீரசோழியம்

மலைகரந்து போகாதோ வற்றாதோபவ்வ
மலர்கதிரோன் வீழானோவஞ்சி - நிலயெனக்குப்
பார்வேந்த ரொப்பரோ பாய்நீர் குரு குலத்தார்
போர்வேந்தே யான்முநிந்தபோது.

சீவக சிந்தாமணி

ஆழ்ந்த குருகுலமா மாழ்கடலி னுண்முளைத்த வறச்செங்கோலாய் கதிரினை
வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரிமா நாகமுடன் விழுங்கிற்றன்றே.

இன்னுங் குருகுலத்தரசர்களாய் விளங்கிய திரியோதினன், இரணியன், மாபலி, நந்தன் முதலிய அரசர்கள் யாவரையும் தற்காலந் தோன்றி நிற்கும் பராய மதஸ்தர்கள் வஞ்சினத்தாலும், மித்திரபேதத்தாலும் கொன்று பற்பலக் கட்டுக் கதைகளால் அவர்கள் பூர்வ சரித்திரங்களையும் மாறுபடுத்தி அவர்கள் வம்மிசவரிசை யோர்களையும் தாழ்ந்தசாதியாக வகுத்து நாளதுவரையில் நசித்துவருகின்றார்கள்.

மேற்கூறியுள்ளக் கருமத்தலைவர்கள் முக்காலங்களையும் அறிந்து சொல்லக்கூடிய கணிதசாஸ்திரிகளாகவும், தன்மகன்ம குருக்களாகவும் விளங்கின படியால் வள்ளுவர், சாக்கையர், நிமித்தகரென்னுங் காரணப் பெயர்களைப் பெற்றிருந்தார்கள். வடயிந்தியாவில் சாக்கையரெனும் பெயரால் பெரும்பாலும் இவர்களை அழைக்கப்பெற்றிருந்தபடியால்,

- 3:33; சனவரி 26, 1910 –

நாளதுவரையில் அவ்விடம் சாக்கையர் தோப்பென்னும் இடப்பெயர் வழங்கிவருகின்றது. தென்னிந்தியாவில் சாக்கையரெனும் பெயரை சாக்கியரென வழங்கி வந்தபோதிலும் வள்ளுவரெனும் பெயரை விசேஷமாக வழங்கி வந்தபடியால் அவர்கள் சிறப்பு மாறாமல் திருவனந்தபுரத்தைச்சார்ந்த வள்ளுவர் நாடென்னும் தேசப் பெயர் நாளதுவரையில் வழங்கிவருகின்றது. கங்கைநதி எனும் வார்த்தை கங்காநதி எனுங் குணசந்தி பெற்றதுபோல சாக்கைய ரெனும் பெயரை சாக்கியரென வழங்கி வருகின்றார்கள்.

சென்னையைச்சார்ந்த மயிலைநாட்டில் சாக்கையரின் வம்மிச வரிசையோர் விசேஷமாக குடியிருந்ததும் அவர்களுக்குள் கொன்றை ராசனென்னும் ஓர் சிற்றரசனிருந்ததும் அங்கு புத்த சங்கத்தோர் மடமிருந்ததும் அம்மடத்தில் புத்தர் மாசிமாத பௌர்ணமியில் துறவடைந்த வேடத்தைக் கொண்டாடுவதற்கு அரசன் பிச்சையாண்டி வேஷங்கொண்டு வெளிவருவது போல் உற்சாகங் கொண்டாடிவந்ததும் மாசிமாத பௌர்ணமியன்று இரவு ழுமுதும் புத்தரவர்கள் நித்திரையற்று துறவடைந்தபடியால் அந்நாளிரவைக் கொண்டாடுவதற்கு அவருடைய சங்கத்தோர்கள் துறவு விசாரிணையில் விழித்திருந்து மகாசிவராத்திரி என வழங்கிவந்ததும் கார்வெட்டி நகரத்தை ஆண்ட குருகுலத்தரசன் மணிவண்ணன் மனைவி பூம்பாவை என்பவள் மயிலை மடபிச்சை ஆண்டிவேட உற்சாகங் காணவந்து மரணமடைந்ததினால் சாக்கையர்கள் துக்கங்கொண்டாடியதும் ஆகிய விஷயங்கள் யாவும் பூர்வ சரித்திராதாரமாக மயிலை வீ. குப்புலிங்க நாயனாரவர்களால் வெளியிடும் புத்தகத்தில் சாக்கையர் - விருத்தாந்தங்களைத் தெளிவாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

புத்தர் தனது கரத்தில் போல் என்னும் பாத்திரமேந்தி பிச்சை ஏற்றதினால் கரபோல் ஈசனென வழங்கிவந்த வார்த்தை குறுக்கல் விகாரப்பட்டு கபோல ஈசனென்றும், கபால ஈசனென்றும் வழங்கிவருகின்றார்கள்.

சீவக சிந்தாமணி

மாசித்திங்கண் மாசினமுன்ன மடி வெய்த / வூசித்துன்ன மூசியவாடை யுடையாக
பேசிப்பாவாய் பின்னு மிருக்கை யகலேந்தக் / கூசிக்கூசி நிற்பர் கொடுத்துண் டறியாதார்.

தென்னிந்தியாவில் சீவகன், காளகூடன், மணிவண்ணன், நந்தன், கன் சிசேந்திரன், தஞ்சைவாணன், கொன்றையன் மற்றுமுள்ள சாக்கைய புத்த அரசர்கள் வாசஞ்செய்த இடங்களுக்கு சேரி எனும் பெயர் பெரும்பாலும்