பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 149

குதிரைகளையும் இழந்ததுடன் வாழைப்பழம், தேங்காய், அவுல், கடலை இவைகள் ஒன்றேனும் பெறாது வெறுஞ் சாம்பலைப் பெற்று வெறுமனே வீடேகுவார்களாம்.

இத்தகையப் பேதைக்குடிகளை வஞ்சித்து ஆடுகளையும், மாடுகளையும், குதிரைகளையும், உயிருடன் சுட்டுத் தின்பதை உணர்ந்த புத்ததன்ம விவேகிகள் உயிர்வதைச் செய்யும் பாபிகளை அடித்துத் துரத்தியும் சீவகாருண்யத்தை விளக்கியும் நெருப்பிற் சுட்டுத்தின்னுந் கொறூரக்கொலையை அகற்றியும் வந்தார்களாம்.

ஈதன்றி ஆரிய வேஷப் பிராமணர்களின் சுகத்தையும் அதிகாரத்தையும் கண்டுவரும் ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிடசாதியென வகுக்கப்பெற்றோராகும் இத்தேசத்து சோம்பேறிகளும், வஞ்சகர்களும் பிராமண வேஷம் எடுத்துக்கொண்டு வஞ்சகமிகுத்தப் பொய்யர்களும், சோம்பேறிகளும் ஆனபோதினும் கொலையும் புலையுமற்றவர்களாக வாழ்ந்தவர்களாதலின் ஆரிய வேஷப்பிராமணர்கள் ஆடுமாடுகளை சுட்டுத் தின்னுங் கொலைபாதகத்துள் இவர்கள் சேராது இவர்களுக்குள் நூதனமாகத் தோன்றிய வேஷப் பிராமணர்கள் மிகுந்துவிட்டபடியால் ஆரிய வேஷப் பிராமணர் யாகம் யாகமென வழங்கி மாடுகளையுங் குதிரைகளையுஞ் சுட்டுத்தின்ற வழக்கத்தைப் பரவச்செய்தற்கு ஏதுவில்லாமல் போய்விட்டது. ஆதலின் மாடுகள் குதிரைகளைச் சுட்டுத்தின்னும் யாகம் ஏடுகளில் எழுதிவைத்திருந்த போதினும் செயலில் நிகழாதொழிந்தது. பௌத்தர்களின் யாகமோ மாமாத்திரர் யாககுண்ட புடத்திலும், நிமித்தகர் விவாக யாகபுடத்திலும், மற்றும் அக்கினிச்செயலிலும் உள்ளதை நாளது வரையிற் காணலாம்.

முன்கலை திவாகரம்

பதினெண் யாகவகைப் பெயர். / சோதிட்டோம மக்கினிட்டோம,
மத்தியக்கினிட்டோமம் வாசபேய / மத்திராத்திரஞ் சேமயாகங்காடகஞ்
சாதுர மாசியஞ் சவித்திரா மணியே / புண்டரீகஞ் சிவகாம மயேந்திர
மங்கிச சனேயி ராசசூய / மச்சுவமேதம் விச்சுவதித்து
நாமேதம் பிரமமேத மென்னப் / பதிநெட்டியாகப் பலப்பெயராமே.

இவற்றுள் அடங்கியுள்ள புண்டரீக யாகமென்பது தாமரைப் புட்பத்தை பஸ்பிக்கும் ஓர் புடவகையாகும். இதன் ரகசியந்தெரியாத வேஷ பிராமணர்கள் புண்டரீக யாகமென்னும் ஓர் அசுத்தச் செயலும் சகலரும் அருவெறுக்கக்கூடி யதுமா யவற்றைச் செய்திருக்கின்றார். அவற்றை நமது பத்திரிகையில் எழுதுவதால் பத்திரிகையும் அசுத்தமாமென்று எண்ணி அகற்றிவிட்டோம்.

குறுந்திரட்டு

புலையர்க்கூடி யாகமென்று பசுவுங் கன்றுஞ் சுட்டுப் புசித்தார்
வலையர்க்கூடி வன்னி வளர்த்து மச்சமட்டு மேதய முண்டார்
சிலையர்க்கூடி பரவைக ளெய்து செந்தீயிட்டு தின்று வளர்ந்தார்
கலையோர்க்கூடி கண்டு வகற்றி கருணாரம்பங் காட்டினரன்றே.

- 4:16; செப்டம்பர் 28, 1910 –


56. அங்கலயமும் இலிங்கமும்

வினா : ஆண்குறிபோலும், பெண்குறிபோலும் கல்லுகளிலடித்து அதன் மீது ஆமணக்கு நெய் வார்த்து ஜலங்கொட்டி புஷ்பமிட்டு இலிங்கபூஜை என செய்துவருகின்றார்களே அதன் பயன் யாது: அவ்வகையானச் செயல் பெளத்ததன்மத்தைத் தழுவியதாகுமா; ஆகுமாயின் “காமேசுமிச்சாசாறா” வென்னுஞ் சீலத்திற்கு மாறுபட்டு காமிகா அர்ச்சனை என்றும் கூறத்தகுமன்றோ. இவ்வர்ச்சனையால் மக்களுக்கு ஏதேனும் ஈடேற்றம் உண்டா,

பா. முநிவாமி ராஜு, பிரம்பூர்.


விடை : அதாவது பௌத்ததன்மத்தில் மனோவயிக்கியத்தையும், தேக ஐக்கியத்தையும் அங்க லிங்க அயிக்கியமென்றும், லய அங்கமென்றும் அங்கலயமென்றும் லிங்கமென்றும் வழங்கி வந்தார்கள். அத்தகைய வழக்கக்காலமோ வெனில் பகவன் பரிநிருவாணமடைந்தபின்னர் தேகத்தை