பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தடவிவந்தால் மூலிகை வேகம் நீங்கி இரண மாறிப்போகுமாம். இவ்வியாகத்திற்கு வடமொழியில் அச்சுவமித யாகமென்றும், தென்மொழியில் கிருத யாகமென்றும் வழங்கிவந்தார்கள்.

மற்றும் சிலகாலங்களில் சுக்கிரக்கோள் பின்னிட்டு சூரியன் முன்னிட்டேகுங்கால் மழைகுன்றி பஞ்சமென்னும் தானியமும் நீருமின்றி பசிதாகத்தால் வருந்தும் விருத்தி 1. விஷரோக பீடிதங்களால் துன்புரும் விருத்தி, 2. ஒருதேசத்தைவிட்டு மறுதேசங்களுக்கு ஓடும்விருத்தி 3. பூமியிலுள்ள நீர் வரண்டு காயும் அனல் விருத்தி. 4. சருவசீவர்களுக்கும் அழுகை, பற்கடிப்பு விருத்தி. 5. ஆக பஞ்சமாம் - அஞ்சுந்தோன்றி குடிகள் தவிக்குங்காலத்தில் ஊருக்குமத்தியில் பெருத்த யாககுண்டம் வெட்டி நாணற்புல்லைக் கொட்டி மட்டிப்பால், கற்பூரம், குங்கி சுயம், கேந்திக் கல், நீறுப்பாகிய பஞ்சமழை முகில் ஓடதிகளைக் கொட்டி, யாக குண்டத்தைச் சுற்றி 32-அடி உயரத்திறை எழுப்பி அதன் 8 மூலைகளிலும் விவேகமிகுத்த சமணமுநிவர்கள் உட்கார்ந்து கொண்டு அக்கினிமூட்டி ஓமவிறகும், பசுவின் நெய்யுங் கொஞ்சங் கொஞ்சமாக விட்டு ஐந்திரநிலையில் நிற்குங்கால் யாகபுகை ஆகாயத்தை ஆளாவிய ஐந்து கடிகைக்குள் கருமுகில் தோன்றி பெருமழைப்பெய்து யாககுண்டம் நனைவதுடன் சருவசீவர்களுக்குமுள்ள அஞ்சு அவத்தையாம் பஞ்சம் நீங்கி சுகம்பெறுவார்களாம். இந்த யாகத்திற்கு வடமொழியில் பிரம்ம யாகமென்றும், இந்திர யாகமென்றும்; தென்மொழியில் ஓம யாகமென்றும் வழங்கிவந்தார்கள்.

இத்தகைய 4 யாகங்களுக்கு மட்டிலும் அரசர்களால் வாழைக்கனி, அவுல், கடலை, தேங்காய் இவைகளைக் கொண்டுவந்து ஏராளமாக வைத்திருந்து மேற்சொன்னபடி யாகங்கள் ஒவ்வொன்றும் முடிந்தவுடன் குடிகளுக்கு ஆனந்தமாகக் அவிற்பிரசாதங் கொடுத்துப் புசிக்கச்செய்வது வழக்கமாயிருந்ததாம்.

இத்தியாதி சத்தியதன்ம உபகாரச் செயல்கள் யாவும் வேஷ பிராமணர்களால் மாறுதலடைந்து புத்த சங்கங்களும், பௌத்தர்களும் சிதறி அசத்தியர்களின் ஜாலக்கூற்றுப் பெருகிவிட்டபடியால் யாகங்களின் செயலும் மிலேச்ச அதன்மத்தில் மாறுதல் அடைந்துவிட்டது. எவ்வகையில் என்பீரேல், இவ் வேஷ பிராமணர்களுக்கு புத்ததன்ம யாதார்த்த பிராமணர்கள் செய்துவந்த சீவகாருண்யச் செயல்களும் அதனந்தரார்த்தங்களுந் தெரியவேமாட்டாது. இவ்வகைத் தெரியாத வேஷ பிராமணர்களிடங் கல்வியற்றக் குடிகள் சென்று ஐயா! முன்பிருந்த மடத்துப் பெரியோர்கள் யாகஞ்செய்து எங்களுக்கெல்லோருக்கும் அவிற் பிரசாதங் கொடுப்பார்கள் அவ்வகையாக நீங்கள் ஒன்றையுங் கொடுப்பதைக் காணோமே என்று வினவுங்கால் வேஷபிராமணர்களுக்கோ யாகமென்பது யாதென்று தெரியாது. அவர்களை நாடிக்கேட்குங் குடிகளுக்கு அவுல், கடலை தேங்காய், வாழைப்பழம் இவைகளைத் தின்ற ருசிமட்டுந் தெரியுமேயன்றி யாகங்கள் இன்னதென்றும் அதன் செயல்கள் இன்னதென்றும் அவர்கள் அறியவேமாட்டார்கள்.

இவ்வேஷபிராமணர்களோ தங்களது நாட்டில் ஆட்டு மாமிஷம், மாட்டு மாமிஷங்களைத் தின்று வளர்ந்தவர்கள் புத்ததன்ம நாட்டைச் சார்ந்தபோது மாமிஷப் புசிப்புக்கேதும் இல்லாமல் திகைத்துநின்றவர்களுக்குத் திறைக்கட்டியாகம் வளர்த்தலென்று கேழ்விப்பட்டவுடன் அவர்களைக்கொண்டே கொழுத்தப் பசுக்களையும் கொழுத்த குதிரைகளையுங் கொண்டுவரச்செய்து குண்டம் வெட்டி, திறைகட்டி, பசுக்களையும் குதிரைகளையும் உயிருடன் நெருப்பிலிட்டுச் சுட்டுத்தின்பதுடன் அவுல், கடலை, தேங்காய், வாழை, பழம் முதலியவைகளையுங் கொண்டுவரச்செய்து சகலவற்றையும் தாங்களே வாரி மூட்டைக்கட்டிக்கொண்டு பசுவையும், குதிரையையும் சுட்டுத் தின்ற சாம்பலை வாரிக் கையிற்கொடுத்து இந்த சாம்பலை ஒவ்வொருவர் வீட்டிலும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுவீர்களானால் உங்களுக்கு எவ்வகை வியாதிகளும் அணுகாது நல்ல சம்பத்துள்ளவர்களாக வாழ்வீர்களென்று கூறியவுடன் யாகத்தின் பொருளறியா விவேகமற்றக் குடிகள் பசுமாடுகளையும்,