பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 233

பாபஞ்செய்யாதிருங்கள், நன்மெய்க் கடைபிடியுங்கள்.
உங்கள் இதயத்தை சுத்தி செய்யுங்கோள் என்பதே.

பின்கலை நிகண்டு

ஆதி நூலெழுதாக்கேள்வி யாரணமொத்துச்சாகை
யேதமில் சுருதி தன்னோடிருக்கிவை ஏழும் வேதம்
வேதநூற் பொருளினாமம் விதித்திடு ஞானபாசை
யாதியாங் கருமபாகை யருத்தபாகையுமா மென்ப.
மெய்தெரிகாரணந்தான் வேதத்தின் ஞானபாகை
யுய்யுமெய் யறமுறைக்கு முற்ற நல்லர்த்தபாகை
துய்ய நற் செயலைப்பற்றல் சுத்தநற் கருமபாகை
வெய்யபௌ டிகமேயாதி விரியுப நிடதமாகும்.
ஏமமா மிரண்டாம் வேதமிசை தயித்திரியத்தோடு
தோமிலா யசுவாமென்று சொல்லுவர் நீதி நூலோர்
சாமமேமூன்றாம் வேதஞ் சாற்றும் பேரின்பப்பேற்றை
வாமமுன் மொழியொன் றில்லா அதர்வண வேதமாமே.
தந்துரை புனைந்துரைத்தல் சார்ந்தபாயிரத் தினோடு
முந்திய பதிகமே நூன் முகவுரை முப்பேராகும்
அந்தமா மாகமத்தோர் யாரிடம் பிடகமற்றுந்
தந்திரம் பனுவலோடு சமயம் சூத்திரமு நூற்பேர்.

முன்கலை திவாகரம்

உ.பநிடதம் வேதத்தின், உட்பொருள் நுட்பம்.

ஆதிபேத வாக்கியம் கன்மபாகை இதன் காரணம்; பாபஞ்செய்யாதிருத்தல் காரியம் மெய்ப்பொருளறிதல் இதன் பெயர். பொருட்பால் பௌடிகம் இருக்கென்று கூறப்படும். இரண்டாம் பேதவாக்கியம், அர்த்தபாகை இதன் காரணம் நன்மெய் கடைபிடித்தல் காரியம் மெய்யற உணர்ச்சி. இதன் பெயர் அறத்துப்பால், இயமம், தைத்தரியமென்னப்படும். மூன்றாம் பேதவாக்கியம், ஞானபாகை இதன் காரணம் இதயசுத்திசெய்தல் காரியம் மெய்யின்ப மாம் பேரின்ப உணர்ச்சி... இதன் பெயர் காமப்பால் சாமமென்னப்படும். பேதவாச்கியங்கள் மூன்றேயன்றி நான்காவது பேதவாக்கியமில்லை. ஒரு பொருள் ஏகமென்னும் வீட்டுப்பேரை குறிக்கும் நிருவாணமாம். பேரின்ப நிலையை நான்காவது பேதமெனக் கூறிய போதிலும் மொழிக்குமொழி ருசிக்கும் மும்மொழியாம் மூன்று பேதவாக்கியங்களன்றி நான்காவது பேதவாக்கியங் கிடையா. அறம் பொருள் இன்பத்திற்கு ஆதாரமாம் வீடுபேற்றை அவனவன் உணர்ந்து பேரின்பஞ் சுகிக்க வேண்டியவனாதலின் அதன் பெயர் அதர்வண மென்று கூறிவிட்டார்கள். ஒன்றென்னும் வீடுபேற்றை அடைதற்கு மும்மொழிகளாம் மூன்றுவாக்கியங்களும் மாறுபொருளால் நான்கு பேதமாயிருந்தது கொண்டு வடமொழியில் பேதமென்றும், தென்மொழியில் வேதமென்றுங் கூறினார்கள். மூன்று பேதவாக்கியங்களும் வீடும் விளங்குதற்கு வாக்கியமொன்றுக்கு எட்டு உபநிட்சயதார்த்தங்களாக நான்கு வாக்கியங்களுக்கும் முப்பத்திரண்டு கலையாம் உபநிடதங்களை விளக்கினார்.

பாபமென்பதெவை

உபநிடதமென்னும் உபநிட்சயார்த்த முதலெட்டு அருங்கலை செப்பு - காமபாகை அஷ்டகம் முதல்வேதவாக்கியம். பாபஞ் செய்யாதிருத்தல். 1.சீவர்களவத்தைச் செய்தொழில் யாவும், பாவமஃதென்றேயறி. 2. ஏனையோர் பொருளை எடுத்து மகிழ்தல், ஊனமுப்பாவமதாம். 3. உள்ளத்தீங்கை யுளத்தே நிறப்பல், கள்ளப் பாவமதாம். 4. அன்னியர்தார வாசை பெருக்கம், பின்னிய பாபப் புணை. 5. புலை யுனிச்சைப் பேணி வகுத்தல், கொலையாம் பாபக்குழி. 6. கண்ணியருள்ளங் கலங்கக்கூறல், பண்ணிய பாவமுதல். 7. நெஞ்ச மொளித்த வஞ்சம் யாவும், புஞ்செய்ப் பாவப்புனல். 8. அறிவை மயக்கி யாருயிர் வதைத்தல், நெறியை அகற்றும் பாவம்.

1.அன்னியப் பிராணிகளின்மீது கோபங்கொண்டு துன்பஞ்செய்தல் பாபம். 2. அன்னியர் பொருளை அவர்கள் அனுமதியின்றி அபகரித்தல் பாபம். 3.அன்னியரைக் கெடுக்கவேண்டுமென்று தீங்குநினைத்தல் பாபம். 4. அன்னியர்