பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 / அயோத்திதாசர் சிந்தனைகள்

50. சகல மதாசாரங்களையும் கிரகிக்கும் மதம்
ஒன்றுண்டாமே

1910 ஜூன் மாதம் 6 ஆம் தேதி வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிகை 4 - ம் பக்கம் முப்பத்தி ஐந்தாவது வரியில் “ஸனாதன தர்மத்தின் சிறப்பு" எனும் மகுடமிட்டு கஸ்தூரி ரங்கன், க்ஷ.ஹ.டு.கூ. அவர்கள் ஓர்கடிதம் எழுதியிருக்கின்றார். அதன் கருத்தோவென்னில் அவரது மதமானது சகல மதாசாரங்களையும் கிரகிக்கக் கூடிய மதமென்றும் எவ்வகை என்னில் வாலியென்பவன் தனக்கு எதிரியாகத் தோன்றுகிறவன் பலத்தைக் கிரகித்துக் கொள்ளுவதுபோலெனும் தாட்டாந்தமிட்டு அவ்வகைத் தங்கள் மதக்கிரகிப்பினுள் புத்தமதந் தெரியாமல் போய்விட்டதென்றும் கிறீஸ்துமதந் தலையெடுக்காமலாய்விட்டதென்றும் வரைந்துள்ளவற்றைக் கண்டு மிக்க வியப்புற்றோம். அதாவது வாலி என்பவனையோ இராட்சசனென்று கூறுகின்றார்கள். இராமரென்பவரையோ இவர்கள் தேவரென்று கொண்டாடு கின்றார்கள். இந்த இராமருக்கும் வாலிக்கும் யுத்தம் நடந்தபோது தன் பலத்தை வாலிகிரகித்துக் கொள்ளுவான் என்று பயந்து ஒளிந்துகொண்டு அம்பெய்து வாலியைக் கொன்றதாகக் கூறுகின்றார்கள். நமது டு.கூ. அவர்களின் தேவராகிய இராமரே வாலியின் சக்த்தியைக் கிரகிப்பதற்கு சக்தியற்று ஒளிந்து கொன்றவராயிருக்க இவரது மதசக்த்தி எம்மதசக்த்தியை எவ்வகையால் எக்காலத்தில் கிரகித்ததென்று திருஷ்டாந்த தாட்டாந்தங்களுடன் வரைவரேல் டு.கூ. அவர்கள் சிறந்த விசாரிணைப் புருஷரேயாவர். தனது தேவனாலாகாத காரியம் மதத்தாலாயதென்பது விந்தையேயாம். இவரது மதத்தின் சிறப்பையும் அதிற் கூறுகின்றார். அதாவது கள்ளைக் குடிக்க பிரியமுடையவன் அன்னோர் தேவனுக்கு ஆராதனைச்செய்துக் குடிக்கலாமென்றும் திருடவேண்டியவன் தனது சொத்தைக் கோவில்களுக்கு சேர்த்துவிடலாம் என்றும், மாமிஷம் புசிக்கப் பிரியமுடையவன் யாகங்களிற் கொன்று தின்னலாமென்றும் வரைந்திருக்கின்றார்.

அன்னோர் மதக்கிரகிப்பின் சிறப்பை ஆராயுங்கால் கள் குடிக்கக் கூடாதென்னும் ஓர் மதத்தினர் முன் கள்குடிக்கவேண்டியவர்கள் ஓர்வகையால் குடிக்கலாம் என்பது சிறப்புற்றதுபோலும், திருடவேண்டியவர்கள் ஓர்வகைக்குத் திருடலாமென்றும் கூறும் மதம் சிறப்புற்றது போலும், சீவர்களை வதைக்கவேண்டாம் மாமிஷம் புசிக்கவேண்டாமென்னும் மதத்தினர் முன்பு கொலைச்செய்தாலும் மாமிஷம் புசித்தாலும் ஓர்வகையாகக் கொல்லலாம், ஓர்வகையாகப் புசிக்கலாமென்னும் மதம் சிறப்புற்றது போலும்.

அந்தோ இத்தகையப் பஞ்சபாதகங்களை ஓர் வகையாகச் செய்யலாமென்னும் மதத்தினர்முன்பு பஞ்சபாதகங்களை அகற்ற வேண்டுமென்னும் புத்த மதம் இருந்தவிடந் தெரியாமற்போனது ஓர் இழிவன்று. காரணம் பன்றியைக்கண்டு யானை ஒதுங்குவது இழிவாகாவாம். யானையைக்கண்டு பன்றி ஒதுங்குமாயின் பயத்தினால் அது ஒதுங்கிய விழிவெனத்தகும். இத்தியாதி சீலச்செயல்களையும் அசீலச்செயல்களையும் நமதன்பர் L.T. அவர்கள் உணராது தங்கள் மனம்போனவாறு தம்மதத்தைப் புகழ்ந்தும் எதிரிகளின் மதத்தை இகழ்ந்துங் கூறுவது பிசகேயாம். தம்மதத்தைப் புகழ்ந்தும் எதிரிகளின் மதத்தை இகழ்ந்துங்கூறுவது மதக்கடை வியபாரிகளின் இனிய இயல்பாதலின் கலாசாலை உபாத்தியாயராகும் L.T. அவர்கள் இத்தகையக் கூற்றில் இனிப் பிரவேசிக்க மாட்டாரென்று நம்புகிறோம்.

- 4:1; சூன் 15, 1910 –

51. மொட்டையும் மஞ்சளும்

வினா : இந்துக்களில் அநேகர் (ஏழுமலையான் கோவிலுள் திருப்பதியில் போய் மொட்டை அடித்துக்கொள்ளுகிறதும் மஞ்சள் ஆடை அணிந்துக் கொள்ளுகிறார்களே தமது பௌத்த மதத்திலும் அம்மாதரி மொட்டை