பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 185

for the propagation of the Dharma preached by our Venerable Lord Buddha.

ESTIMATE OF BUILDING

GroundRs. 5,000
Lecture HallRs. 5,000
Place for VisitorsRs. 3,000

PanchalaRs. 2,000

Subscriptions may be sent to Mrs. Annie Besant, P.T.S., Adyar, who will forward them to the Bank of Madras for credit to our account.
PUNDIT C. IYOTHEE DOSS,
General Secretary, 5-6-1911
(From the Wesak Day, published by Sakya Buddhist Society, Madras)


83. ஆதி வேதம்
அறிவோம் நன்றாக குருவாழ்க குருவேத்துணை
பூர்வத்தமிழொளியாம்
புத்தரது ஆதிவேதம்

இஃது, பௌத்ததன்மப் பாலிப் பிரிதிகளைக்கொண்டும், தமிழ்ப் பிரிதிகளைக் கொண்டும், பரம்பரை சுருதிவாக்கியங்களைக் கொண்டும் சென்னை சாக்கைய பௌத்த சங்கஸ்தாபகரும் பொதுக்காரியதரிசியும் "தமிழன்' பத்திரிகையின் அதிபருமாகிய க.அயோத்திதாஸப் பண்டிதரால் எழுதி, மாரிகுப்பம், சாக்கைய பௌத்த சங்கத்து சபாநாயகர் ஆ.லு. முருகேசர் சாஸனதாயகா, சங்கத்தின் காரியதரிசி சி. குருசுவாமியார் சாஸனதாயகா, இவ்விருவர் பேருதவியால் சென்னை கௌதம அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது.

பௌத்த வருடம் 3398.இதன் விலை ரூபாய் - 3.50கிறிஸ்து வருடம் 1912.

பாயிரம்

சற்குருவே நம:
தாயுற மாட்டே தரணியென் றோம்புங்
கோயிறை தெய்வப் புலவர் கொண்டாடு
மாயிர நாமத் தாழியன் சரிதை
பாயிர மிங்குப் பகருவம் யாமே.

மணிமேகலை

இருள் பரந்து கிடந்த மலர்கலியுலகத்து, விரிகதிர்ச் செல்வன் தோன்றினனென்ன,
ஈரெண்ணூற்றோ டீரெட்டாண்டினில், பேரறிவாளன் தோன்றி
மகதனன் நாட்டுக் கொருபெருந் திலகமென் சாக்கையராளுந் தலைத்தார் வேந்தன்,
ஆக்கையுற்று உறுதித் தனனாங்கவன்றானென

எண்ணருஞ் சக்கரவாளமெங்கணும், அண்ணலறக்கதிர் விரிக்குங்காலை

பெருங்குறவஞ்சி - குலமுறை சிறப்பு

குலமுறையிற் கலிவாகு நிலவரை ஈதம்மே - நிலவரை யீதம்மே,
பலவறையிற் கணிதாதி பார்த்தறிந்தோனம்மே.
பார்த்தறிந்து சாக்கையெனும் பெயர் வாய்த்தோனம்மே பெயர் வாய்த்தோனம்மே,
மூர்த்தியவன் குலத்தோன்றல் வள்ளல்வாகம்மே.
வள்ளல்வா குள்வரிசை வாகுவல்லனம்மே - வாகுவல்லனம்மே,
 துள்ளுதார்வேந்தன் குல சோகுவா கம்மே.
சோகுவாகின் சுகத்தை சொல்லொணாதம்மே - சொல்லொணாதம்மே,
வாகுமன்னரையடக்கு வல்லவன் காணம்மே.
வல்லவன் குலத்திலக மா மதிவாகம்மே - மா மதிவாகம்மே,
சொல்லொணா சுந்திரவாகவன் தோன்றலம்மே.
அவன் மகவை அங்கணவா கதிவல்லனம்மே - அதிவல்லனம்மே,
புவன மன்னவர் போற்றும் புரவலனெனம்மே.
புரவலன்றன் குலமரபோன் குலவாகு அம்மே - குலவாகு அம்மே,
திர மரபோன் தோன்றலதி இட்சுவாகம்மே.
இட்சுவாகின் சுகத்தை எண்ணொண்ணாதம்மே - எண்ணொண்ணா தம்மே,