பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 127

சூளாமணி

மானக்கோதை மாசரு வேலோய் வரவெண்ணிலாத்
நானக்கோதை நங்கைபிறந்த நாளாளே
வானக்கோனின் மாண்புணர்வார்கண் மறுவில்
தானக்கோளிற் சாதகவோலைத்தலை வைத்தார்.

இவ்வகையாகக் கருமத்தலைவர்கள் சென்று பெண்பார்த்து புருஷனுக்குரிய தேகபொருத்தமும் பெண்ணுக்குரிய தேக பொருத்தமும் பொருந்துதலைக் கண்டவுடன் அரசர்களுக்குத் தெரிவிக்க அரசன் அம்மங்கையை நானே விவாகஞ் செய்வேனென்று தனது கரத்தில் மஞ்சள் நூலாற் கங்கணங்கட்டிக்கொள்ளுவதும் மங்கை அம்மன்னனையே விவாகஞ் செய்வேனென தனது கரத்தில் மஞ்சள் நூலால் கங்கணங் கட்டிக்கொள்ளுவதும் ஓர் விரதமாய் இருந்தது.

சூளாமணி

போதனத்திறைவன் காண்க விரதநூபுரத்தை யாளுங்
காதுவேன் மன்னனோலை கழலவன் றனக்கு நாளு
மாதிய வடிசி லொண்கேழஞ்சன முன்னிட்டெல்லாந்
தீதுதீர் காப்புப் பெற்றுச் செல்கென விடுத்ததன்றே.

சீவக சிந்தாமணி

கணிபுனைந் துரைத்த வாளாற் கண்ணிய கோயிற்றன்னுண்
மணிபுனை மகளிர் நல்லார் மங்கல மரபுகூறி
யணியுடைக் கமலத்தன்ன வங்கைசேர் முன்கை தன்மேற்
றுணியுடைக் காப்புக்கட்டிச் சுற்றுபு தொழுது கார்த்தார்.

கங்கணமென்னுங் காப்புக்கட்டி மங்கலமுரசு வழங்க ஊர்வலம் வருவதற்கு தேசாலங்காரஞ் செய்து கமழ்புகையூட்டி வேற்றரசர்கள் புடை சூழ வீதிவலம்வந்து மணாளன் தன் குலமரபினோர் கோயிலாகும் புத்தமடஞ் சென்று வணங்கிக் கொள்ளுவதும் மணாளி தன் குலமரபின் கோயிலாகும் அம்மன்மடத்திற் சென்று வணங்கிக்கொள்ளுவதுமாகிய வணக்கமுற்று கலியாணமண்டபஞ்சேர்ந்து பூநூல் தரித்துக்கொள்ளுவது வழக்கமாயிருந்தது.

சூளாமணி

குங்குமக் குழம்பு கொட்டிச் சந்தனத்தொளிகண்கூட்டி
யங்கலுழவிரை சேற்றோடகநகர ளருசெய்து
மங்குலாய் விசும்புமூட வகிற்புகை மயங்க மாட்டி
பொங்குபொற் சுண்ணம் வீசிமணவினை புனைவியென்றான்.
முரசும் முழுவின் குழுவும் முடிசே / ரரசன் னகரார் குழுவுக் கெழுமி
விரையும் புகையும் விரவும் பகலின் / னிரையந் நெடு வீதி நிறைத்தனவே.

பிடியுங் களிறும் பிறவுந் நெரிவுற் / றடியும்மிடவா மிடமின்றிலருங்
கொடி யுங் குடையுங் குளிர்சா மரமும் / முடியின் சுடரும் மிசைமூடினவே.

சீவக சிந்தாமணி

மடற்பனைக் குழாத்திற் பிச்சநிரைத்தன மன்னர் சூழ்ந்து
புடைக்களி நேறித் திங்கட் பொழிக்கதிர் குப்பை யன்ன
வெடுத்தெரிகவரிவீச வியம்பல முழங்கியார்ப்பக்
கடற்புடை வெள்ளஞ்சூழ காவலன் வீதி சேர்ந்தான்.

சூளாமணி

உலமுறை தோளினானுவகை கூர்ந்தனன்
குலமுறை வழிபடுந் தெய்வக் கோயிலை
வலமுறை வந்தனன் வரலு மாமணி
கலமுறை கதிர் நகைக் கபாடம் போழ்ந்ததே.
மௌவன் மலர்வேய்ந்து மது நாறு மணியைம்பாற்
கொவ்வைதுயில் கொண்டதுவர் வாய்க்கொடியோடொப்பா
டெய்வமண நாறுதிரு மேனிபுரங் காக்கு
மவ்வையரோடெய்தி முதலவ்வையடி சேர்ந்தாள்.
நங்கைமணவேள்விநக ரெய்துவதன் முன்னைப்
பொங்கு புரிநூலனலர் தாமரை புனைந்தார்
மங்கல வுழைக்கல நிரைத்தமண மாட
மங்கது புகுந்தழல் வளாக்கிய வமைத்தார்.