பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கன்மம் என்பதின் பொருள் செய்கை என்னப்படும். நற்கன்மத்தை நற்செய்கையென்றும், துற்கன்மத்தை துற்செய்கையென்றும், நல்வினைத் தீவினையென்றுங்கூறுவர். நல்வினையாம் நற்செய்கையின் பெருக்கத்தால் ஆசையென்னும் பற்றுக்களற்று பிறவியின் துக்கமொழிந்து பரிநிருவாணம் பெறுவர். தீவினையாம் தீயச்செய்கையின் பெருக்கத்தால் ஆசை யென்னும் பற்றுக்களதிகரித்து மாளாப்பிறவியிற் சுழன்று துக்கவிருத்தியால் தோன்றி தோன்றி மறைவர். இத்தகைய மறுப்பிறவியாம் தோற்றத்தில் தோன்றிய ஒருவன் தனது வளர்ச்சியில் கல்வியின் அவாவால் மேலுமேலும் வாசிப்பின் பற்றில் இருப்பானாயின் மறுமெயில் சிறுவயதிலேயே உயர்தரக் கல்வியில் தேறுவான். அதுபோல் மற்றொருவன் தனது வளர்ச்சியில் கைத்தொழில் விருத்தியில் மேலான வித்தைகளையுக்தியாலளாவி வித்தையின்விருத்திப்பற்றில் மடிந்தவன் மறுமெயில் சிறுவயதிலேயே சகலரும் ஆட்சரியப்படத்தக்க அரிய வித்தைகளைச் செய்வான். மற்றொருவன் தனது வளர்ச்சியில் குடி விபச்சார முதலிய துற்கிருத்தியப்பற்றில் அதிகரித்து மடிவானாயின் மறுமெயில் சிறுவயதிலேயே விபச்சாரம் குடி முதலிய துற்பழக்கம் பெருகி கேடுண்டழிவான். மற்றொருவன் தனது வளர்ச்சியில் கொள்ளல் கொடுத்தலென்னும் வியாபாரவிஷய விருத்திபற்றில் அதிகரித்து மடிந்து மறுமெயில் சகலரும் மெச்ச சிறுவயதிலேயே வியாபாரவிருத்தியிற் சீவிப்பான். மற்றொருவன் தனது வளர்ச்சியில் களவு, பொய், வஞ்சின முதலியச் செயல்விருத்தியிலிருந்து மடிந்து மறுமெய் அடைந்த சிறுவயதிலேயே களவு, பொய், வஞ்சகம் முதலியச் செயல்களில் தீவிரமுடையவனாகிக் காராக்கிரகம் பெறும் கீழ்மகனெனத் திரிவான். மற்றொருவன் தனது வளர்ச்சியில் ஒரு கற்சிலையையும் ஒரு உலோகச்சிலையையும் வைத்து அதின்பற்றே மிகுதியுடைவனாகி அதையே தெய்வமென்றுதுதித்து அஞ்ஞானத்தைப் பெருக்கி மடிவானாயின் மறுமெயில் சிறு வயதிலேயே மேலுமேலும்கற்சிலைகளையும், உலோகச்சிலைகளையும் வைத்துத் தன்வயிற்றை போஷிப்பதற்கே விதியின்றி அஞ்ஞானத்திற் பெருகி அல்லலடைந்து திரிவான். மற்றொருவன் தனது வளர்ச்சியில் அறிவை வளர்க்குங் கலை நூற்களை வாசிக்கவும் பெரியோர்களை சேவிக்கவும் அவர்களை அடுத்து சுபவிசாரஞ்செய்யவும் அவர்களை அடுத்து நன்மார்க்கத்தில் அடக்கவுமாகிய நற்கன்ம விருத்தியினின்று மடிந்து மறுமெயடைவானாயின் சிறுவயதிலே சுப இச்சை பெருகி சாந்தம், அன்பு, யீகையென்னும் பற்றற்றான் பற்றில் நிலைத்து இராகத், துவேஷ, மோகமென்னும் பற்றினையறுத்து சிறுவயதிலேயே வாலறிஙனென சகலருந் தொழூஉம் மேன்மகனென விளங்குவான். இதுவே தன்னுயிரைப்போல் மன்னுயிர்களைக் கார்க்கும் தண்மெயுடையவர்களாம் பௌத்த பிராமணர்களின் போதனையும் கன்மத்தால் தோன்றும் பிறவியின் தோற்றங்களும் நிகழ்ச்சிகளுமாகும்.

இத்தகையக் கன்மபாகத் தோற்றங்களையும் மறைவுகளையும் கண்டுணராத நூதனமாய சாதிபேதமுள்ளவர்களும், சமய பேதமுள்ளவர்களும் இப்பிறவியின் வகுப்பை எவ்வகையாக வகுத்து வைத்துக்கொண்டிருக்கின்றார் களென்னில், கன்மமென்னும் ஒன்றுண்டென ஒப்புக்கொண்டு உருவமில்லா பிரம்மா முகத்தில் பிராமணனும், புஜத்தில் க்ஷத்திரியனும், துடையில் வைசியனும், பாதத்தில் சூத்திரனும் பிறந்தார்களென்றும் வரைந்துவைத்துள்ளார் கள். இத்தகையக் கன்மத் தோற்றமானதுபிர்ம்ம கன்ம தோற்றமா, அன்றேல் மேல்தோற்றியுள்ள நால்வர் கன்மதோற்றமா. பிர்ம்ம கன்மதோற்றமாயின் சீவராசிகளின் கன்மத்தாலாய தோற்றமில்லையென்பது துணிபாம். சீவராசிகளாம் மேற்கூறிய நால்வர்களின் தோற்றத்திற்கு அவரவர்களின் கன்மங்களே ஆதாரமென்னில் பிரமமென்னும் உருவின் சிறப்பும் அதன் செயலும் ஒன்று மில்லாமற்போம். அத்தகைய பிரம்மத்திற்கே சிறப்பில்லாவிடத்து அதன் முகத்தில் தோன்றிய பிராமணனுக்கும் சிறப்பில்லையென்பது சொல்லாமலே விளங்கும்.

இத்தகைய பிரம்மா முகத்தில்தோன்றிய நால்வருள் பிரம்மா பாதத்தில் சூத்திரனாகப் பிறந்தவன் பிராமணனுக்கும், க்ஷத்திரியனுக்கும், வைசியனுக்கும்