பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 131

மங்கலத்திரட்டு

கொள்ளு நெய்தயிர் பாலு மின்னமு துண்டபாளித சோறுடன்
பள்ளு காய்கனி சீனிதேனு கர்பாகுமற்று பணித்தமும்
வள்ளுவர்க் குணவூட்டி வட்டினை மாடு பொன் சிலையீய்ந்தனன்
உள்ளமெய்ப் புகழுற்ற ராயனுயர்ந்த கார் நகர் சீயனே.

புத்ததரும நிலை வழுவி பராயர் மதத்தைத்தழுவியவர்கள் போதனைக்குட் பழகி நம்மைத்தாழ்ந்த வகுப்பாக்கித் தங்களை உயர்த்திக்கொண்டது முதல் நாளுக்குநாள் வள்ளுவர் குலம் நசிந்து சீலமு மறந்து சிறப்புங் குறைந்து வருகின்றார்கள்.

புத்ததரும அரசர்களின் சின்னங்களையும் ஞானிகளாகிய சமணமுனிவர் களின் சின்னங்களையும் திருவள்ளுவ சாம்பவனார் தானியற்றியுள்ள ஞானவெட்டியில் தெளிவாகக் கூறியிருக்கின்றார்.

ஞானவெட்டி

பூனூல்தரித்துக்கொள்வோம் பூதம்பொறியுமை
ம்புலனையு மடக்கிக்கொள்வோம்
வேணவிருதுகளும் உசிதமாய் வெண் குடை
வெண்சாமரையும் பிடித்துக்கொள்வோம்
வானவர் முனிவர்தொழும் வெண்விசிரி மரகத
குண்டலமுங் கவசங்களும்
ஞானப்பிரகாச வொளிநிறைந்த பரநாதன் றன்
னடி களை நிதந் துதிப்போம்.

எனக் கூறியுள்ள ஞானவெற்றியெனும் நூல் ஏற்பட்டக் காரண மென்னவென்றால் தற்காலம் விசுவபிரம வம்மிசத்தோரென்றும், கம்மாளரென்றும் வழங்கும் படியானவர்களுக்கும், வேஷப்பிராமணர்களுக்கும் குருபட்ட தருக்கம் நேரிட்டதுபோல் 1,400- வருடங்களுக்கு முன்பு புத்த தருமங்களைச்சார்ந்து தன் மகன்மங்களை நிறைவேற்றி வந்த வள்ளுவர் அரசர்கள் முதல் வணிகர்கள் வேளாளரென்ற மூன்று தொழிலாளர்களுக்கும் கன்மகுருக்களாயிருந்து செய்துவந்த கிரியைகளை பௌத்தபிராமணர்களைப் போலவேஷமிட்டுக் கொண்டவர்கள் செய்யும்படி ஆரம்பித்தகாலத்தில் இவர்களுக்கும் அவர்களுக்கும் வாதுகள் நேரிட்டு வள்ளுவர்களுக்குள்ள களங்கமற்றச் செய்கையால் சோர்வடைந்தும் வேஷப் பிராமணர்களுக்குள்ள வஞ்சகச் செய்கையால் அரசர் வணிகர்வேளாளரென்ற முத்தொழிலாளரையும் தங்கள் வயப்படுத்திக்கொண்டு வள்ளுவர்களையும், அவர்களைச்சார்ந்த அரசர்களையும், ஞானகுருக்களாகிய சமண முனிவர்களையும் கொன்றுப் பலவகைத் துன்பங்களையுச் செய்ததுமன்றி தற்காலம் திருப்பதி, மாவலிபுரம், சிதம்பரம், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மற்றுமுள்ளப் பூர்வ இந்திரவிஹாரங்களையும் தங்கள் வயப்படுத்திக்கொண்டு பூர்வம் இத்தேசத்தில் தொழில்களுக்கென்று வகுத்திருந்தப் பெயர்களை சாதிகளாக ஏற்படுத்தி அதில் தங்களை உயர்ந்தசாதிப் பிராமணர்களென வகுத்துக் கொண்டு வள்ளுவர்களையும் அவர்களைச்சார்ந்த புத்த தருமசீலர்களையும் தாழ்ந்தசாதிப் பறையர்களென வகுத்து இழிவு கூறிவந்த காலத்தில் இஞ்ஞானவெற்றி நூல் ஏற்பட்டது. இந்த ஞானவெற்றி யெனும் நூலை தற்காலம் அச்சிட்டவர்கள் பராயமதஸ்தர்களாகையால் தங்கள் மனம்போனவாறு கிறிஸ்துமதத்தைக் கண்டித்தும் செத்ததோர் மாடெடுப் போமென்றும் கட்டையும் அடுக்கிக்கொள்ளுவோம் என்றும் அவரியற்றியதுபோல் (217) பொய்ப் பாடல்களை இயற்றி அதிற் சேர்ந்து அச்சிட்டிருக்கின்றார்கள். இவைகள் யாவையும் நமது சங்கத்தாரால் சுத்தப்பிரிதிகளாக அச்சிட்டு கூடிய சீக்கிரத்தில் வெளியிடப்படும். இந்த சரித்திரங்களை அநுசரித்து சென்னை தேவனாம்பேட்டையில் வசித்துக் காலஞ்சென்ற ம-அ-அ-ஸ்ரீ வீ.அயோத்திதாஸ கவிராஜ பண்டிதரவர்கள் இயற்றியுள்ள,

சீட்டுக்கவி சுருக்கம்

ஆதிச்சிறந்தவனை பறையனென் பேசுவ
தகைந்தை வாய் மதமல்லவோ