பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 189


விம்பாசார அரயன் ஆளுகைக்குட்பட்ட ஓர் மலையில் தான் போதித்துவரும் நீதிமொழிகளை தசபாரமிதையாய் வரைந்து வைத்ததுமன்றி சகடபாஷையை பாணினியாருக்கும், திராவிட பாஷையை அகத்தியருக்குங் கற்பித்து தனது மெய்யறத்தைப் பரவச்செய்துவருங்கால், மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பத்தின் பயனாம் வீடுபேற்றை நிருவாணமென்னும் நான்காம்பேதவாக்கியமெனச்சேர்த்து அவற்றிருக்கு அதற்வணமென்னும் பெயரை அளித்து வழங்கினும் அதனந் தரார்த்தம் சங்கத்தவர்களுக்கு சரிவர விளங்காதது கண்ட பகவன் கர்ம்ம பாகையாம் இருக்கினது பேத வாக்கியத்தை விளக்குமாறு எட்டு உபநிட்சை யார்த்த உபநிடதங்களும், அர்த்த பாகையாம் யசுரினது பேதவாக்கியத்தை விளக்குமாறு எட்டு உபநிட்சையார்த்த உபநிடதங்களும் ஞானபாகையாம் சாமபேதவாக்கியத்தை விளக்குமாறு எட்டு உபநிட்சையார்த்த உபநிடதங்களும், நிருவாண பாகையாம் அதர்வண பேதவாக்கியத்தை விளக்குமாறு எட்டு உபநிட்சையார்த்த உபநிடதங்களும், ஆய முப்பத்திரண்டு உபநிட்சை யார்த்தங்களை வகுத்து நான்கு பேதவாக்கியங்களின் மறைப்பொருள் நன்கு விளங்குமாறு சாதுசங்க சமணமுநிவர்களுக்களித்து தென்புலத்தராகி அறஹத்து நிலைபெறும் ஆனந்தவழியில் விடுத்தார்.

வீரசோழியம்

திடமுடைய மும்மொழியாந் திரிபிடக நிறைவிற்காய்
வடமொழியை பாணினுக்கு வகுத்தருளியதற்கிணையாய்த்
தொடர்புடைய தென்மொழியை யுலகெலாந் தொழுதேத்த
குடமுனிக்கு வற்புறுத்தார் கொல்லாற்று பாகர்
இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவரியல் வாய்ப்ப
இரு மொழியும் வழி படுத்தார் முநிவேந்தரிசை பரப்பும்
இரு மொழியும் மான்றவரே தழீஇனா ரென்றாலிங்
குரு மொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ

முன்கலை திவாகரம்

வடநூற்கரசன் றென்தமிழ்க் கவிஞன் / கவியரங்கேற்று முபயகவிப்புலவன்
செறிகுணத்தம் பற்கிழவோன் சேந்த / னறிவு கரியாகத் தெரி சொற்றிவாகரம்

சிலப்பதிகாரம்

தண்டமிழாசான் சாத்தனஃதுரைக்கும்

நன்னூல் விளக்கம்

வினையினீங்கி விளங்கிய வறிவின் / முனைவன் கண்டது முதநூலாகும்

முன்கலை திவாகரம்

ஆதி நூலென்பது வேதநூற் பெயரே / உபநிடதம் வேதத்தினுட் பொருள் நுட்பம்.

உபநிடத சுருக்கம்

இருளகற்று நால் வேதத் துபநிடத சுருக்கமென - வெங்கோன்சொன்ன
பொருளதனை நெஞ்சகத்தே சௌபாக்கிய - குருவென்னும் பொருளினோடு
மருளகற்றும் படி யழுத்தித் தமிழ்போலு - மதனை யொருவழி யெண்ணான் கா
யருளகத்திலிருந்து ரைத்த வதிசயமே - யதிசய மற்றறிகிலேனே.

முன்பு கூறியுள்ள திரிபேத வாக்கியங்களில் ஒரு வாக்கியத்தை சரிவர பின்பற்றினும் அவன் கடைத்தேறி வீடுபேறாம் நிருவாணமடைவது அனுபவக் காட்சியாயிருந்தது. இத்தகைய சத்திய பேதவாக்கியங்களும் அவ்வாக்கியங்களின் அந்தரார்த்தங்களும் அதன் தன்மங்களும் மறைந்து பௌத்தகுடிகள் அனுசரித்துவந்த பஞ்சசீல பாக்கியங்களற்று பொய்க்குருக்களாம் பொய்ப் பிராமண வேஷதாரிகளால் பஞ்சபாதகங்கள் பெருகி பொய்வேதங்களும் பொய் வேதாந்தங்களும் பொய்ப் புராணங்களுந் தோன்றி மனுக்களுக்குள்ளே மனுக்களென்னுங் கொள்கை அற்று தங்களது சுயப்பிரயோசனத்திற்காக இத்தேசத்தில் எக்காலும் இல்லாக் கீழ்ச்சாதி மேற்சாதி என்னும் பொய்க் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி பௌத்தர்களால் தொழில்களுக்கென்று வகுத்திருந்தப்பெயர்களை சாதிப் பெயர்களென மாற்றி ஒற்றுமெயில் வாழ்ந்திருந்த மனுமக்களின் வாழ்க்கைகளைக் கெடுத்து அறப்பள்ளிகளில் விருத்திப்பெற்றுவந்த கல்வியையும் கைத்தொழில்களையுங் கெடுத்து அறப்பள்ளி களையும் அழித்து பாழ்படுத்தி தங்கள் சுயநலங்களைமட்டிலுந்