பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தகனஞ் செய்து அஸ்தியையும் சாம்பலையுங் கொண்டுபோய் ஏழரசர்கள் ஒவ்வோரிடங்களில் அடக்கஞ்செய்து மண்டப வியாரங்கள் கட்டியதுமன்றி அவ்வஸ்தியையும் சாம்பலையும் புதைத்தயிடக் குறிப்புத் தெரிந்துக்கொள்ளுவதற்காய் மரகதங்களினாலும் வைரங்களாலும் குழவிபோற் செய்து அவ்விடம் புதைத்து சித்தார்த்தியார் அங்கலய பீடமென்றும், லய அங்கபீடமென்றும் வழங்கி குறுக்கல் விகாரத்தால் லிங்கபீடமென வழங்கி வந்தார்கள்.

அதன்பின்னர் புத்தசங்கங்களிலுள்ள சமண முநிவர்கள் மனோலயத்தையே அங்கலிங்க ஐக்கியமெனவும் வழங்கிவந்தார்.

திருவள்ளுவ சாம்பவனார் ஞானவெட்டி

விரிவான துரியமெனு மூலவீட்டில் வேதமதுக்கெட்டாத
ரூபமாகி
கருவாகி தெவிட்டாத கனியுமாகி கதிராகி மதியாகி காற்றுமாகி
உருவாகி யுடலாகி வுயிருமாகி வொளியாகி வெளியாகி யுடலுக்குள்ளே
அருவாகி யருள்ஞான சொரூபியாகி அங்கமதி லிங்கமதா யமைந்தேனையே.

இதன் அந்தர் அங்கரகசியார்த்தம் ஞான சாதனர்களுக்கு விளங்குமேயன்றி அங்கலய சாதனமற்ற அஞ்ஞானிகளுக்கு விளங்கமாட்டாது. இத்தகையப் பேரானந்த ரகசியமொழியின் அந்தரார்த்தத்தை கல்வியற்றப் பெருங்குடிகளும் அறியமாட்டார்கள். அவர்களால் குருக்களென்று அழைக்கப்பெற்ற வேஷபிராமணர்களுக்கும் அவை தெரியமாட்டாது.

இத்தகையக் கல்வியற்றக் குடிகள் வேஷபிராமணர்களை அடுத்து அங்கலிங்க அயிக்கியமதம் அருள்புரிவேண்டுமென்று கேட்டுக்கொண்டதன் பேரில் அதனந்த ரார்த்தம் அறியா பொய்க்குருக்கள் ஆண்குறிபோலும், பெண்குறி போலும் கற்களால் செய்வித்து அதைப் பூசிக்கத்தக்கக் கட்டிடங் கட்டி அங்கமென்றால் தேகம், இலிங்கமென்றால் ஆண்குறி, அயிக்கியமென்றால் பெண்குறி. இவைதான் உலகசிருஷ்டிக்கு ஆதி. இதையே நீங்கள் பூசித்து எங்களுக்கு தட்சணை தாம்பூலம் அளிக்கவேண்டுமென்று கல்வியற்றக் குடிகளின் வார்த்தைகளைக் கொண்டே சீவன வழித் தேடிக்கொண்டார்கள்.

அங்கலிங்க அயிக்கியமென்பது ஐயிந்திரியம் வென்ற சமாதி சாதன மென்றுணராது தென்மேற்கு நாட்டில் ஆவிடையார் கோவிலென்று ஓர் கட்டிடங் கட்டி அவற்றுள் கல்லினால் ஆண்குறி பெண்குறி நாட்டியுள்ளதாகக் காவியங்களால் விளங்குகின்றது.

திருவள்ளுவ சாம்பவனார் ஞானவெட்டி

ஆவிடையார கோவிலிலே, யமைத்தகுறி ஆதரவாகவே சேர்ந்துமாதர்களினால்
மேவியதோர் நாதவிந்து, வெகுவிசித விற்பனையறியாவொரு கற்பனைசொல்வேன்
பாவிக ளிதை யறியார், கல்லுகள்தனில் பாவனை யொப்பாகவுமே தாபிதஞ்செய்தார்
ஆவியென்று மறியாமல், செலவழிய ஆத்தமலிங்கமதனைப் பார்த்துணராமல் (தந்தன)

இத்தகையாய்க் கல்வியற்ற பெருங்குடிகள் கேழ்க்கவும் பொய்க்குருக்கள் போதிக்கவுமாகிவிட்டது. இவ்விலிங்க பூசையைக் கண்டிக்க வைஷ்ணவர்கள் இலிங்கமதக் கண்டனமென ஓர் புத்தகம் எழுதியிருக்கின்றார்கள். அவற்றைக் காணின் பொய்க்குருக்களின் செயலும், அவர்களது போதனையும் பரக்கவிளங்கும்.

உளியிட்டக் கல்லுகள் சிலகால் வெய்யல்வேகத்தால் வெடித்துப் போகும் என்றெண்ணி சிலரூபத்தின் மீது ஆமணக்குநெய் தடவி நீர் கொட்டுவதாகும். - 4:17; அக்டோபர் 5, 1910 –

57. கற்பூரம் கொளுத்துதல்

வினா : நம் தேசத்தில் இறந்தவுடன் கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைக்கின்றார்களே அது என்ன காரணத்தினால்? - தன்மப்பிரியன், பம்பாய், விடை : அதாவது சிலகாலங்களுக்கு முன்பு தோன்றிய காளிகாதேவி கன்னகா பரமேஸ்வரி இவர்களுக்கு ஆடுமாடுகளை கொலைசெய்து பூசிப்பதுபோல் சாந்ததேவதையை பூசிப்போர் தேங்காயுடைக்கும் ஓர் வழக்கத்தை அநுசரித்து வந்தார்கள். பூர்வப் பலகாரம் அவுல், கடலை,