பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அவலோகிதா, எனது நேயர் மனைவியற்று ஒருமெயுற்று வியாதியற்றிருக்கின்றார். யானோ மாறா மனைவிகளைக்கொண்டு தீராப்பிணிகளுங்கண்டு தவிக்கின்றேன் என்றான்.

பெரியோய், தமக்குத் தோன்றியுள்ள பிணிகள் தம்மால் தோன்றியதா தானே தோன்றியதா என்றார்.

அவலோகிதா, என்னனுபவச் செயலால் இப்பிணிகள் யாவும் என்னால் தோன்றியதன்றி தானே தோற்றியதல்லவென்று உறுதியாகக் கூறுவேனென்றான்.

பெரியோய், உம்மால் தோற்றியதற்கு ஆதாரமென்னை என்றார்.

அவலோகிதா, யான் மாறிமாறி செய்துகொண்ட விவாக சங்கமச் செயல்களால் காலத்திற்குக்காலந் தோன்றிய பிணிகளின் உற்பவத்தைக் கொண்டும் என் மீறிய சேர்க்கைச் செயல்களைக்கொண்டு இப்பிணிகளின் உற்பவங்களுக்கு நானே காரணமென்றேன் என்றான்.

பெரியோய், உம்மால் தோன்றியப் பிணிகளின் உற்பவம் உணர்ந்தும் அஃது தோன்றாமல் கார்த்துக்கொள்ளாத காரணமென்னை என்றார்.

அவலோகிதா, அதி மோக இச்சையே அதற்குக் காரணமென்றான்.

பெரியோய், தாங்கள் மோக இச்சையை அதிகரிக்கச் செய்துகொண்டபடியால் பிணி அதிகரித்துப் பீடிக்கப்படுகின்றீர். தமதருகிருக்கும் பெரியோர் மோக இச்சையை அதிகரிக்கவிடாமல் கார்த்துக்கொண்டபடியால் பிணியற்று சுகித்திருக்கின்றாரல்லவா என்றார்.

அவலோகிதா, எங்களுக்குரியச் செயல்களே எங்கள் அனுபவத்தில் விளங்குகிறதே என்றான்.

சக்கிரவர்த்தித் திருமகன் மற்றும் பிறந்த முதல் பிணி அறியேனென்ற பெரியோரை நோக்கி ஐயன்மின், தமது மனையாள் இறந்தபின் மறு மனையாளைத் தேடாதக் காரணமென்னை என்றார்.

அவலோகிதா, மடிந்த மனைவியின் குணமும், வடிவும், மிருதுவான வார்த்தையும் மற்றப் பெண்களிடம் காணாமெயே காரணமென்றான்.

அதனைக்கேட்ட தம்மராசன் காரணத்திற்குத் தக்கக் காரியங்கள், ஏதுக்குத்தக்க நிகழ்ச்சியாய் விளங்குவதை முற்றும் அறியவேண்டுமென்று வெளியேறுங்கால் பெரியோர்கள் வணங்கி அவலோகிதா, தமது சித்திர மாளிகையின் முன்பு இரத, கஜ, துரக பதாதிகள் யாவும் தமது ஏவலுக்கு எதிர்பார்த்திருக்க செந்தாமரைப்பாதம் புழுதியில் பட நடப்பதைக் காண என்னக் கொடுமெய் செய்தோம் இறைவனே என்று இறைஞ்சி விம்பாசாரன் பரிகளிலேனும் ஏறிச்செல்ல வேண்டுமென்று வருந்தினார்கள்.

ஒடுக்கத்திற்கு ஓடேந்தி விசாரிணையில் வெளியேறிய எமக்குப் பரியும் பளுவாம் என்றோதி விம்பாசாரன் நகரங் கடந்து காடுகளுள் நுழைந்து ஓர் மலையடிவாரத்தில் வருங்கால் அரவங்காட்டாது அடிவாரத்து ஒளிந்திருந்து வழிப்போக்கரை அடித்துப் பரிக்கும் அரக்கர்கள் ஐவர் அப்பனை வழிமறித்து அவர் முகத்தைக்கண்டு தங்கள் கொறூரச்செயல்களைத் தவிர்த்தும் அரசருக்குள் ஈகையில் மிகுத்தவராதலின் தியாகராயர் என்றும், தனத்தின் மிகுதியால் செல்வராயர் என்போர் செவியிலிருந்த பொற்குண்டலத்தைக் கழற்றிக்கொண்டு செப்புக் குண்டலத்தை செவியில் அணிந்துவிட்டுப் போய்விட்டார்கள்.

நிகழ்காலத்திரங்கல்

ஒப்பற்ற குண்டலத்தை ஊழரக்கர் வவ்வி / செப்புகுண்டலமிட்ட செய்தி அதிசயமே.

அசோதரை நெஞ்சுவிடுதூது

காதிணையிற்பூண்ட கனகசெப்புக் குண்டலங்க / டீதறவே காட்டும் இருதிண்புயமுமோதவிட.

தன்மராயன் தன் செவியிலிருந்து அரக்கர்கள் கழட்டிக்கொண்டது பொற்குண்டலமென்றும், அவர்களணிந்தது செப்புக்குண்டலம் என்றுங் கருதாது பின்சென்று பார்த்தபோது மறைந்துவிட்டார்கள். மற்றும் புறங்களில் பார்க்குங்கால் அரக்கர்களால் பொருட்களை அபகரித்துக்கொண்டு அடித்துக் கொன்றுப் போட்டுள்ளப் பிணங்களே மிக்கக் காணப்பட்டது. அவைகளைக்கண்ட சித்தார்த்தர் மனங்குழைந்து உயிரைவதைத்து பொருள்