பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 129

பொற்சரட்டை சுழலமாட்டி இருவருமெழுந்து அரசிலைக்கால் வலம் வந்து வடமீனென்னும் அருந்ததி நட்சத்திரத்தை மணமகளுக்குக் காண்பித்து அருந்ததியைப்போல் கற்புடையவளாக வாழும்படி நவரத்தினங்களாலும், பொன்னரிசியாலும் ஆசீர்கூறுவது வழக்கமாயிருந்தது.

சூளாமணி

மன்னியழல் வேழ்வியிலவற்கு வலமாகப்
பின்னியத குப்பைகள் பிடித்தவை விடுத்தாங்
கன்ன மனையாளொடெயில் வேலவனிருந் தான்
கன்னியோ டியைந்த கதிர் மாமதியமொத்தாள்.
கந்துளு மிழுங்கரிய சூழ்புகைகள் விம்ம
வந்துசுட ரேந்திவல னேசுழலமாட்டி
யந்தணனு மங்கழ லழைத்துமிக வேட்டான்
மைந்தனு மடந்தையை மனத்தின்மிக வைத்தான்.

பொங்கழல்செய் வேள்விமுறை போற்றலு மெழுந்தா
னங்கையி னணங்கினணி மேல்விரல் பிடித்து
மங்கையொடு காளைவல னாகவருகின்றான்
கங்கையோடி யைந்தவரு கார்க்கடலோ டொத்தான்.

வானநெறி யங்குவளர் சோதிவட மீனைக்
கான மயிலன்னவடன் முன்னை நணிகாட்ட
யானுமிவள் போலுலகு காணவியல்வேனோ
வீனமொடு நாணமில னோவெனவிகழ்ந்தாள்.

இடிபடு முரசிற் சாற்றி யேற்பவ ராசி கூறச்
சுடர்விடு மணியின் மாரி பொன்னொடு சொரிய வேவிக்
கடிபடு நெடிய மாடங் கன்னியோ டேறினானாண்
முடிகொளு முலகமெய்து மின்டா மூர்த்திமெய்யான்.

சீவக சிந்தாமணி


விளங்கொளி விசும்பிற் பூத்த வருந்ததிக் காட்டியின்பால்
வளங்கொளப் பூத்தகோல மலரடி கழீய பின்றை
யிளங்கணை யாழியேந்த வயினிகண்டமர்ந்திருந்தான்
றுளங்கெயிற் றழுவைதொல்சீர் தோகையோ டிருந்ததொத்தான்.

மணாளியை கற்புநிலையில் நிறுத்துவதற்கு அருந்ததியைக் காட்டி மணாளனின் பாதத்தைக்கழுவி கணையாழி பூட்டிய மறுநாள் மஞ்சள் நீரினாலும், சந்தனக் குழம்பாலும் விளையாடி சுகானந்தத்திலிருப்பது வழக்கமாயிருந்தது.

சீவக சிந்தாமணி

அன்னப் பெடைநடுக்கி யசைந்து தேற்றா நடையாளு
மன்னர் குடைநடுக்கும் மாலைவெள் வேன் மறவோனும்
மின்னு மணிக்குடத்தின் வேந்தரேந்த மண்ணாடி
சுன்னங் கடிமலருந் துகிலுஞ் சாந்தும் புனைந்தாரே.

இவற்றிற் கூறியுள்ள விவாக சடங்குகளை ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கு தற்கால விவாக சடங்குகள் தெளிவாக விளங்கும். நமக்குள்ள ஒவ்வோர் கிரியா சம்மந்தங்களையும் செவ்வனே விசாரித்துணராமல் நம்மெ நாளெல்லாம் தாழ்த்தி நசுங்குரச்செய்யும் பராய சாதியார் மதங்களைத் தம்மதமெனக் கொண்டு மயங்கி நிற்கும் அன்பர்கள் இனியேனும் பராயர்களின் மதக்களிம்பை அகற்றி அவரவர்களின் மதத்தோன்றலை பூர்த்தியாக விசாரித்துணர்ந்து சற்குருவின் திருவடியைப் பின்பற்றுவார்களாக.

புத்ததரும நூல்களாக விளங்கும் திவாகரம், நிகண்டு, வீரசோழிய முதலிய இலக்கண நூற்களிலும் சீவகசிந்தாமணி, மணிமேகலை, சூளாமணி, மங்கலத்திரட்டு முதலிய சரித்திர நூற்களிலும் புத்ததரும அரசர்கள் முதல் வணிகர், வேளாளரென்றமூன்று தொழிலாளருக்கும் வள்ளுவர்கள் கன்மகுருக்களாயிருந்து தன்ம கன்மங்களை நிறைவேற்றிவந்ததாகக் கூறுகின்றது.

அவைகளை அநுசரித்துவந்த குருகுலத்து அரசவம்மிச வரிசையோர்களாகிய நாமும் நாளதுவரையில் வள்ளுவர்களை விடாது தன்மகன்மங்களை