பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் /197

வீரசோழியம்

மீதியல் கருடனை விடவர வொடு பகை, / விதிமுறை கெடவறம் வெளியுறவருளினை.

கௌதம சிறுவரிடம் அடைக்கலம் புகுந்தப் புறாவை அன்புடன் ஆதரிக்குங்கால் குறுபருந்தும் மடியில் வந்து உட்கார்ந்து தன் பசியைத் தணிக்கத் தாவிற்று.

அதை உணர்ந்த சிறுவர்க்கு அடைக்கலம் புகுந்த புறாவையும் கார்க்கவேண்டும், பசிகொண்ட பருந்தையும் பார்க்கவேண்டிய கருணையால் திகைத்து பருந்தின் முதுகைத் தடவி, நீ நாடி துறத்திய புறாவின் மாமிஷத்திற்குத் தகுந்த எடை மாமிஷம் என் தேகத்திற் தின்னலாமென்று முன்கை கெண்டை யை நீட்டினார். அவர் கருணையின் விசிரிம்பம் பருந்தினும் பரவி சிறுவன் தன்னைப் பற்றிக்கொண்டும் யாதொரு இம்சையுஞ் செய்யாமல் தன் மாமிஷத் தைக் கொடுக்க ஆரம்பித்தவுடன் பருந்தும் பரிதாபத்தால் பரந்துப் போய்விட்டது.

இவ்விருத்தாந்தங்களைக் கண்ணுற்ற மக்கள் அரசனிடஞ் சென்று கௌதமரைப் புறா அடைக்கலம் புகுந்ததும், அதைத்துறத்தி வந்த பருந்து பசியால் வருந்தியதும், சிறுவர் தன்மாமிஷத்தைக் கொடுத்ததும், அதைப் புசியாமல் பருந்து போய்விட்டதும் ஆகிய செயல்களைத் தெரிவித்தார்கள்.

அவைகளை உணர்ந்த அரசன் தன் பிள்ளையின் கருணாநிதியை உணர்ந்து கௌதமரை அணுகி குழந்தாய் என்ன செய்கின்றாயென்றான்.

என்னருமெய் தந்தையே, புறாவை ஆதரிக்கின்றேன் என்றார். அதைக்கேட்ட அரசன் புன்னகைக்கொண்டு சிறுவருக்குக் கைலாகுக் கொடுத்து அழைத்துப்போய் வயல்வெளிகளிலுள்ள செந்துக்களின் செய்கைகளையும், தோப்புகளிலுள்ள செந்துக்களின் செய்கைகளையும் சுட்டிக்காண்பித்தான். அதாவது, புழுக்கீடாதிகளை எறும்புகள் தின்பதும், எறும்புகளைப் பல்லிகள் தின்பதும், மட்சங்களை மட்சிகள் தின்பதும், பட்சிகளை நரிகள் தின்பதுமாகிய செயல்களைக் காண்பித்து குழந்தாய், உலகிற் தோன்றியுள்ள சீவசெந்துக்கள் ஒன்றை ஒன்றுத் தின்று சீவிப்பது இயல்பாகையால் நீ அவைகளைக் கருணைக்கொண்டு காப்பாற்ற முயல்வதில் யாது பயன் என்றான்.

உடனே கௌதமர் பிதாவைநோக்கி தந்தையே, புழுக்களை எறும்புகள் பிடித்துத்தின்னுங்கால் புழுக்கள் துடித்து வாதைப்படுவதைக் காண்கின்றேன். அதனால் என் மனங்கலங்குகிறதென்றார்.

அதற்கு அரசன் குழந்தாய், உன் மனங் கலங்குவதால் யாது பலன். சீவராசிகளில் உள்ள சுபாவத்தை மாற்றக்கூடுமோ என்றான்.

அதற்கு சிறுவர் தந்தையே, புழுக்கீடாதிகள் தாபரவர்க்கங்களைத் தின்று சீவிப்பதைக் காண்கின்றேன். அதுபோல் மற்ற சீவராசிகள் தாபர வர்க்கங்களாகும் இலை, சருகு, காய்க்கனி, கிழங்கு முதலிய வஸ்துக்களைப் புசித்து சீவிக்கலாகாதோ என்றார்.

மாமிஷத்தைப்பெற்ற தேகங்கள் மாமிஷத்தைப்புசித்தால் அவைகளுக்கு சத்துவம் உண்டாகுமேயன்றி தாபரவர்க்கங்களைப் புசித்தால் சத்துவமுண்டா காது மைந்தனே என்றான்.

தாபரவர்க்கங்களைப் புசிக்குங் கரடிகளுக்கும், யானைகளுக்கும், குதிரைகளுக்கும், ஒட்டகங்களுக்கும் சத்துவ மில்லையோ என்றான்.

மைந்தன் வினவிய வினாக்களுக்கு மாறுத்திரமளிக்க இயலாது மார்புடனணைத்து முத்தமிட்டு குழந்தாய், நீ சீவராசிகளின் சுபாசுபங்களைக் கண்டு களித்தது போதும் அரண்மனைச் சேரலாம் என்றழைத்து வருங்கால் அரச வம்மிஷ சிறுவரில் ஒருவன் ஆகாயத்திற் பரக்கும் புறாவை அம்பினால் எய்யவும் அஃது கௌதமச் சிறுவர்முன் வந்துவிழவும் அவர் அதைத் தாவி எடுத்து மார்புடன் அணைத்து அதனுடலில் தைத்திருந்த அம்பைப் பிடுங்கியவுடன் இரத்தஞ் சொரிவதைக்கண்டு பதரி உதிரத்தை இருகரத்தால் துடைத்து ஆதரிக்குங்கால் அப்புறாவை அம்பினால் எய்தச்சிறுவனும் அருகில் வந்து புறாவைக் கேட்டான். அவனைக் கண்ட கௌதமச் சிறுவர் புறா உடலில் தைத்திருந்த அம்பை எடுத்து அவன் உள்ளங்கையில் ஊன்றி உணர்ச்சி