பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 175

என்னுஞ் செய்யுளாதாரத்துடன் தற்காலம் சைனா, ஜப்பான், பர்மா, சிலோன், ஆசாம், மங்கோலியா மற்றத் தேசங்களிலுள்ள தன்மசங்கங்களும் உலகிலுள்ள மநுகுலத்தோர் மொத்தத் தொகையில் அரையே அரைக்கால் பாகம் பெருந்தொகை பௌத்த கூட்டங்களிருக்குஞ் சிறப்பே போதுஞ்சான்றாம்.

உலகெங்குஞ் சென்று சங்கங்களை நாட்டி அறத்தை ஊட்டிய சங்கறர் காசிகங்கை கரை என்னும் பேரியாற்றங்கரையில் மார்கழி மாதம் கடை நாள் பௌர்ணமி திதி திருவாதிரை நட்சத்திரம் விடியற்காலம் துலாலக்கினத்தில் தனது உச்சியிலும் தேகத்திலும் பஞ்சவருண சோதி வாள்போன்று வீச பரிநிருவாணமுற்றார்.

வீரசோழியம்

இவ்வுலகுங் கீழுலகு மிசையுலகு மிருள் நீங்க
வெவ்வுலகுந் தொழுதேத்த வெழுந்த செஞ்சுடரென்ன.
போதிமேவினை பொய்மெ யகற்றினை
சோதிவானவர் தொழவெழுந் தருளினை
ஆதிநாத நீனடியினை பரவுதும்.
கூரார்வளையுகிர் வாளெ யிற்றுச் செங்கட்
கொலையுழுவை காய்பசியாற் கூர்ந்த வென்னோய் நீங்க
ஓராயிரம் கதிர்போல்வாள் விரிந்தமேனி
யுளம் விரும்பிச் சென்றாங் கியைந்தனை நீயென்றாற்
காரார் திறை முளைத்த செம்பவளமேவுங்
கடி முகழ் தன்சினைய காமரூ பூம் போதி
யேரார் முநிவரர் வானவர்தங் கோரவே
யெந்தாயரோ நின்னை யேந்தாதார் யாரே.

மணிமேகலை

காயங்கரை யெனும் பேரியாற் றடைகரை / மாயமின் மாதவன் றன்னடி பணிந்து
காசின் மாநகர் கடல்வயிறு புகாமல் / வாசவன் விழாக்கோல் மறவேனென்று,

விம்பாசாரன்

இறைமகற்காத னென்பானைந்திற் / குறைமிகு காலக் கூற்றங்கடிந்து
தக்கக்கடை நாட்டனுவாதிரையிற் / பக்கமங்கலம் பருமதகோலாய்
போதிநீழற் பொருந்திய புத்தேள் / சோதி பஞ்சகக் சூழொளியாகி
ஆனவைகறை யார்ப்ப வானவர் / போனக .... விழாக்கோள்.

இக்காலத்தையே சங்கறர் அந்தியகாலமென்றும் இக்காலத்தை அனுசரித்து ஆனந்த தன்மஞ்செய்வதை சங்கறர் அந்திய புண்ணியகாலமென்றும், போதிநாதனது பண்டிகை ஆதலின் போதிபண்டிகை என்றும், ஐயிந்திரியங் களை வென்ற புத்தரது உற்சாககாலமாதலின், இந்திரர் பொங்கல், இந்திரர் விழா, இந்திரர் விழாக்கோ லென்றும் பௌத்தமார்க்க அரசர்கள் வருடந் தோரும் மார்கழிமாதம் முதல் கடை இருபத்தி எட்டு நாள்வரையில் தங்கள் தேசங்களிலுள்ளக் குடிகளை வீடுவாசல் முதலியவைகளை சுத்தஞ் செய்து தோரண முதலியவைகளைக் கட்டுவித்து வீதிகள் முழுவதும் புதுமணற்பரப்பி வாழைக் கரும்பு முதலியவைகளை நட்டு தேசமுழுவதும் அலங்கரித்து கடைநாளிற் சோதியை வளர்த்தி தீபசாந்தி கொண்டாடி வந்தார்கள்.

மணிமேகலை

மேலோர் விழைய விழாக்கோ லெடுத்த / நாலேழ் நாளினு நன்கினி துறைகென
மன்னன் கரிகால் வளவ நீங்கிய நாள் / தோரண வீதியும் தோமறு தொட்டியும்
பூரணகும்பமும் பொலம் பாலிகைகளும் / பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்
காய்குலைக் குமுகும் வாழையும் வஞ்சியும் / பூக்கொடி வல்லியுங் கரும்பு நடு மின்
பத்திவேதிகை பசும்பொற்றூணத்து / முத்துத்தாமமு முறையொடு நாற்று மின்
விழவுமலி மூதூர் வீதியு மன்றமும் / பழமணல்பாற்று மின் புது மணல்பரப்புமின்
கதலிக் கொடியுங் காமனறு விவோதமும் / மதலை மாடமும் வாயிலுஞ் சேர்த்து மின்
நாவலோங்கிய மாபெருந்தீவினுட் / காவேற் றெய்வந்தேவர் கோற்கெடுத்த
தீபசாந்தி செய்தருணன்னாள்.

அதை அநுசரித்தே நாளதுவரையில் மார்கழி மாத முழுவதுங் கொண்டாடி வருவதைக் காணலாம். சங்கறர் அந்தியகாலமானவுடன் அவரது மறைவுக்காற்றாது சங்கத்தோர்கள் துக்கங்கொண்டாடியதுமன்றி வீடுகடோரு முள்ள தன்மப் பிரியப் பெண்களும் அழுது துக்கங்கொண்டாடினார்கள்.