பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயம் / 15

இழுக்க உலகிலுள்ள சீவராசிகளை ஈடேற்றவேண்டும் என்னும் காருண்யக்கயிறு ஒருபக்கம் இழுக்க, திடங்கொண்டு உலகிலுள்ள சீவராசிகளின் ஈடேற்றமே பெரிதென்றெண்ணி வெளிவந்து சன்னாவென்னும் சாரதிமூலமாகக் குதிரையைக்கொண்டு வரச்செய்து அதின் பேரிலேறிக் கொண்டுபோய் ஓரிடத்தில் இறங்கி தன்னுடைய ஆபரணங்களெல்லாவற்றையும் கழட்டி சாரதியிடங்கொடுத்து குதிரையைக் கொண்டுபோய் அரண்மனையில் சேர்த்துவிட்டு என் பிரிவையுஞ் சொல்லிவிடுமென்று கூறி அனுப்பிவிட்டார்.

இதை பூர்வ சரித்திரங்களில் “பெருந்துறவென்றும், மகாராஜ துறவென்றும் எழுதப்பட்டிருக்கிறது.

சித்தார்த்தர் குதிரையை அனுப்பிவிட்டு காடுமலை முதலிய இடங்களில் பாதசாரியாக நடந்து காலபுசிப்புகள் தவரி பல இடங்களிலுஞ் சென்று இரந்துண்டு துக்கநிவர்த்திக்கான வழி புலப்படாமல், "புத்தகாயா" என்னும் பட்டினத்தில் சேர்ந்து மராமரம், கல்லாலமரம், அசோகுமரம், பிண்டிமரம் போதிமரமென்று வழங்கும் அரசமரத்தடியில் உட்கார்ந்து, தன்னிற்றானே. சிந்தித்து துக்கத்திற்கு எதிரிடையான சுகவழியைக் கண்டுபிடித்தவுடன் மன்மதன் என்னும் காமத்தையும் காலனென்னும் மரணத்தையும் ஜெயித்து முதலாவது அவ்விடம் தன்னை அடுத்த மாணாக்கர்கள் ஐந்து பேருக்குச் சுகவழியை (சில வரிகள் தெளிவல்லை )

"முடிவில் அதே நித்திரையில் மறைந்துபோகின்றான்.

"இவ்வகையானக்காட்சிகளை பொய் என்றும் மாய்கை என்றும் சொல்லப்படும்.

"மாய்கையினின்று நீங்காதவன் மாமிஷ பட்சணத்தை வெறுத்தாலும் நிருவாணமாகச் சென்றாலும், மொட்டையடித்துக் கொண்டாலும், சடைதரித்துக் கொண்டாலும், கந்தை வஸ்திரம் அணிந்தாலும், சாம்பலைபூசிக்கொண்டாலும், அக்கினி தேவனுக்கு பலிகொடுத்தாலும், பரிசுத்தவானாகமாட்டான்."

"மாய்கையினின்று நீங்காதவன், வேதங்களை ஓதினாலும், நெருப்பில் குளித்தாலும், நீரில் மூழ்கினாலும், அனேகக்கொடிய தவங்களைச் செய்தாலும், பரிசுத்தவனாகமாட்டான்."

“பொருளாசை, கோபம், கள்ளுண்ணல், முறட்டுத்தனம், பிடிவாதம், வஞ்சகம், பொறாமை, தற்புகழ்ச்சி, புறங்கூறல், ஆணவம், கெடுமதி, இவைகள் தான் ஒருவனை அசுத்தமாக்கும்."

"இவைகளை நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள் உசாவி உலகத்தில் அநுசரிக்கவேண்டியவைகள் பத்தும், நீக்கவேண்டியவைகள் பத்துமாம்."

"அதாவது அருள், அவாவின்மை, தன்னையறிதல் இம்மூன்றையும் மனத்தினால் அநுசரிக்கவேண்டியது."

"இனியவைகூறல், உண்மெய்கூறல், பயனுள கூறல், அறங் கூறல் இந்நான்கையும், நாவினால் அநுசரிக்கவேண்டியது வணக்கம், ஈகை, தவநிலை, இம்மூன்றையும் தேகத்தால் அநுசரிக்கவேண்டியது. நீக்கவேண்டியவைகள், பத்தாவன, தீயசிந்தை, பேராசை, கோபம், இம்மூன்றையும் மனத்திலிருந்து நீக்கவேண்டியது. கடுஞ்சொல், பயனிலாச்சொல், பொய்ச்சொல், கோட்சொல் இந்நான்கையும் நாவிலிருந்து நீக்கவேண்டியது.

களவு, கொலை, பயனிலாச்செயல் இம்மூன்றையும் தேகத்திலிருந்து நீக்கவேண்டியது.

இவ்வகையாக "மனதாற்செய்யும் துற்செய்கைகள் தேகத்தைப்பற்றிக் கொண்டும், தேகத்தாற் செய்யும் துற்செய்கைகள் மனதைப்பற்றிக்கொண்டும் துக்கவிருத்தியை அதிகரிக்கச்செய்து அநித்தியமாகிய மரணத்திற்குக்கொண்டு போகும் வழியைத்திறந்து விடுவதுமல்லாமல் பிறவிக்கும் ஓர் வித்தாயிருக்கின்றது."

"மனதாற்செய்யும் நற்செய்கைகள் தேகத்தைப்பற்றிக்கொண்டும், தேகத்தாற் செய்யும் நற்செய்கைகள் மனதைப்பற்றிக்கொண்டும் ஒன்றுக்கொன்று கலந்து அன்பையும் ஆறுதலையும் பெருக்கி மெய்யாகிய நித்தியத்தின் வழியைத் திறந்து விடுவதுமல்லாமல் பிறவி என்னும் ஓர் வித்தையும் அழித்து விடுகின்றது.