பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 125

வழங்கிவந்தபடியால் நாளது வரையில் அவர்களுடைய வம்மிச வரிசையோர் வாசஞ்செய்யும் இடங்களுக்குச் சேரி என வழங்கி வருகின்றார்கள்.

சீவக சிந்தாமணி

தேனுலா மதுச்செய் கோதை தேம்புகை கமழவூட்டி
வானுலாச் சுடர்கண்மூடி மாநக ரிரவுச்செய்ய
பானிலாச் செரிந்தனல்லா ரணிகலம் பலைச்செய்ய
வேனிலான் விழைந்த சேரி மேலுல களைய தொன்றே.

சூளாமணி

மெய்ப்புடை தெரிந்து மேலை விழுதவமுயன்று நோற்றார்க்
கொம்புடைத்துங்கள் சேரி யுயர்நிலை செல்வமெல்லா
மெம்படி முயறு மேனு மெங்களுக்கெய் தலாகா
தப்படி நீயுமுன்னர் மொழிந்தணை நன்றே யென்றான்.

சிலப்பதிகாரம்

கூலமறுகிற் கொடியெடுத்தணுலும் / மாலைச் சேரி மருங்கு சென்றெய்தி.

புத்தமார்க்க அரசர்கள் ஓர் அறபுத்திரியை தனக்கு மனைவியாக சேர்த்துக்கொள்ளுவதற்கு வதுவை, கைப்பற்றல், தீவலம், மணம், கல்யாணம், வீதியுளி, மன்றல், விவாகம் என எட்டு வகைப் பெயர்களைக் கொடுத்திருந்தார்கள். இவ்வகை விவாக உற்சாகத்தையும் புத்தர் பிறந்த நாள் உற்சாகத்தையும் அவர் துரவடைந்த உற்சாகத்தையும், காமனை எரித்த உற்சாகத்தையும், அவர் நிருவாணகால உற்சாகத்தையும் ஆனந்தமாகக் கொண்டாடிவந்தார்கள்.

பின்கலை நிகண்டு

வதுவை கைபற்றலே தீவலஞ்செய் தன் மணங் கல்யாணம்
விதியுளி வேட்டன் மன்றவிசாகமெண்பேர் விளங்கும்
புது விழா முருகுசாறு புத்தருளுச் சவமாஞ்சோறு
துதை மலர் கொண்டு போற்றும் துணங்கற லிரண்டு மப்பே.

இவ்வகை விவாக உற்சாகங்களை சாக்கைய புத்த அரசர்கள் வள்ளுவர், சாக்கையர், நிமித்தகரென்னுங் கருமத்தலைவர்களைக்கொண்டே நடத்தி வந்தார்கள்.

சீவக சிந்தாமணி

 
பூத்த கொங்கு போற் பொன் சுமந்துளா / ராச்சியார் நலக்காசுறூணனான்
கோத்த நித்திலக் கோதை மார்பினான் / வாய்த்த வன்னிரை வள்ளுவன் சொனான்.

சூளாமணி

நிமித்தக னுரைத்தலு நிறைந்த சோதியா
னுமைத்தொகையிலாததோருவகையாழ்ந்து கண்
ணிமைத்தில னெத்துணை பொழுது மீர்மலர்ச்
சுமைத்தொகை நெடு முடி சுடரத்தூக்கினான்.

வேறு.

 
தலை மகன்றாடனக்காகச் சாக்கைய / நிலமைகொண் மனைவியா நிமிர்த பூந்தூணர்
நலமிகு மக்களா முதியர்தேன்களாக் / குலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே.

பூர்வ அரசர்கள் நடக்கையை அநுசரித்து அவர்கள் வம்மிச வரிசையோர்களும் பௌத்தக் குடிகளும் வள்ளுவர்களைக்கொண்டே அவர்கள் சுபாசுபக் கிரியைகளை நடத்தி வருகின்றார்கள்.

சாக்கைய புத்தவரசர்கள் சாந்தம், ஈகை, அன்பென்னும் முக்குணங்களைப் பெருக்கி குடிகளைத் தன்னுயிர்போல் பாதுகாக்குங் குணமுடையவர்களாய் இருந்தபடியால் வெண்குடை, வெண் கொடி, வெண் சாமரை, வெள்ளையானை, வெள்ளைக்குதிரை, வெண்ணுடை, வெண்பிறை, முடி, வாகு, வலய முதலியப் பதினெட்டு விருதுகளுடன் ஊர்வலம் வந்து விவாகக் கிரியைகளை நடத்தி வந்தார்கள்.

சூளாமணி

மறந்தலை மயங்கிவையத் தொருவரையொருவர் வாட்ட
விறந்தலை யிலாமைநோக்கி யின்னுயிர்போலகாக்கு
மறந்தலை நின்றவேந்த ரடி நிழ லன்றி யார்க்குஞ்
சிறந்ததொன் றில்லைகண்டாய் திருமணி திகழும்பூணோய்.

மணிமேகலை

மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவனுதய குமரனுரு கெழு மூதூர்.